இந்த ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் நாள் தமிழகத்தின் நெல்லை, கோவை, கிருஷ்ணகிரி, கடலூர் மாவட் டப் பகுதிகளைச் சார்ந்த விவசாயிகள் மற்றும் பனை ஏறும் தொழிலாளர்கள் ஆகியோர் பல்லாயிரக்கணக்கில் ஒன்று திரண்டு, தமிழக அரசு கள் இறக்க அனுமதி தரவேண்டும், கள் இறக்குதல் மீதான தடையை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத் தியதுடன், தடையை மீறி கள் இறக்குவோம் என கள் இறக்கியும் கைது ஆனார்கள்.

அப்போதே இப்பிரச்சினை குறித்து மண்மொழியில் எழுதக் கருதியிருந்தது. ஈழச் சிக்கல் மற்றும் உடனடியாகக் கருத்து கூறவேண்டிய வேறு பல சிக்கல்கள் இடத்தை ஆக்கிரமிக்க அது தள்ளிப் போய்விட்டது.

மனிதகுல வரலாற்றில் எல்லாப் பகுதி சமூக மக்கள் வாழ்விலுமே, கேளிக்கை, களியாட்டம் என்பது ஓர் அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. ஆண்டு முழுதும் உழைக்கும் மனிதன், அவ்வுழைப்பின் வழி தன் தேவைகளை நிறைவு செய்து கொண்டபின் அந்த மகிழ்ச்சியில் தன் மன வெளிப்பாட் டிற்கான நடவடிக்கைகளிலும், அதா வது ஆடல், பாடல்கள், கேளிக்கை களில் ஈடுபட, அக்கேளிக்கைகளுக்கு சற்று போதை கலந்த பானங்களை - இதையும் மனிதன் அரும்பாடு பட்டே தான் கண்டறிந்திருக்கிறான் - அருந்து வதையும் வழக்க மாகக் கொண்டிருக் கிறான்.

இந்த பானம், இப்புவிக் கோள் முழுவதும் அந்தந்த பகுதி மக்கள் வாழும் இயற்கை சூழல் சார்ந்தும், தட்ப வெப்பநிலை சார்ந்தும் வெவ்வேறு பட்டதாய் இருந்திருக் கலாம். ஆனால் எல்லா சமூகங்களி லுமே இது இருந் திருக்கிறது. இருந்து வருகிறது என்பதே உண்மை. காட்டாக, ஆரியர்கள் சோம பானம், சுராபானம் அருந்தி வந்திருக் கிறார்கள். வேத நூல் கள்வழி சங்க காலத் தமிழர்கள் நண் கமழ் தேறல்’ ‘கள்ளுண்டு களித்திருக் கிறார்கள் என்பதை இலக்கியச் சான்று கள் வழி அறிகிறோம். தமிழகத்தில் மட்டுமல்ல, தெற்காசியப் பகுதி முழுவ துமே கள்தான் களியூட்டு பானமாக இருந்திருக்கிறது. மேலை நாடுகளில் ருஷ்யாவில் ஓட்கா, பிரான்சில் சாம் பெய்ன் என நாட்டுக்கு நாடு தனித்த அடையாளத்தோடும் இவையன்றி பொதுவாக அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் ஒயின், ரம், விஸ்கி, பிராந்தி முதலான பானங்களும் பயன் படுத்தப் பட்டு வருகின்றன.

இப்படி ஒவ்வொரு சமூகப் பிரிவும், அவரவர் வாழ்நிலை சார்ந்து, t-family: TSCu_Paranar; mso-bidi-language: TA;" lang="TA">சூழ்நிலை சார்ந்தும், உருவாக்கி பயன் படுத்தி வந்திருந்த களி பானம்என்பது, வெள்ளை ஆதிக்கத்தால் பாதிப்புக் குள்ளாக்கப்பட்டு, தங்கள் நாட்டுத் தயாரிப்பான மது வகைகளை தாங்கள் ஆதிக்கம் செய்த மக்கள் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி அதை அவர்கள் மேல் திணித்து அவற்றுக்கு அம்மக்களை உட்படுத்தினர். ஏறக்குறைய கதிரவன் மறையாத ஆட்சி என்று பெருமை பீற்றிய பிரித்தானிய ஆட்சி தொடங்கி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து முதலான ஐரோப்பிய நாடுகள் பலவும் தாங்கள் ஆக்கிரமித்த இடங் களில் எல்லாம் இம்மது வகைகளை யும் அறிமுகம் செய்து அவ்வப்பகுதி ஆதிக்க சக்திகளை மல்லாத்தி தங் களுக்கு சேவை செய்ய வைத்ததுடன், படிப்படியாக அடுத்தடுத்த மக்கள் பிரிவினரையும் இதற்கு உட்படுத்தியது.

