கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

Homosexual என்பதற்கு வழக்கமாக எல்லா ஊடகங்களும் ஓரினச் சேர்க்கைஎன்கிற சொல்லாடலையே பயன்படுத்து கின்றன. எனக்கு அதில் உடன்பாடில்லாத நிலையிலேயே ‘Homosexual’ என்பதற்குத் தன்பால் புணர்ச்சிஎன்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன். ஆங்கிலத்தில் இயல்பான ஆண் - பெண் உறவை ‘Heterasexual’ என்கின்றனர். இதை எதிர்பால் புணர்ச்சி எனத தமிழ்ப்படுத்திக் கொள்ளலாம்.

- ஒரு ஆண், ஆண்-பெண் இரு பாலரோடும், ஒரு பெண், பெண்-ஆண் இரு பாலரோடும் உறவு கொள்வதை ஆங்கிலத்தில் ‘Bisexual’ என்கின்றனர். இதைத் தமிழில் இருபால் புணர்ச்சி எனலாம். இதை இருபால் புணர்ச்சி என்றால் மேலே குறிப்பிட்ட எதிர்பால் புணர்ச்சியான Heterasexual தான் ஒருபால் புணர்ச்சி எனக் குறிப்பிட வேண்டும். எனவேதான், Hetera எதிர்பால், Homo தன்பால், Bisexual இருபால் என்கிற பொருளில் தன்பால் புணர்ச்சி என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தியுள்ளேன்.

தன்பால் புணர்ச்சியைத் தண்டனைக்குரிய குற்றச் செயலாக ஆக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ஐ நீக்கம் செய் யக் கோரி தொடரப் பட்ட ஒரு வழக்கில் அதை ஏற்று “18 வயது நிரம்பிய ஆணோ பெண்ணோ தன்னுடைய வாழ்க் கைத் துணையாக மற் றொரு ஆணையோ, பெண்ணையோ திருமணம ் செய்து கொள்வதும், கணவன் மனைவியாக வாழ்வ தும் தவறல்ல. அதைத் தடை செய்யும் இ.த.ச. 377 பிரிவுதான் அரசியல் சட்டத்துக்கு முரணானதுஎன்று கடந்த 02-07-09 அன்று தில்லி உயர் நீதிமன்றம் ஒரு பரபரப்புத் தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் ஏ.பி.ஷா,எஸ். முரளிதரன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங் கினர்.

இதற்கு நாடு முழுவதும் ஆதர வாகவும், எதிர்ப்பாகவும் குரல்கள் எழும்ப தில்லியைச் சார்ந்த சோதிடர் சுரேஷ்குமார் கௌசல் என்பார், “இத் தீர்ப்பு முறைகேடுகளுக்கு வழி வகுக் கும். எனவே தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்கவும் அதை ரத்து செய்யவும் வேண்டும்”ot;font-family: TSCu_Paranar; mso-bidi-font-family: Latha; mso-bidi-language: TA;"> எனக் கோரி உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி பி. சதாசிவம் ஆகியோர் அடங்கிய ஆயம் தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்து இந்தப் பிரச்சினையில் அரசின் நிலையைத் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவிக்கை அனுப்பி வரும் ஏப்ரல் 14-க்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

அரசு தரப்பிலும் தில்லி உயர் நீதி மன்றத் தீர்ப்புக்கு ஆட்சேபம் ஏதும் பெரிதாக இருக்காது. பெரும்பாலும் இதில் ஒத்த கருத்தே நிலவுகிறது என்கிற சூழலில் நாடு முழுவதும் பழமை வாதிகளும், மத அடிப்படைவாதிகளும் மட்டும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இந்நிலையில் இந்த வழக்கின் பின் னணிகளையும், அது சார்ந்த நியாயங்களை யும், சனநாயக மற்றும் மனித உரிமை நோக்கில் ஆராய வேண்டியது அவ சியமாகிறது.

காதல் என்பது எதிர்பால் ஈர்ப்பாகவும், எதிர்பால் புணர்ச்சியாக வும் அமைவதே பொது வில் இயல்பானதும் இயற்கையானதுமாக இருந்து வரு கிறது. எனில் சில குறிப்பான வாழ்க் கைச் சூழலில், குறிப்பான உணர்வு நிலைகளில் அரிதாகச் சிலர் மத்தியில் இது ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்குப் பெண்ணோ ஆன தன்பால் ஈர்ப் பாகவும், தன்பால் புணர்ச்சியாகவும் அமைந்து விடுகிறது. இதனால் இது இயல்புக்கும் இயற்கைக்கும் மாறான தாகக் கருதப்படும் அதே வேளை குற்றச் செயலாகவும் ஆக்கப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 இப்படிக் கூறுகிறது. இயற்கை நியதிக்கு மாறாகத் தன் விருப்பத்துடன் ஒரு ஆண், பெண் தன் பாலினருடன் அல்லது விலங்குடன் உடலின்பம் சார்ந்த உறவு கொள்ளும் எவரும் வாழ்நாள் அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் அபராதத்திற்கான தண்டனைக் குரியவராவார்.

