எனது கோபம்

உனக்குப் பொருந்திப் போவதில்

பெருமையென்ன இருக்கிறது...

 

நான் நிஜம்

நீ நிழல்...!

 

எனது தாகம்

உனக்கு உடனிசைவாவதில்

உண்மையென்ன இருக்கிறது

நான் தண்ணீர்

நீ சுனை...!

 

எனது கனவு

உனக்கு இரவுகளாவதில்

இன்பமென்ன இருக்கிறது...!

நான் இரவு

நீ நிலவு...!

 

எனது நினைவுகள்

உனக்கு சுவர்க்கங்களாவதில்

சுகமென்ன இருக்கிறது...!

 

நான் மகாதவம்

நீ அழகிய தேவதை...!

 

இன்னுமென்ன

இது போதும் நாம் வாழ...!

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.