சுருக்கமாக, உலகெங்கும் வாழும் மக்களை அவரவர் பண்பாடு, பழக்க வழக்கங்கள், நடை உடை பாவனைகள் ஆகிய அனைத்தையும் அழித்து அல்லது மாற்றி, அதை இரண் டாம் பட்சமாக கருதவைத்து, தங்களது ஐரோப்பிய பாணி நாகரிகம், பழக்க வழக்கமே சிறப்பானது, மேன்மை மிக்கது என்று கருத வைக்கிற நிலையை உருவாக்கியது போலவே, களி பானங் களிலும், உள்ளூர் பானத்தை விடவும் அந்நிய பானமே அருமையானது, உயர் வானது, அரிதானது என்னும் கருத்து கட்டமைக்கப் பட்டு, வசதி படைத்த வர்கள் அதில் அதிக நாட்டம் காட்டும் நிலையை ஏற்படுத்தியது. பின் படிப் படியாக அது நடுத்தட்டு மற்றும் கீழ்த் தட்டு பிரிவினரையும் ஆட்கொண்டது. இதனுடைய தொடர்ச்சியாகவே இன்று தமிழகமெங்கும் இக்களி பானங்களின் விற்பனை தலை விரித் தாடுகிறது.

இதில் இன்னொரு செய்தியை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். வெள்ளையர்கள் அறிமுகம் செய்த இந்த களி பானத்தை, மக்கள் தங்கள் மரபு வழிப் பானங்களை விட்டு, தாங்களாக மனமுவந்து வந்து இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, இதை மகத் துவப்படுத்துவதன் மூலம் மக் களை இதைநோக்கி ஈர்த்தார்கள். பின் படிப் படியாக அனைத்து மக்களையும் இதில் மூழ்க வைக்கும் திருப்பணியைச் செய்தார்கள்.

வெள்ளையர் இங்கு கால் வைத்த புதிதில் முதலில் தங்கள் சொந்த பயன் பாட்டிற்காக தங்கள் நாட்டு மதுவைக் கொண்டு வந்தார்கள். பிறகு சமஸ்தான மன்னர்களுக்கும், மன்னராட்சி அதிகாரி களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் அதை ஊற்றிக் கொடுத்து, அவர்களை இதற்கு அடிமையாக்கினார்கள். அப்போ தெல்லாம் சாதாரண மக்களுக்கு இந்த அந்நிய மதுபானம் என்பது எட்டாக் கனி. அது மேட்டுக்குடி பானம். எச மானர்கள் அருந்திய மிச்ச மீதியில் ருசி பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் அதுவே பெரும்பேறு. அப்படி ஒரு காலம் இருந் தது. அதுதான் தற்போது தெருவுக்குத் தெரு, சந்திக்குச் சந்தி வந்து மக்களை வேறு சிந்தை யற்றவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

இப்படி இது பெருவாரியாக பரப்பப் பட்டதற்குக் காரணம் இருக் கிறது. வெள்ளை முதலாளிகள் தங்கள் நாட்டில் பொருள்களை உற்பத்தி செய்து இங்கே அதற்குச் சந்தைதேடி விற்பனை செய்வதை விடவும், இங்கேயே பல தொழிற்சாலையைத் தொடங்கி இங் கேயே உற்பத்தி செய்தால், தொழிலாளர் கள் கூலியும் குறைவு, உற்பத்திச் செலவும் குறைவு, போக்குவரத்து செலவும் கிடையாது. லாபமும் கொள்ளை என்று கருதி இங்கேயே தொழிற்சாலைகள் தொடங்க, வெள்ளை முதலாளிகளின் கொள்ளை லாபத்தைப் பார்த்த இந்திய நிலப் பிரபுக்கள் தாங்களும், முதலாளியத் துக்கு மாறி, வெள்ளையன் தொழில் நுட்ப உதவியுடனும் கூட்டுடனும் வளரத் தலைப்பட்டு தாங்களும் தொழிற்சாலைகள் தொடங்க, இந்த இரு வகைப் போக்கின் விளைவாக அந்நியப் பொருள்கள் இங்கேயே உற்பத்தி செய்யத் தொடங்கின.