இப்படிச் சட்டம் தன்பால் சேர்க் கையைக் குற்றச்செயலாகக் கருது வதால், இப்படிப்பட்ட சேர்க்கையாளர் களை சமூகம் இழிவாக நோக்குகிறது. சமூகத்தில் அவர்கள் இழி பிறவிகளாகக் கருதப்படுகின்றனர். காவல்துறையும் இவர்கள் மீது வன்முறையை ஏவ, அச்சுறுத்த, சமயங்களில் அவர்கள் தங்கள் பாலுணர்வுக்கு இவர்களைத் தவறாகப் பலியாக்கிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.

இந்நிலையில், இத்தன்பால் சேர்க்கையில், பொதுவான சமூக நட வடிக்கைகளுக்கு ஊறு விளைவிக்கா ததும், அடுத்தவர் உரிமையில், சுதந் திரத்தில் தடையிடதாததும், எவரும் எவரையும் வன்முறைக்கு உட்படுத் தாது, பரஸ்பர இசைவோடும், ஒத்த மனத்தோடும் கொள்ளும் உறவுகளை யும் குற்றச் செயலாக நோக்க வேண் டுமா என்பதுதான் இன்றைய சனநாயகச் சிந்தனையாளர்கள், மனித உரிமை யாளர்கள் மத்தியில் கேள்வியாகி யிருக்கிறது.

அதாவது, சமூக ஒழுங்கிற்கு எந்த வகையிலும் குத்தகம் விளைவிக்காது முழுக்கவும் தனிமனித விருப்பு சார்ந்து நடைபெறும் இச்செயலை எப்படிக் குற்றமாகக் கருத முடியும். தவிர, இது இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதி செய்திருக்கும் அடிப்படை உரிமை களில் மனிதனின் உயிர் வாழும் உரி மைக்கும், தனி மனித சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் பிரிவு 21க்கும் 1 எதிரானது. தனி மனித அந்தரங்கத்தில் தலையிடுவது என்பதும் இவர்கள் கருத்து. இதனால் இ.த.ச.விலிருந்து இப்பிரிவை நீக்கம் செய்து விட வேண்டும் என்று இவர்கள் நீண்ட காலமாகக் கோரி வந்தனர். இது தொடர்பாக தற்போது தீர்ப்பு வழங்கப் படக் காரணமான, வழக் கொன்றும் அப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

தில்லி திஹார் சிறையில் தன்பால் புணர்ச்சி அதிகம் நிலவுவதாக வெளி வந்த மருத்துவக் குழுவின் அறிக்கையை யொட்டி, மனித உரிமைக்குழு ஒன்று 1994ஆம் ஆண்டு தில்லி உயர்நீதி மன் றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்தது. அமைப்புச் சிக்கல் காரணமாக அக்குழு தொடர்ந்து இயங்க முடியாமல் செயலிழந்து போனதில் வழக்கு அப்படியே கிடப் பில் இருந்தது. அதற்கு ஆறு ஆண்டுகள் கழித்து 2001இல் எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பணியாற்றும் நஸ் பவுண் டேஷன்என்னும் அரசு சாதார நிறு வனம் இது சார்ந்து வேறொரு வழக்கைத் தொடுக்க பழைய வழக்கு மீண்டும் புத்துயிர் பெற்று பரிசீலனைக்கு வந்தது.

வழக்கைத் தொடுத்த அமைப்பு இக்குற்றப்பிரிவை நீக்க, ஏற்கெனவே சொல்லப்பட்ட தனிமனித சுதந்திரம், அந்தரங்கத் தலையீடு ஆகியவற்றுடன் முக்கியமாக வலியுறுத்திய ஒரு காரணம் இ.த.ச. தன்பால் புணர்ச்சியை இப்படிக் குற்றச் செயலாக்குவது எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் பணியாற்றி அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் பெரும் சிக்கலை ஏற் படுத்துகிறது. அவர்கள் தாங்கள் தன்பால் புணர்ச்சி யாளர்கள் என வெளியே சொல்லவே தயங்குகின்றனர். அப்படிச் சொன்னால் நோய்க்குச் சிகிச்சை பெறப்போய் எங்கே சட் டத்தின் பிடியில் சிக்கிச் சிறைப்பட நேரிடுமோ என்று அஞ்சுகின்றனர்என்பதே. ஆகவேதான், நீதிமன்றம் இதையெல்லாம் கருத்தில் கொண்டு வயது வந்தோரிடையேயான தன்பால் புணர்ச்சியைக் குற்றச் செயல் அல்லாததாக ஆக்க வேண்டும்என்று அவர்கள் கோரி வந்தனர்.

வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தில்லி உயர்நீதி மன்றம் அப்போது இது தொடர்பான பதில் மனுவைத் தாக்கல் செய்ய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதற்கு அரசு தந்த பதில்; “ஒரு மனிதனின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்வின் அந்தரங்க உரிமைகளை மதிக்க வேண்டும் என்பது சர்ச்சைக்கிடமற்ற ஒன்றுதான். என் றாலும் பொது நலன், நலவாழ்வுக் காப்பு, நல்லொழுக்கம் ஆகியவற்றைக் காக்க இதில் அரசின் தலையீடு என்பதும் சம முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும், இச்சட்டப்பிரிவு பொதுவான பாலுறவு வன்முறையைக் குற்றச் செயலாக்கும் பிரிவு 375க்குத்2 துணை புரியும் வகையில் குழந்தைகள் மீதான பாலுறவு வன் முறைகளைத் தடுக்கும் நோக்கிலேயே அமைந்துள்ளது. தவிர சட்டம் என்பது சமூகத்தை விட்டுத் தனியே பிரிந்து நிலவமுடியாது. அது இந்தியச் சமூகத்தில் நிலவும் மதிப்பீடு கள், மரபு, பண்பாடு ஆகியவற்றையும் கருத்தில் கொண்ட தாகவே அமையும். எனவே, இக்குற்றப் பிரிவை நீக்கம் செய்வது முறைகேடான பாலுறவுக்கு உரிமம் வழங்குவதாக, மடைதிறக்க வெள்ளம் போல் அதைப் பெருக் கெடுத்து ஓடச்செய்ய வழிவகுப்ப தாகவே முடியும். எனவே அக்குற்றப் பிரிவை நீக்கம் செய்ய முடியாதுஎன்று அப்போது தெரி வித்திருந்தது.

ஆனால், மனித உரிமை அமைப் புகள் இந்த வாதத்தை ஏற்கவில்லை. பொதுவான மனித உரிமையாளர்கள், குழந்தைகள் மீதான கொடுமைகள் எதிர்ப்பு இயக்கத்தினர், உலகப் பொது மன்னிப்பு அமைப்பின் பொறுப்பாளர் கள் மற்றும் அனைத்திந்திய சனநாயக மாதர் சங்கத்தினர் எனப்பலரும் அரசின் இந்த வாதத்தை மறுத்து எதிர்ப்புக்குரல் எழுப்பினர். இவ் வமைப்புகள் சார்ந்த ஏனாக்ஷி கங்குலி, மற்றும் விஜய் நாகராஜ் ஆகியோர் முறையே இக் குற்றப் பிரிவை நியாயப்படுத்துவதன் மூலம் அரசு குழந்தைகள் நலனையும் தன்பால் புணர்ச்சியாளர்களின் உரிமை களையும் எதிரெதிரானது போல் நிறுத்து கிறதுஎன்றும், “இது அனைத்துலக மனித உரிமைகளுக்கு எதிராக வேண்டு மென்றே திட்டமிட்டு நிகழ்த்தப்படும் மீறல், இதை ஏற்க முடியாது. சட்டம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் அமைய வேண்டுமே யல்லாது, வெறும் ஒழுக்கவியல், சமூக மதிப்பீடுகள் சார்ந்த பொதுக் கருத்தைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி மனித உரிமைகளை மீறுவதாக அல்லஎன்றும் குறிப்பிட்டிருந்தனர்.

எல்லாரையும் விட ஒருபடி மேலே போய் அரசைச் சாடிய பிருந்தா காரத் தில்லி சட்ட அமைச்சருக்கு எழுதிய திறந்த மடலில் மரபுகளைக் காப்பது என்றால் மணக்கொடை பெறுவது, மனைவியை அடிப்பது, தீண்டாமையைக் கடைபிடிப்பது என்ப தெல்லாம் கூட இந்திய சமூகத்தில் மரபாகத்தான் இருந்து வந்திருக்கிறது. மரபு, பண்பாடு என்பதன் பேரால் இவற்றை நியாயப்படுத்த முடியுமா? மரபு, பண்பாடு என்பதெல்லாம் சட்ட உரிமைகள், வரம்புகளுக்கு உட்பட்ட தாகத்தான் அமைய முடியுமே அல்லாது இதற்கு அப்பாற்பட்டு அல்லஎன்ற துடன் அப்படிக் கலாச்சாரம் சமூக அங்கீகாரம் என்று பார்ப் பதானால் கூட அரசு அதைத் தன் நோக்கிற்கு ஏற்ப குறுக்கிப் பார்க்கிறதேயன்றி இந்திய சமூகத்தில் தன்பால் புணர்ச்சி நிலவி வந்ததற்கும், அது ஏற்கப் பட்டிருந்ததற் குமான எண் ணற்ற சான்றுகளை அது காண மறுக்கிறதுஎன்றும் குற்றம் சாட்டினார்.

இப்படிப்பட்ட வாதப் பிரதிவாதங்கள் நீடித்துக் கொண்டிருந்த நிலையில்தான், தற்போது தில்லி உயர்நீதி மன் றத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு வந்துள்ளது. இந் நிலையில் இது குறித்து நாம் பொதுவில் யோசிப்போம்.

பசி எந்த அளவுக்கு இயற் கையானதோ அந்த அளவு பாலுறவும் இயற்கையான தாகவே இருந்து வருகிறது. எனில், இவை வெறும் பயன் கருதி மட்டுமே நிறைவேற்றிக் கொள்ளப்படுவதில்லை. மாறாக மனம் சார்ந்தே நிறை வேற்றிக் கொள்ளப்படுகின்றன. எனவே இது ருசி சார்ந்தும், ரசனை சார்ந்தும் நிலவுவது தவிர்க்க முடியாத தாகிறது. இதனால் இது மனிதனுக்கு மனிதன் அவரவர் விருப்பு வெறுப்பிற் கேற்ப மாறுபட்டதாக அமைகிறது. இதில் போய் ஒரு மனிதன் இதைத்தான் விரும்ப வேண்டும். இதை விரும்பக் கூடாது என்றெல்லாம் கட்டாயப்படுத்த முடியாது. இதற்கு சட்டம் இயற்றவும் முடியாது.

