தோட்டம் குறித்த சிந்தனையில் மூழ்கிப்போகிறேன்
பூக்கள் குறித்த கவிதைகளுடன்
உடன் வருகிறான் ஒருவன்
காம்பின் காயங்களோடு
தீய்ந்து நிற்கிறேன்.
திடுக்கிட்டுப் போனவன்
கவிதைகளைக் கொளுத்திப்
பூக்களை விடுதலை செய்கிறான்
தீய்ந்த கவிதை நெடியோடு
பூக்கள் நிலம் சேர்ந்து
மரணித்துக்கிடக்கின்றன.
மனித இயலாமை குறித்துத்
தட்டுப்படுகின்றன சோகவிளிம்புகள்.

- மகிழ்நன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.