அதாவது இங்கிலாந்தின் மான் செஸ்டர் துணி இங்கு மும்பையிலும், கோவையிலும் உற்பத்தி செய்யப் பட்டது போல - எல்லா வகைப் பொருள்களும் இங்கேயே உற்பத்தி செய்யப்பட்டன. இந்த வரிசையில் அந்நிய மதுபான வகைகளும் இப்படி இங்கேயே தன் உற்பத்தியைத் தொடங் கியது. இதை யொட்டிதான் இம் மது பானங்களுக்கு ஐனேயைn ஆயனந குடிசநபைn டுiளூரசைந (ஐஆகுடு - இ.த.அ.ம.) என்கிற அதாவது இந்தியாவில் தயாராகும் அந்நிய மதுபானம் என்கிற பெயர் வந்தது.

அதாவது, இது இந்தியாவில் தயாராகும் இந்திய மதுபானம் அல்ல. அயல் நாட்டில் தயாராகும் அந்நிய மதுபானமும் அல்ல. மாறாக இந் தியாவில் தயாராகும் அந்நிய மது பானம். அதாவது பானம் அந்நியம். தயாராகும் இடம் இந்தியா. ஏன் இப்படி குளறுபடி குழப்பம். இந்தியா இந்திய மது பானங்களைத் தயாரிக்க வேண்டியதுதானே. அதை விட்டு ஏன் அந்நிய மதுபானங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால் அங்கேதான் இருக் கிறது ரகசியம்.

காரணம், இங்கு தயாரிக்கப் படும் மதுவுக்கான தொழில்நுட்பம் அந்நிய நாட்டு நிறுவனங்களுடையது. அந்த நிறுவனங்களின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே இவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதற்காக எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு ராயல்டி போகிறது என்கிற விவரம் தெரியவில்லை. ஆக போகிறது. எனவே இந்தக் கூட்டுக் கொள்ளையின் பொருட்டே இ.த.அ.ம. இங்கு உற் பத்தி செய்யப்படுகின்றன. இப்படி உற்பத்தி செய்யப்படும் இம் மது பானங்கள் நன்கு விற்பனையாகவும், மக்களுக்கு களி பானம் என்றால் இம்மது பானத்தை விட்டால் வேறு எதுவும் இல்லை என்கிற நிலையை உருவாக்கவுமே, ஆதிக்க அரசு உள்ளூர் களி பானங்களைத் தடை செய்து, இந்த அந்நிய மது பானங்களுக்குக் கடை விரிக்கிறது.

இதன் மூலம் அரசுக்கு கோடிக் கணக்கான ரூபாய் வரியாகக் கிடைக் கிறது என்பது ஒருபுறம் இருக்க, இம் மதுத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோடிக் கணக்கில் பணம் கொள்ளை லாபமாகப் போகிறது.

காட்டாக 750 மில்லி மதுத் தயாரிப்புக்கு அடக்க செலவு ரூ. 9/-தான் ஆகிறது என்கிறார்கள். அதை பாட் டிலில் அடைத்து சீலிட ரூ. 3/- ஆக, இதன் மொத்த செலவு ரூ. 12/-க்கு அடங்கி விடுகிறது. ஆனால் கடையில் அதன் விற்பனை விலை ரூ. 380/- அதாவது 750 மில்லி பாட்டிலுக்கு, போக்குவரத்து செலவுகள் என்று ஒரு எட்டு ரூபாய் கூட்டி 20 ரூபாயைக் கழித் தால் கூட ரூ. 360 லாபம். ஒரு பாட் டிலுக்கு 360 ரூபாய் என்றால், நாள் தோறும் விற்பனையாகும் லட்சக் கணக்கான பாட்டிலுக்கு.

மாலை நேரமானால் கடைத் தெருக்களில் மதுக் கடையிலும், மருந்துக் கடையிலும் தான் கூட்டம் மொய்க்கிறது. இப்படி விற்பனை யாகும் தொகையில் கிடைக்கும் கோடிக் கணக்கான ரூபாய் இலாபம் எங்கே போகிறது? வரியாக அரசுக்கு போகும் தொகை போக மீதம் அனைத் தும் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் போகிறது.