அதேவேளை, இந்த விருப்பத் தேர்விற்கான சுதந்திரம் என்பது எதுவும் முற்று முழுதானதும் அல்ல. எல்லாம் சார்புத்தன்மை உடையதே. அதாவது எந்த உரிமையும் பிறர் உரிமையில், பிறர் சுதந்திரத்தில் தலையிடாமல், குறுக்கீடு செய்யாமல் துய்க்கத்தக்கதே. இந்த அளவில் தன்பால் சேர்க்கை நிலவு மாயின் அதைப்போய் ஒரு குற்றச் செயலாகக் கருத முடியாது.

அடுத்து, ஒரு மனிதர் ஆணோ அல்லது பெண்ணோ எவரானாலும் அவர் தன்பால் புணர்ச்சியாளரா அல்லவா என்பதை வைத்து அவரது ஆளுமை தீர்மானிக்கப்படுவதில்லை. அப்படி தீர்மானிக்கவும் முடியாது. ஒருவர் எதிர்பால் புணர்ச்சியாளராக இருக்கிறார் என்பதாலேயே அவர் உத்தம புத்திரனாக இருப்பார் என்ப தற்கோ, அவர் தன்பால் புணர்ச்சி யாளராக இருப்பதானலேயே மோச மான ஆளுமையை உடையவராக இருப்பார் என்பதற்கோ எந்த அடிப் படையும் கிடையாது. அல்லது தன்பால் புணர்ச்சியாளர்களே ஒழுக்கக் கேடான வராகவோ, சமூக விரோதியாக அல்லது சமூகத்திற்கு எந்த வகையிலும் பயனற் றவராக ஆகிவிடுவதாகவும் கொள்ள முடியாது. அப்படியே பயனற்றுப் போனாலும் அவருக்குள்ள உரிமை களை யாரும் பறிமுதல் செய்து விடவும் முடியாது. சமூகத்தில் எல்லா மனிதர் களுக்கும் உள்ள உரிமைகள் அவருக்கும் உண்டு. அவரும் சமூகத்தில் ஓர் அங்கம் தான். அவரும் மற்ற மனிதர்களைப் போலவே. அவரவர் சூழலுக்கு ஏற்ப இந்த மண்ணில் வாழ்ந்து மறைய உரிமையுடையவர்கள்தாம். இப்பொது நோக்கு ஒருபுறம் இருக்க, இத்தன்பால் புணர்ச்சியாளர்களில் சிலர் சாதாரண மனிதர்களை விடவும் சமூகத்தில் சிறப் பான பங்காற்றியுள்ளனர், பங்காற்றி வருகின்றனர் என்பதும் கவனிப்புக் குரியது.

எடுத்துக்காட்டாகத் தென்னாப் பிரிக்காவில் ஆண், பெண் ஆகிய இருதரப்பு தன்பால் புணர்ச்சியாளர் களுமே வெள்ளை ஆட்சியின் இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தங்களைப் பிணைத்துக்கொண்டு குறிப் பிடத்தக்க பங்காற்றியுள்ளனர். வியட் நாம் போரில் நூற்றுக்கணக்கான ஆண் களை அமெரிக்கா பலிகொடுத்து வந்ததைக் கண்டித்து அமெரிக்கப் பெண் தன்பால் புணர்ச்சி யாளர்கள் தங்கள் செயலை ஒரு கலக நடவடிக் கையாக வெளிப்படுத்தி போர்க் குரல் எழுப்பியதுடன், தங்களின் இந்த வாழ் நிலைக்கு அமெரிக்க அரசே காரணம் எனவும் கண்டனம் செய் துள்ளனர்.

இதுபோன்று தன்பால் புணர்ச்சியாளர்களின் சமூக அக் கறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு உலகு தழுவிய பல சம்பவங் களைச் சொல்லலாம். எனவே தன்பால் புணர்ச்சியாளர்களைப் பாலுறவு சார்ந்த இந்த ஒற்றைக் கோணத்தில் மட்டுமே வைத்து நோக்க வேண்டியதில்லை. தவிர வும் தன்பால் புணர்ச்சியாளர் களில் பலர் முற்றான தன்பால் புணர்ச்சியாளர்களாகவும் இருப்ப தில்லை. இவர்களில் பலர் இயல் பான எதிர்பால் புணர்ச்சியும் கொண்ட இருபால் புணர்ச்சி யாளர்களாகவும் இருந்து வரு கின்றனர்.

