வேட்பாளர்: என் பேரை "தர்மம்"னு மாத்திக்கச் சொல்றீயே....ஏம்பா?
உதவியாளர்: தேர்தல்ல நீங்க தோத்துட்டாக் கூட "தர்மம்" தோத்துப்போச்சுன்னுதானே மக்கள் பேசிப்பாங்க!
.........................................
சிறுவன்: ரோடு போடுற மெஷின்னா எப்படியிருக்கும்பா?
அப்பா: தேர்தல் வரட்டும்...தெருவுக்கு நாலு நிக்கும், காட்டுறேன்!
.........................................
வேட்பாளர்: அந்த தொகுதிக்கு "கால்நடை"யாவே போயி ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!
தொண்டர்: "மனுஷனா"வே போயி கேளுங்க தலைவரே!
.........................................
"ஓட்டுப் போட்டுட்டு வெளியே வர்ற வாக்காளர்களுக்கெல்லாம் அந்த வேட்பாளர் ஏதோ ஸ்வீட் தர்றாரே...என்னங்க அது?"
"வேறென்ன...."அல்வா"தான்!"
.....................................................................................................
-கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
தொடர்புடைய படைப்புகள்
தேர்தல் சிரிப்புகள்
- விவரங்கள்
- கிரிஜா மணாளன்
- பிரிவு: அரசியல்
More articles by கிரிஜா மணாளன்
- ஒரே ஒரு இளநி! (02 மார் 2010)
- சுருதிப்பெட்டி இல்லாமல் கச்சேரி (29 ஜன 2010)
- ஜாதகம் சரியில்ல... (29 ஜன 2010)
- புத்தியில்லாத எழுத்தாளர் (29 ஜன 2010)
- மேனேஜரும், உதவியாளரும் (29 ஜன 2010)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.