சரி, இதனால் மக்களுக்கு என்ன பலன்? மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று அரசே சொல்கிறது. அப்படி சொல்லியே விற்கிறது. அப்படி சொல்லி விற்கவேண்டிய அவசிய மென்ன? அரசு ஒரு காரணம் சொல் லலாம். மது மக்களுக்கு கேடு என் பதால்தான் மதுவிலக்கு கொண்டு வந்தோம். ஆனால் அதை முழுமை யாய் நிறைவேற்ற முடியவில்லை. கள்ளச் சாராயம்தான் பெருகுகிறது. இதனால் காவல் துறைக்கும் அதிகாரி களுக்கும்தான் மாமுல் போகிறதே தவிர அரசுக்கு எந்த வருமானமு மில்லை. மக்களிடமும் மதுவை ஒழிக்க முடியவில்லை. அவர்கள் கண்டதையும் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள் கிறார்கள். இதில் விஷச் சாராயம் குடித்து அவ்வப்போது மரணமும் நிகழ்கிறது. ஆகவேதான் மக்கள் இப் படி கண்டதைக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்ளாதிருக்கவும், காவல் துறைக்கும் அதிகாரிகளுக்கும் மட்டுமே மாமுல் போகாமல் அரசுக்கு வரி வருவாய் பெருகவுமேதான் இப்படி மதுக் கடைகளைத் திறக்க வேண்டிய தாயிற்று எனலாம். நியாயம். அப்படி யானால், தமிழக, இந்திய மண்ணில் காலம் காலமாக இருந்து வந்த மரபு வழிப் பானமான கள்தயாரிப்பு, விற்பனைக்கான நடவடிக்கை களை மேற்கொள்ளாமல் இ.த.அ.ம.வுக்கு அனுமதி வழங்கி அதை மட்டும் விற்பனை செய்வதும், மரபு வழி பானங்களுக்குத் தடை விதிப்பதும் ஏன்?

இதைத்தான் தமிழக தென்னை, பனை விவசாயிகள், கள் உற்பத்தியாளர் கள் கேட்கிறார்கள். இதற்காக அவர்கள் வைக்கும் வாதங்கள் நியாயமானவை. சிந்திக்கத் தக்கவை.

* விவசாயத் தொழில் என்பது நாளுக்கு நாள் நசிந்து வருகிறது. அதன் மூலம் கிடைக்கும் வருவாய் போது மானதாக இல்லை. இந்நிலையில் கள் இறக்க அனுமதி தந்தால் அதன் மூலம் தென்னை, பனை தொழில் பெருக வாய்ப்புண்டு. மரமேறும் தொழி லாளர்களுக்கும் வேலை வாய்ப்பு பெருகும்.

* இந்தியாவில் சுமார் 8 கோடி பனை மரங்கள் இருக்கின்றன. அதில் தமிழ் நாட்டில் மட்டுமே 5 கோடி மரங்கள் உள்ளன. இதுவன்றி 4.5 கோடி தென்னை மரங்களும் இங்கு உள்ளன.

இந்த 9.5 கோடி மரங்களிலும் கள் இறக்கத் தொடங்கினால், தொழிலும், வேலை வாய்ப்பும் வெகுவாகப் பெரு கும். தமிழக பொருளாதார நிலையும் மேம்படும்.

* அந்நிய மதுபானங்களை விட கள் பல்வகையிலும் சிறப்பானது. மேன்மை மிக்கது. அந்நிய மதுவில் 42ரூ சாராயம் உள்ளது. ஆனால் கள்ளில் 4.5ரூ மட்டுமே. அது மட்டுமல்ல, கள் காலம் காலமாக சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. அதில் கால்சியம் 61 ரூ, மக்னீஷியம் 25.3ரூ இரும்புச் சத்து 1ரூ பிற விட்ட மின்கள் 4ரூ அடங்கியுள்ளன. சர்க்கரை வெறும் 6ரூ மட்டுமே.

* ரத்த அழுத்த நோயுள்ளவர்கள் அந்நிய மதுவை அறவே தொடக் கூடாது என மருத்துவர்கள் சொல்வர். ஆனால் கள்ளில் அந்தச் சிக்கலெல்லாம் எதுவும் இல்லை. தாராளமாக அருந் தலாம். சொல்லப் போனால் அள வோடு முறையாகப் பருகினால் இதையே மருந்தாகவும் பயன்படுத் தலாம்.