எனவே ஒரு மனிதன் எப்படிப் பட்ட புணர்ச்சியாளன் என்பது சமூக நோக்கில் அற்பத்திலும் மிக அற்பமான ஒரு செய்தியே தவிர அதுவே அம் மனிதனின் ஆளுமையைத் தீர்மானிக் கிற விஷயம் அல்ல. மாறாக அம் மனிதரின் ஆளுமையைத் தீர்மானிப்பது அவரது ஆற்றல்கள், திறமைகள் மற்றும் சமூகத் திற்கு அவர் ஆற்றுகிற பங் களிப்பை வைத்துத்தானே தவிர வேறு எதை வைத்தும் அல்ல. வரலாற்றில் குறிப்பாகக் கலை, இலக்கிய மற்றும் சிந்தனைத் துறையில் பெரும் பங்காற்றி மறைந்த சிலர், காட்டாக இலக்கிய மேதைகள் ஆஸ்கார் ஒயில்ட், புனித ஜெனே, கணித மேதை ஜான் நாஷ் மற்றும் பின் நவீனத்துவவாதி மிகயில் ஃபூக்கோ ஆகியோர் தன்பால் புணர்ச்சி யாளர்களே. இதனால் இதை வைத்து யாரும் இவர்களைப் புறந்தள்ளி விடுவ தில்லை. இதையெல்லாம் கடந்து தான் அவர்களது படைப்புகள் பாராட்டப் பெறுகின்றன. சிந்தனைகள் மதிக்கப் படுகின்றனவே தவிர மற்றபடி அவர்கள் தன்பால் புணர்ச்சியாளர்கள் என்பத னாலேயே யாரும் இவர்களை நிரா கரித்து உதாசினம் செய்து விடவில்லை.

தவிர, அரசு சொல்வது போல் இக்குற்றப்பிரிவை நீக்கம் செய்வது முறைகேடான நடவடிக்கைகளுக்கு மடை திறந்து விட்டது போல் ஆகி விடும் என்பதையும் ஏற்க முடியாது. காரணம் இன்றும் சமூகத்தில் எதிர்பால் புணர்ச்சியே இயல்பானதும் இயற்கை யானதுமாய் இருந்து வருகிறது. இதனடிப்படையிலேயே சமூக இயக் கமும் மனித உற்பத்தியும் நடை பெற்று வருகிறது. விதிவிலக்காகவே சில தனி நபர்கள், குழுக்கள் தன்பால் புணர்ச்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் களிலும் பலர், ஏற்கெனவே குறிப் பிட்டது போல் இயல்பான குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டிருக்கும் இருபால் புணர்ச்சியாளர்கள். ஏதோ சில வாழ்க்கைச் சூழல், உணர்வுச் சிக்கல், உடல் வேறுபாடு, இயல்பான எதிர்பால் புணர்ச்சிக்குப் போதிய வாய்ப்பின்மை அல்லது நாட்ட மின்மை, அல்லது வேறுவிதமான சமூக மதிப்பீடுகள் சார்ந்த ஒடுக்கு முறைகள் ஆகிய பல்வேறு காரணிகளே இவர் களைத் தன்பால் புணர்ச்சிக்காரர்களாக ஆக்குகின்றன.

இந்நிலையில் இவர்களைத் தன்பால் புணர்ச்சிக்காரர்களாக ஆக்கிய சமூக மற்றும் தனி நபர்க் காரணங் களைக் கண்டறிந்து அவற்றைக் களை யவும், அறிவியல் மற்றும் உடலியல் நோக்கிலான அறிவுறுத்தல், இயல்பான எதிர் பால் சேர்க்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்து அதற்கு ஊக்கப் படுத்தல், உளவியல் சிக்கல்கள் இருந் தால் 3 உரிய சிகிச்சை அளித்தல் போன்ற மாற்று நடவடிக்கைகள் மூலம், இதைக் களைய முற்பட வேண்டுமே யல்லாது, குற்றச் செயலாக அறிவிப்பதன் மூலமோ, கொடுந்தண்டனைகள் வழங்குவதன் மூலமோ இதை ஒழித்து விட முடியாது. அதோடு எந்த நட வடிக்கை மேற்கொண்டாலும் இதை முற்றாகச் சமூக நீக்கம் செய்துவிட முடியும் என்றும் சொல்ல முடியாது. காரணம் எந்தச் சமூக அமைப்பிலும் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு வடிவில் இலைமறை காய் மறையாய் இப்படிப்பட்ட உறவுகள் நீடிக்கலாம். நீடிக்கவே செய்யும். வளர்ச்சியடைந்த ஒரு சமூக அமைப்பில் இதையெல்லாம் போய் யாரும் ஒரு பிரச்சினையாக எடுத்து விமர்சித்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அடுத்தவருக்கு இடை யூறு இல்லாதவரை, அடுத்தவர் உரி மையைப் பறிக்காதவரை எப்படி யாவது கிடந்துவிட்டுப் போகட்டும் என்று எவரும் அதைப் பொருட் படுத்திக் கொள்ளாமலேதான் போவார்கள். 

தவிரவும், இதைக் குற்றச் செயல் அல்லாததாக ஆக்கிவிடுவதனாலேயே எல்லோரும் அவ்வுறவுக்கு ஆளாகி விடுவார்கள் என்றும் சொல்ல முடி யாது. அதைக் குற்றச் செயல் அல்லாத தாக ஆக்க வேண்டும் என்று கோருவது இப்படிப்பட்ட பழக்கம் உள்ளவர் களுக்கு ஒரு உரிமை, சலுகை என்ப தாகத்தானே தவிர, எல்லோரும் இதையே வாடிக்கையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல.

