2.4.2011 சனிக் கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு சேலம் விசயராகவாச்சாரியார் அரங்கத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் சேலம் மக்கள் குழு சார்பாக டந அயளாயடந (தீ பந்தம் ஏந்திய பெண்) என்ற நாடகம் நடைபெற்றது. ஓஜோஸ் என்ற இளம்பெண் ஒருவர், இந் நிகழ்ச்சியை தனி ஒருவராக நிகழ்த்திக் காட்டினார். சிவிக் சந்திரன் என்பவர் மலையாளத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியை, ஓஜோஸ் ஆங்கிலத்தில் பல நகரங்களில் நடத்தி வருகிறார். ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறக் கோரி சுமார் பத்து ஆண்டுகளாக உண்ணாநிலையிலிருந்து போராடும் கவிஞர் இரோம் சர்மிளா சாணு என்பவரை கதாபாத்திரமாக்கி அவரது வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் இது. மணிப்பூரின் வரலாறு, மணிப்பூரில் தொடரும் அவலங்கள், யகளயீய (ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958) சட்டத்தின் முறைகேடுகள் ஆகியவற்றை விளக்கும் இந்நாடகம் சுமார் 45 நிமிடம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி இந்நிகழ்வில் பார்வையாளராக கலந்து கொண்டார்.
தொடர்புடைய படைப்புகள்
பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011
மணிப்பூர் இராணுவ ஒடுக்குமுறையை சித்தரிக்கும் நாடகம்
- விவரங்கள்
- பெ.மு. செய்தியாளர்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஏப்ரல் 2011
More articles by பெ.மு. செய்தியாளர்
- கங்கை ஆற்றில் அசைவம் குற்றமா? (30 ஜூலை 2026)
- ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை! (23 ஜூலை 2026)
- பார்ப்பன சடங்குகளை ஒதுக்கிய பி.என் சண்முகம் நினைவேந்தல்! (23 ஜூலை 2026)
- காவல் நிலையத்தில் கிடா வெட்டுவதா? (06 ஜூலை 2026)
- கேத்ரின் - இலக்கியன் மதம் கடந்த மணவிழா! (06 ஜூலை 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.