* உற்பத்தியாகும் அனைத்து பானத்தையுமே கள்ளாகத்தான் பயன் படுத்த வேண்டும் என்று இல்லை. தற்போது போலவே பதநீராகவும் பயன் படுத்த பாட்டில்களில் அடைத்து விற்கலாம்.

* அனைத்தையும் உள் நாட் டிலேயே விற்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இ.த.அ.ம. போல் பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கணிசமான அளவில் அந்நியச் செல வாணியையும் ஈட்டலாம். தற்போது இலங்கை அவ்வாறு செய்து பெரும ளவில் பணம் ஈட்டுகிறது.

* இத்தொழிலை அனுமதிப் பதன் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். 50 லட்சம் விவசாயி களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கவும் வாய்ப்புண்டு. மக்களும் அந்நிய பானத்தைக் குடித்து காசையும் கரைத்து உடம்பையும் கெடுத்துக் கொள்ளாமல் அவர்களுக்கும் நல்ல பானம் கிடைத்த மாதிரியிருக்கும்.

ஆகவே, இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழக அரசுஇருபது ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த கள் இறக்குதல் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்று கள் இறக்க அனுமதிக்க வேண்டும். அதைச் சட்டப் பூர்வ தொழில் ஆக்கவேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 12 இடங்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ள கொங்கு முன்னேற்றப் பேரவை இக்கோரிக்கை யில் உறுதியோடு நின்று போராடி வருகிறது.

இவர்கள் தவிர தமிழகத்தின் பல்வேறு உழவர் அமைப்புகளும் இதே கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றன.

இவ்வமைப்புகள் அனைத்துமே எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் இந்தப் பிரச்சினையை முதன்மையான கோரிக்கையாக வைத்து, கள் இறக்க அனுமதிப்பதான வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே வாக்கு என்கிற முடிவில் இருக்கின்றன.

தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம் முதலான கட்சிகளும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் துணை நிற்கின்றன.

கள் விஷயத்தில் காங்கிரசில் இருந்தபோது காந்தியின் பேச்சைக் கேட்டு கள்ளுக் கடை மறியல் செய்து, தனது தோப்பிலிருந்த தென்னை மரங் களை வெட்டிய பெரியார் பின்னாளில், இது விஷயத்தில் புதிய தெளிவு பெற்று தன் நிலையை மாற்றி, ‘கள் உழைக்கும் மக்கள் பானம்என்று குறிப்பிட்டது நினைவு கூறத்தக்கது. ஆகவே, பெரி யார் வழி வந்ததாகச் சொல்லிக் கொள் ளும் கட்சிகளும் இக்கோரிக்கையில் தடை சொல்ல வாய்ப்பில்லை. அக் கட்சிகளும் இதற்கு ஆதரவாகவே இருக்கும்.

இப்படி இக்கோரிக்கைகளுக்கு இருக்கும் பெருமளவு ஆதரவை அரசு உணர்ந்த நிலையில்தான் இதுபற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க சிவ சுப்பிரமணியம் ஆணைக் குழுவை நியமிக்க அது பல இடங்களில் கள ஆய்வு நடத்தி கருத்து கேட்டுள்ளது.

நெல்லை பகுதியில் இந்த ஆய்வுக் குழு முன் கருத்து தெரிவித்த பலரும் கள் இறக்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுமென வலியுறுத்திய துடன், நாங்குநேரி போன்ற வாய்ப்புள்ள பகுதி களில் கள் பதனிடும் தொழிற் சாலை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்சூழ்நிலையில் இது குறித்து நாம் கருத்து தெரிவிக்க விரும்புவது, கள் இறக்குவதற்கான நியாயங்களாக மேற்குறித்துள்ள கருத்துகளுடன், அரசியல் ரீதியில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, தமிழ்த் தேசிய நோக்கில், நாம் நமது தேவைக்கான பொருள்களை உள் நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். உள்நாட்டு உற்பத்திப் பொருள்களையே வாங்க வேண்டும், பயன் படுத்த வேண்டும் என்கிற நோக்கிலும் இதை அணுக வேண்டும் என்பதுதான்.