எடுத்துக்காட்டாக சேர்ந்து வாழவே முடியாத, விரும்பாத தம்பதி யினர் பிரிந்து வாழ வசதியாக மண விலக்கு உரிமைஇருப்பது அவர் களுக்கு ஒரு வாய்ப்புதானே தவிர, இந்த உரிமை இருக்கிறது என்பதானலேயே எல்லோரும் பிரிந்து வாழவேண்டும் என்று விரும்புவதில்லை. மண விலக்கிற்கு மனுப் போடுவதுமில்லை. அதேபோலதான் இதுவும். இது குற்றச் செயல் என்று விதித்திருப்பதானலேயே யாரும் இதில் ஈடுபடாமலும் இல்லை. இதைக் குற்றச் செயல் அல்லாததாக ஆக்கி விடுவதனாலேயே எல்லோரும் வரிந்து கட்டிக்கொண்டு இச்செயலில் இறங்கி விடப்போவதுமில்லை. இது இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரவரும், அவரவர் இச்சைக்கு அவரவர் சூழலுக்கு ஏற்ப உரிய பாலு றவை அனுபவித்து வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். எதிர் காலச் சமூகமும் இப்படியேதான் வாழுமே தவிர மற்றபடி சட்டம் என்ன சொல் லுகிறது என்பதைக் கேட்டுக் கொண்டு அல்ல.

ஆகவே, எந்த நோக்கில் பார்த் தாலும் தன்பால் புணர்ச்சியைக் குற்றச் செயலாக்குவதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சி யாளர்களும் முன்னைப் போல் கெட்டித் தட்டிப் போன இறுகிய பிற்போக்குத் தனமான நோக்கில் இதை அணுகு வதாகத் தெரியவில்லை. என்றாலும் பழமைவாதிகள், மத அடிப்படை வாதி கள், இதை எதிர்ப்பதற்குக் காரணம் இது மத விரோத, மதப் புனிதம் மீறிய நடவடிக்கையாக ஆகிவிடுமோ, மக்கள் மீதான தங்கள் கட்டுப்பாடு தகர்ந்து போய் விடுமோ, உடல் ரீதியாக அனுமதிக்கப்படும் இந்தச் சுதந்திரம் மனரீதியான சுதந்திரத்திற்கும் வழி வகுத்து விடுமோ என்கிற அச்சம். இதுவே அவர்களை யோசிக்க வைக் கிறது. இதற்கு எதிரான நடவடிக்கை களைத் தூண்டுகிறது. வரலாற்றுப் போக்கில் இச்சட்டம் உருவானதன் பின்னணியை நோக்க இதைப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய தண்டனைச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1960இல். அதாவது 1957இல் முதல் இந்திய விடுதலைப் போரையடுத்து இந்தியா வில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி முடிவுற்று விக்டோரியா பேரரசின் பேராணையின் படி பிரித்தானிய வெள்ளை ஆட்சியின் நேரடி நிர்வாகத் தின் கீழ் இந்தியா கொண்டு வரப்பட்ட மூன்றவாது ஆண்டில்.

வெள்ளைக் கிறித்துவர்களின் வேதநூலான விவிலியத்தில், இதன் பழைய ஏற்பாடு லேவியாகமம் பகுதி யில் 20ஆம் அதிகாரம் பிரிவு 13இப்படிக் கூறுகிறது. ஒருவன் ஒரு பெண் ணோடே சம்போகம் பண்ணுகிறது போல ஆணோடு சம்போகம் பண்ணி னால் அவருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலை செய்யக் கடவர். அவர்கள் இரத்தப்பழி அவர்கள் மேல் இருப்பதாகஅதே பகுதி யிலேயே பிரிவு 15 கூறுவதாவது ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால் அவன் கொலை செய்யக் கடவன். அந்த மிருகத்தையும் கொல்லக் கடவீர்கள்”.

அதாவது ஒருவன் உன் வலது கன்னத்தில் அறைந்தால் உன் இடது கன்னத்தையும் அவனுக்குக் காட்டுஎன்று மக்களுக்கு அன்பைப் போதித்த ஏசுவின் தேவன்தான் இயற்கையான பாலுறவை மீறும் தன்பால் புணர்ச்சி யாளர்களுக்கு இப்படிப்பட்ட மரண தண்டனைகளை அறிவிக்கிறார். இதற்கு அவ்வக்காலத்தும் நிலவிய சமூகச் சூழல்கள் காரணமாக இருந் திருக்கலாம். எனில் அவற்றை இங்கு ஆராய்வது நமக்கு நோக்கம் அல்ல. நமக்கு நோக்கம் இப்படிப்பட்ட பழமைவாத மத நம்பிக்கைகளை ஆதாரமாகக் கொண்டே வெள்ளை ஆட்சியாளர்கள் தங்கள் சொந்த மற்றும் காலனியாதிக்க நாடுகளின் பாலுறவுச் சட்டங்களை இயற்றினார்கள் என் பதைப் புரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான்.

இந்த அடிப்படையிலேயே பிரித் தானிய அரசு அவர்கள் சொந்த நாட்டில் 1533இல் ஆங்கிலத் தன்பால் புணர்ச்சித் தடைச் சட்டத்தைக்கொண்டு வந்து இச்செயலில் ஈடுபடுவோர்க்கு மரண தண்டனை அறிவித்தது. பின் 1563இல் எலிசபத் பேரரசியின் ஆட்சி அதை மறு உறுதி செய்து இங்கிலாந்துக்கு மட்டுமின்றிப் பிரிட்டன் ஆதிக்கத் திற்குட்பட்ட காமன் வெல்த் நாடுகள் அனைத்திற்கும் அதை விரிவு படுத் தியது. இதன் வழியே விக்டோரியாப் பேரரசியின் ஆட்சிக் காலத்தில் 1960இல் இந்தியாவில் நுழைந்ததுதான் இந்தச் சட்டம்.

