தொடர்புடைய படைப்புகள்

24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,102 பார்ப்பன பண்டிதர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்படுள்ளனர். ஏழு கோடி பேர் பேசும் தமிழைக் கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுள்ளனர். மத்தியப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாகிவிட்டது. இதுதான் பிரதமர் மோடி பெருமை பேசும் 'பிஎம் ஸ்ரீ' பள்ளியின் புள்ளிவிவரம்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்புயுள்ளார். பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் நாடு முழுக்க எத்தனை உள்ளன? அவற்றில் எத்தனை இந்தியல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்? என்று கேட்டிருந்தார்.

எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி, இந்தியா முழுமையும் 14,500 பள்ளிகளைப் பி.எம்.ஶ்ரீ திட்டத்தின் கீழ் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும், இதுவரை 13,092 பள்ளிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தி அல்லாத மொழிகளில் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டதற்கு, சமஸ்கிருத ஆசிரியர்கள் 6,102 பேரும், உருது ஆசிரியர்கள் 1,994 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில மொழிகளுக்கு 9,152 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிலில் சமஸ்கிருத ஆசிரியர்களே அதிக அளவில் 6,102 பேர் நியமிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மாநில மொழியாக இவர்கள் சமஸ்கிருதத்தை மட்டுமே ஏற்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று. எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகளிலேயே மிகக் குறைவான பேர் அதாவது 24,821 பேர் மட்டுமே அதாவது 0.002 சதவீதம் பேர் பேசுகிற சமஸ்கிருதத்திற்கு 6,102 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது சாக்குக்குள் ஒளிந்திருக்கும் பூனை சமஸ்கிருதம் என்பதைத் தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது. இரண்டாவது மொழியாக, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தைப் பேசுபவர்களைச் சேர்த்தால் கூட ஒரு விழுக்காடு கூட வரவில்லை. கால் விழுக்காடே ஆகும்.

மத்தியப் பிரதேசத்தில், ராஜஸ்தானில், உத்தரப் பிரதேசத்தில் தமிழ் மூன்றாம் மொழியாக வரலாம் என்றெல்லாம் இங்கு கதைகளை அவிழ்த்து விட்டார்கள். ஆனால் சமஸ்கிருத ஆசிரியர்கள் மத்தியப் பிரதேசத்தில் 1,211 பேர். இது அங்குள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிகம் (944 பள்ளிகள்). ஒரு பள்ளிக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா போன்ற பாஜக ஆளும் மாநிலங்களின் பி.எம்.ஶ்ரீ பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்.

விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.