மதுவை, களி பானங்களை மக் கள் சமூகத்தை விட்டே முற்றாக அப் புறப்படுத்தி விடமுடியாது. அள வோடும் வரம்போடும் அதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது தான் என்னும் போது, அதற்கு உள்நாட்டு பானங்களைத் தயாரிப்பதும் பயன் படுத்திக் கொள்வதும் தானே நியாயம். அதை விட்டு அந்நிய பானங்களுக்கு மக்களை ஏன் அடிமைப் படுத்த வேண்டும்? ஆகவே ,

1. தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு கள் இறக்க விதித்துள்ள தடையை நீக்கி அதை சட்டப்பூர்வ தொழிலாக்க வேண்டும்.

2. வாய்ப்புள்ள இடங்களில் கள் பதனிடும் தொழிற்சாலைகள் அமைத்து அதற்கான விற்பனைச் சந்தையைப் பெருக்க வேண்டும்.

3. புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் பனை, தென்னை சாகுபடி செய்து பெரும் தோப்புகளை உருவாக்க வேண்டும்.

4. தற்போதுள்ள இ.த.அ.ம. கடைகளைப் படிப்படியாகக் குறைத்து உள்நாட்டு - அயல்நாட்டு மதுபானக் கடைகள் 10-க்கு 1 என்கிற விகிதத்தில் இருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

5. மதுவை அருந்துகிறோமோ இல்லையோ, விரும்புகிறோமோ, அல்லவோ இந்தப் பாகுபாடெல்லாம் பார்க்காமல், சனநாயக சக்திகள், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள், தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் இக்கோரிக்கை களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

எனவே, உள்நாட்டுக் களி பானம் குறித்த புரிதலை அவர்களிடையே உருவாக்கி, நடைமுறைக்கு சாத்திய மற்ற மது ஒழிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு நேரத்தையும் உழைப்பையும் அதில் வீணாக்கிக் கொண்டிருக்காமல் மது ஒழிப்புப் பிரச்சாரத்தைக் கை விட்டு, மது விழிப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மக்களுக்கு வழி காட்ட வேண்டும். மக்கள் நலனில் அக்கறை யுள்ள நல்லெண்ண நோக்காளர்கள் அந்நிய களி பானத்திலிருந்து அவர்களை மீட்கவேண்டும்.

- *

வருவாய் வேலைவாய்ப்பு பெருகும்

மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்தும் முடிவு ஓ. பன்னீர்செல்வம் முதல்வராயிருந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நியாயங்களாக அப்போது அரசு அறிவித்தது, அரசுக்கு வருவாய் பெருகும். இளைஞர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதுதான்.

29-11-2003 முதல் மதுக் கடைகளைத் தானே ஏற்று நடத்திய, அதாவது டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்திய அரசு 2006இல் இது சார்ந்த தன் சாதனைப் பட்டியல்களையும் அறிவித்தது.

இதன்படி 2002 - 2003ஆம் ஆண்டு தனியார் ஏலம் மூலம் கடைகள் நடத்தப்பட்ட போது மதுபான சில்லறை விற்பனை 3877 கோடி. ஆனால் அரசு ஏற்று நடத்திய 2003 - 2004 ஆண்டு சில்லறை விற்பனை 5441 கோடி. ஆக 1564 கோடி ரூபாய் கூடுதல் விற்பனை. இது அரசின் சாதனை என்றது.

அப்போதைய கணக்கின்படி தமிழ்நாடு முழுவதும் சில்லறை விற்பனைக் கடைகள் கிராமப் புறங்களில் 3711-ம் நகர்ப் புறங்களில் 3159ம் ஆக மொத்தம் 6870 கடைகளும் இக்கடைகளுடன் 4016 அருந்தகங்களும் இயங்குவதாகவும் அறிவித்தது.

இக்கடைகள் மற்றும் அருந்தகங்களில் விற்பனையாளர்களாகவும், அருந்தக மேற்பார்வையாளர்களாகவும் மற்றும் நிர்வாக அதிகாரிகளாகவும் மொத்தம் 33,600 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் அறிவித்தது. இந்த எண்ணிக்கை இந்த மூன்று ஆண்டுகளில் மேலும் கூடியிருக்கலாம். ஆக அரசுக்கு வருவாய், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று தொடங்கியதுதான் இந்த அரசு மதுபானக் கடைகள்.