இது ஒரு புறமிருக்க, வெள்ளை ஆட்சி இந்தியாவின் வைதிக மதத்சட்ட நூலான மனுவை மொழியாக்கம் செய்து அதனடிப்படையிலேயே இந்துச்சட்டத்தை உருவாக்கியது என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது. காரணம் மனுவும் தன்பால் புணர்ச்சியைத் தண்டனைக்குரியதாகவே குறிப்பிடுகிறது. ஆனால் இது விவிலியம் போல் மரண தண்டனை வழங்கா மலும், ஆண் பெண்ணுக்குச் சமத்துவம் அளிக்காமலும் பெண்ணுக்குக் கூடுத லாகவும், ஆணுக்கு சற்றுக் குறைவான துமான தண்டனை அளித்ததுடன் அவர்களுக்குக் கூடுதல் சலுகையும் வழங்கியது.

மனு அறம்விளக்கப் பகுதியில் கூடாவொழுக்கம் பிரிவு 309 “ஒத்த குலத்தவளின் பெண் குறியில் விரல் நுழைத்துத் துன்பப்படுத்துவோர்க்குத் தண்டம் நூறு பணம். மேலும், இரு விரல்களையும் வெட்டுகஎனவும், பிரிவு 310 “ஒருத்தியை மற்றொருத்தி இவ்வாறு செய்தால், செய்தவள் தலையை மொட்டையடித்திடுக. விரல்கள் இரண்டையும் துண்டிக்க, பத்து கசையடி தருக. கழுதை மேலேற்றி நடுவீதிகளில் துரத்துகஎனவும் கூறுகிறது.

மாபாவம் ஐந்துபற்றிக் கூறும் பகுதியில் காமம்பிரிவு 109 “பகலில் நீருக்குள், மாடு பூட்டிய வண்டி மீது மனைவியைக் கூடுவோர், தரித்த ஆடையுடன் நீராடுக. ஆணும், பெண் ணும் அணைத்து ஒழுக்கு நேர்ந்தாலும் அவ்வாறே செய்க. பசுவைப் புணர்ந் தவன் சாந்தப்பணம் செய்கஎன்கிறது.

பசுவைப் புனிதமாகக் கருதியதில் ஆணுக்குச் சலுகை வழங்கியதில் விவிலி யத்திலிருந்து மனு மாறுபடலாம். ஆனால் பொதுவில் இரண்டுமே தன்பால் சேர்க்கையைக் குற்றச் செய லாகக் கொள்வதும், இதில் இவற்றுக் கிடையேயான உறவும் கவனிக்கத் தக்கது. ஆக, இப்படிப்பட்ட மதவாத அடிப்படைகள், நம்பிக்கைகள் மீது கட்டப்பட்டதே இந்தத் தன்பால் புணர்ச்சித் தடைச்சட்டம்.

இப்படி உருவான இந்தச் சட்டம் தான் கிட்டத்தட்ட ஒரு நான்கு நூற் றாண்டுகளுக்கும் மேல் - இந்த நான்கு நூற்றாண்டுகளில் உலக அளவில் அறி வியல் கண்டுபிடிப்புகளில், முன்னேற் றங்களில், பண்பாட்டுச் சிந்தனைத் தளங்களில் அளப்பரிய மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும், இது எந்தவித கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் அப்படியே பாறைபோல இறுகி கெட்டி தட்டிப்போய் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பின் 1967இல் இங்கிலாந்தின் தன்பால் சேர்க்கை மற்றும் பாலியல் தொழிலாளர் குற்றங்கள் துறை சார்ந்த குழுவின் தலைவராயிருந்த சர் ஜான் உல்ஃபென்டான்என்பாரின் பரிந்துரை களின் பேரில் பிரித்தானிய நாடாளு மன்றம் தன்பால் சேர்க்கையைக் குற்றச் செயலாக்கும் பிரிவை நீக்கம் செய்தது.

இருபதாம் நூற்றாண்டின் நவீனச் சிந்தனைகளும், இரண்டு உலகப் போர்களும் நிகழ்த்திய கொடூரங் களுக்குப் பிறகு ஏற்பட்ட மனித உரிமை பற்றிய அக்கறைகளும், ஐரோப்பிய காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள் தங்களுக்கான சுயேச்சையான அரசமைப்புச் சட்டங்களை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியும், உலகம் முழு வதும் மனித உரிமைகளைப் பாது காக்கும் நோக்கில் நிறுவப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளும் இது சார்ந்து புதிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தின.

1994இல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் தன்பால் சேர்க்கையைத் தண்டனைக்குரிய குற்ற மாக்குவது தனிமனித சுதந்திரத்தையும் அந்தரங்கத்தையும் கேள்விக்குள்ளாக்கு வதும் அதை மீறுவதுமாகும்என அறிவித்து உலக நாடுகள் பலவும் இப்பிரிவை நீக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.

