1
யாருமில்லாமல் ஆடியது
ஊஞ்சல்
கவனிக்கவில்லை
காற்று அமர்ந்திருந்ததை
2
வினாடிகள் பறந்தன
சிறகுகளின்றி;
பறவைகள் பறந்தன
வினாடிகளின்றி...
3
கஞ்சியைக்
குடிக்க முடியவில்லை
பசிமயக்கம்!
4
அலகுதான்
அளவுதான்
அழகுதான்
1
யாருமில்லாமல் ஆடியது
ஊஞ்சல்
கவனிக்கவில்லை
காற்று அமர்ந்திருந்ததை
2
வினாடிகள் பறந்தன
சிறகுகளின்றி;
பறவைகள் பறந்தன
வினாடிகளின்றி...
3
கஞ்சியைக்
குடிக்க முடியவில்லை
பசிமயக்கம்!
4
அலகுதான்
அளவுதான்
அழகுதான்
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.