இப்படி அரசுக்கு வருவாய், மக்களுக்கு வேலை வாய்ப்பு என்கிற இதே நோக்கில் பார்த்தாலும் கள்ளுக் கடைகளைத் திறப்பதால் அரசுக்கு ஒன்றும் நட்டம் ஏற்பட்டு விடப்போவதில்லை. இ.த.அ.ம. விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது கள்ளுக் கடைகளைத் திறப்பதன் மூலம் அதில் இழக்கப்படும் வருவாய், கள் விற்பனை மூலம் கிடைத்துவிடும்.

தமிழ்நாட்டில் உள்ள தென்னை, பனை மரங்களிலிருந்து கள் இறக்க அனுமதிக்கப்பட்டால்

1 கோடி மரத்திலிருந்தே ஆண்டிற்கு 2000 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. தவிரவும் இதன் மூலம் 60 இலட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மரமேறுவோர், கள் விற்பனை செய்வோர் பயன் பெறுவர் எனவும் கணக்கிடப்படுகிறது. ஆகவே, இந்த நோக்கிலும் அரசுக்கு மக்களுக்கு இழப்பு இல்லை என்பதே உண்மை.

- எனவே, உடல் நலநோக்கு ரீதியிலும், மரபுவழி சுதேசி தொழில், சுதேசி பானம் என்கிற வகையிலும், மண்ணின் மக்களுக்கே வேலை வாய்ப்பு, வருவாய் என்கிற ரீதியிலும், கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே வேண்டுகோள்.

தள்ளாடும் சட்டம்

மதுவிலக்கைத் தளர்த்தி மதுபானக் கடைகளைத் திறந்தபோது, 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானங்கள் விற்கக் கூடாது என அரசு ஆணையிட்டிருந்தது. அதாவது இளைஞர்கள் கேடு விளைவிக்கும் இம் மதுப் பழக்கத்திற்கு ஆட்பட்டு விடக்கூடாது, இதற்கு அடிமையாகி விடக் கூடாது என்பதற்காக இச்சட்டத்தை பிறப்பித்திருப்பதாக அரசு சொன்னது.

ஆனால் இந்த சட்டம் பெயரளவில்தான் இருந்து வருகிறதே தவிர, நடைமுறையில் இளம் சிறார், சிறுமியர் யார் போய் கேட்டாலும் தங்கு தடையின்றி தாராளமாக மது விற்பனை செய்யும் நிலையே இருந்து வருகிறது.

இதில் கெடுபிடி செய்தால் விற்பனை பாதிக்கும் என்பதால் விற்பனையாளர்கள் யாரும் இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. அதிகாரிகளோ காவல் துறையோவும் இதைக் கண்டு கொள்வதில்லை. நடப்பில் இப்படி பல விதி மீறல் நடந்து கொண்டிருப்பதால்தான் சாராய வியாபாரிகள், தனியார் விற்பனைக் கடைகளில் காவல்துறை மாமுல் வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருப்பது போல் டாஸ்மாக் விற்பனையாளர்களிடமும் மாமுல் வாங்கிக் கொண்டு எதையும் கண்டு கொள்ளாமல் போய்விடுகின்றனர்.

- இதே போலவேதான் அருந்தகங்களிலும். 21 வயதுக்குட் பட்டவர்களுக்கு மது விற்பனையே செய்யக்கூடாதென்றால், அருந்தகங்களில், அவர்கள் எப்படி உள்ளே நுழைய முடியும். ஆனால் கணிசமான அளவில் கடையில் முண்டியடிப்பதும், அருந்தகங்களில் நண்பர் குழாமுடன் வந்து கொண்டாடுவதும் பெரும்பாலும் இளைஞர்கள். இதற்கும் சேர்ந்து மாமுல் வாங்கிக் கொண்டே எல்லாவற்றையும் அனுமதித்து வருகிறது காவல்.

காட் ஒப்பந்தம் திணிக்கும் அந்நிய மது

தற்போதும் நடப்பில் உள்ள மது விலக்குச் சட்டம் வெள்ளை ஆட்சியில் 1937இல் நிறைவேற்றப்பட்ட சட்டமே ஆகும். மாநில அளவிலான இந்தச் சட்டம் இடையில் பல்வேறு மாற்றங்கள், திருத்தங்களுக்கு உட்படுத்தப் பட்டபோதும், அடிப்படைச் சட்டம் இந்த 1937தான். ஆகவேதான் தற்போதும் இது மதுவிலக்குச் சட்டம் 1937 என்றே அழைக்கப்படுகிறது.