1998இல் விடுதலை பெற்ற தென்னாப்பிரிக்கா தனக்கான சுதந்திர அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய போது தன்பால் சேர்க்கையைக் குற்றச் செயலாக்கிய முந்தைய சட்டத்தை நீக்கி அதைக் குற்றச் செயலாக்குவதிலிருந்து விடுதலை செய்தது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தன்பால் சேர்க்கையைக் குற்றச் செயலாக்கியிருந்த சட்டப் பிரிவை அது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என 2003இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2004ஆம் ஆண்டு மார்ச் மாதம் மே 17 முதல் மாஸா சூஸட்ஸ் மாநில நீதிபதி, தன்பால் புணர்ச்சியாளர்களுக்கு முறை யான திருமண உரிமம் வழங்கலாம் என்று அறிவிக்க சான்பிரான்சிஸ்கோ நகர மேயர் அதை ஏற்று தனது நகரில் தன்பால் திருமணங்களுக்கு அனுமதி வழங்க அறிவிப்பு செய்திருக்கிறார்.

ஐரோப்பாவில் ஹாலந்து, பெல் ஜியம் ஆகிய நாடுகள் தன்பால் திரு மணங்களுக்கு ஏற்கெனவே சட்ட உரிமம், வடிவம் கொடுக்கத் தற்போது இந்த அக்டோபரில் ஸ்பெயினிலும் இதற்கான சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் தன்பால் சேர்க்கையைக் குற்றச் செயலாக்குவதிலிருந்து விடுவித்தத்துடன், அவர்களுக்குப் பிற எதிர்பால் சேர்க்கையாளர்கள் போலவே பல உரிமைகளையும் வழங்கியுள்ள நிலையில், இந்தியாவில் மட்டும், இச்சட்டத்தைக் கொண்டு வந்த இங்கிலாந்தே அதைக் கைவிட்ட பின்னும், இன்னும் அது அப்படியே அச்சு குலையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தன்பால் சேர்க்கைக்குத் தண்டனை வழங்கிய மனு பிறந்த அதே மண்ணில் தான், தன்பால் கவர்ச்சியைப் பற்றிய சித்தரிப்புகள் அடங்கிய இராமாயண, மகாபாரத இதிகாசங்களும் பிறந்தன. ஆனால் இங்குள்ள பழமைவாதிகள் இதன் உண்மையறியாமல், அறிவார்ந்த நவீன சிந்தனையாக்கத்திற்கு எப்போதும் எதிராகவே உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஃபயர், தற்போது வெளி வந்த கேர்ள்ஃபிரண்ட்ஆகிய திரைப்படங்களில் பெண்களுக்கிடையேயான தன்பால் சேர்க்கை பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருந்தன என்பதற்காகப் பழமைவாதிகளும், மத அடிப்படைவாதிகளும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும், சனநாயகச் சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் அந்த எதிர்ப்புக்குப் பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்ததையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர இச்சட்டத்தின் சனாதனப் போக்கையும் அது சார்ந்த ஆதிக்க சக்திகளின் அதிகாரப் போக்கையும் புரிந்து கொள்ளலாம். எனவே, இச்சக்திகளுக்கெதிராகவும், இச்சட்டத்திற்கு எதிராகவும் சனநாயக முற்போக்கு சக்திகள் குரல் கொடுக்க வேண்டும். குறிப்பாகப் பொதுவுடைமைவாதிகள், அச்சித்தாந் தத்தை அது ஏதோ சோற்றுக்கில்லாதவனுக்காக, வறுமைப்பட்டவனுக் காகப் போராடுகிற சித்தாந்தம் என் பதாக மட்டுமே குறுக்கிப் பார்த்து மலினப் படுத்தக்கூடாது.

தீர்ப்பு தற்போது நீதிமன்றத்தின் மடியில்

தன்பால் புணர்ச்சி தொடர்பாக தில்லி அரசின் கருத்தைக் கேட்டு உச்ச நீதிமன்றம் அனுப்பிய அறிவிக்கைக்கு தில்லி அரசு உச்ச நீதிமன்றமே இதை முடிவு செய்து கொள்ளட்டும் என அதன் கருத்துக்கே விட்டுள்ளது. அதாவது அமைச்சரவைக் கூட்டத்தில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையிலும், மதவாத அமைப்புகள் தன்பால் சேர்க்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையிலும் நமக்கேன் வம்பு என அரசு பந்தை உச்ச நீதிமன்றத்தின் திடலுக்குள்ளேயே தள்ளி விட்டுள்ளது.

- தன்பால் புணர்ச்சியைக் குற்றச் செயலாக்கும் இதச பிரிவு 377, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது எனத் தீர்ப்பளித்த தில்லி உயர்நீதி மன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், மனித அடிப்படை உரிமைகளுக்கு ஆதரவாகவே இருக்கிறது என்று தெரிகிறது. ஆகவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இ.த.ச. பிரிவு 377-ஐ நீக்கம் செய்து தன்பால் புணர்ச்சியாளர்களின் உரிமையை பாதுகாப்பதாகவே அமையும் என நம்பலாம். 

- தொடர்ச்சி அடுத்த இதழில்