இச்சட்டத்தில் இடையில் செய்யப்பட்ட திருத்தங்களில் மிக முக்கியமானது, அந்நிய மது பானங்களுக்கு தங்கு தடையற்ற அனுமதி வழங்கியதுதான்.

இந்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கு காட் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதைத் தொடர்ந்து அது மாநில அரசை 1937 சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

2001 முதல் தொடர்ந்த இந்த வற்புறுத்தலுக்கு இணங்க 2006 நவம்பரில் கருணாநிதி ஆட்சியின்போது இதற்கான திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி அந்நிய மதுபானங்கள் தங்கு தடையின்றி இங்கே உலா வர அனுமதிக்கப்பட்டது.

இதற்கு தில்லி அரசும் தமிழக அரசும் சொன்ன காரணங்கள் காட் ஒப்பந்தப்படி அந்நிய உற்பத்திப் பொருள்களின் இறக்குமதிக்கு இங்கே நாம் கட்டுப்பாடு விதிக்க முடியாது. அப்படி விதிப்பது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.

காட்டாக தமிழகத்திலிருந்து கணிசமாக பின்னலாடைகளும், தோல் பொருள்களும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. நாம் இங்கு மது இறக்குமதியைத் தடுத்தால் அவர்கள் நமது பொருள்கள் அங்கே இறக்குமதியாவதைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள்.

- ஆக நாம் நமது சுற்றுச் சூழலை, அதாவது நிலத்தை, நிலத்தடி மற்றும் ஆற்று நீரை மாசுபடுத்தி, நம் வாழ்வாதரங்களைக் கெடுத்து தயாரித்து அனுப்பும், பின்னலாடைகளுக்கும், தோல் பொருள்களுக்கும் சந்தை வேண்டுமென்றால், எங்கள் மதுவை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்று நிபந்தனை விதித்து நம்மை அந்நிய மதுவுக்கு அடிமையாக்கியிருக்கிறார்கள் ஐரோப்பிய எஜமானர்கள்.

உலக சந்தைக்குப் பலியாகும் உள்ளூர் சந்தை

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற ள்ளூர் தொழில் நுட்பத்தையும் உள்ளூர் உற்பத்திகளையும் அதைப் பயன்படுத்தும் மக்கள் மனோநிலையையும் மாற்றி, தங்கள் தொழில் நுட்பம் மற்றும் தங்கள் உற்பத்திப் பொருள்களைப் புகுத்தி, மக்கள் அதை வாங்கிப் பயன்படுத்தும் மோகத்தை ஊடகங்கள் விளம்பரங்கள் மூலம் உருவாக்கி தங்கள் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும், வலுப்படுத்தும் முயற்சி என்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒன்று.

இதே போக்குதான் மக்களின் கேளிக்கை பானத்திலும் நடந்து வருகிறது. உள்ளூர் மக்களின் கள் குடிப் பழக்கத்தைத் தடுத்து, கள் உற்பத்தியைத் தடுத்து, மக்கள் மனதையும் அந்நிய மதுபானத்திற்கு அடிமையாக்கினார்கள். இதன் விளைவுதான் வீதிகள் தோறும் இ.த.அ.ம.

பன்னாட்டு நிறுவனங்களின் இந்தப் படையெடுப்புக்குத்தான் இந்திய, தமிழக அரசுகள் பட்டுக் கம்பளம் விரித்து அதற்கு துணை போகின்றன. தில்லி ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பெரு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்களோடு சேர்ந்து கூட்டுக் கொள்ளையடிக்கிறார்கள் என்றால், தமிழகக் குட்டி முதலாளிகள் அதற்குத் துணை போகிறார்கள். அதற்குரிய சன்மானத்தைப் பெறுகிறார்கள். எல்லாத் துறையிலும் இதுதான் நடந்து வருகிறது.

- சமீபத்தில் தில்லி அரசு இரயில்வே துறை ஓர் அறிவிப்பு செய்துள்ளது. இதன்படி தொடர் வண்டிகளில், நிலையங்களில், சந்திப்புகளில் இனி அந்நிய குளிர்பானமான கோகோ கோலா, பெப்சி நிறுவன பானங்களை மட்டும்தான் விற்க வேண்டுமாம். வேறு உள்ளூர் தயாரிப்புகள் எதையும் விற்கக் கூடாதாம். எப்படியிருக்கிறது கதை?

 

Pin It