‘ஜாதியில் திருமணம்! மதத்தில் பார்ப்பனியம்! வாழ்வில் மூடநம்பிக்கை! என்ற மூன்று கருத்துகளை முன்னிறுத்தி `தடை, அதை உடை!’ என்ற முழக்கத்தோடு கழகத் தோழர்களின் பரப்புரைப் பயணம் திருச்சி, நாகர்கோவில், போராவூரணி என்ற மூன்று முனைகளிலிருந்து புறப்பட்டது.

போராவூரணியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும், நாகர்கோயிலில் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரனும், திருச்சியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும் பயணத்தை துவக்கி வைத்தனர். போராவூரணியிலும், திருச்சியிலும் பொதுக்கூட்டமாக நடந்தது.dvk meeting in peravooraniகழகப் பொருளாளர் திருப்பூர். துரைசாமி தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் போராவூரணி பயணக் குழுவினரோடு இணைந்து பயணம் செய்து வருகின்றனர். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன் இருவரும் பயணக்குழுவினரின் முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் 4 பரப்புரைக் கூட்டங்களை நடத்துகின்றனர். நூல்விற்பனை, மக்களிடம் உண்டியல் மூலம் நிதி திரட்டுதல், துண்டறிக்கை வழங்கல் என்று தோழர்கள் பணியாற்றுகிறார்கள்.

நாகர்கோவில் அணி:

சேலம் அணியின் பயணக் குழு 05.08.2026 புதன் மாலை 6.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் டேவிட் தலைமையில் மாலை அணிவித்து கொள்கை முழக்கத்தோடு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. பயணக் குழுத் தோழர்களுக்கு இரவு உணவு சேலம் மாநகரத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் 06.08.2026 மாலை 5.00 மணிக்கு மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன், கோவிந்தராஜ் ஆகியோரின் பகுத்தறிவு பாடல்களுடன் முதல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஜா. சூசையப்பா தலைமை வகித்தார். குமரி மாவட்டப் பொருளாளர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். குமரி மாவட்டச் செயலாளர் நீதியரசர் வரவேற்புரை ஆற்றினார். திமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் ஆர். மகேஷ் பரப்புரையைத் துவக்கி வைத்தார்.

கழக பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், அமைப்புச் செயலாளர் ஈரோடு ப.இரத்தினசாமி, பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு தமிழரசன், தமிழ் மதி, கோபிசெட்டிப்பாளையம் ரமேஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, திராவிட தமிழர் கட்சியின் மாநில நிதிச் செயலாளர் சங்கர் ஆகியோர் பரப்புரையின் நோக்கத்தை பொதுமக்களிடத்தில் எடுத்துரைத்தனர். நிறைவாக கொளத்தூர் ராஜா நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. பயணக் குழு தோழர்களுக்கு இரவு உணவு திமுக குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர். மகேஷ் ஏற்பாடு செய்தார். பயணக் குழு தோழர்களுக்கு பயனாடை அணிவித்தார்.

இரண்டாம் நாள்: மக்கள் பேராதரவுடன் நாகர்கோவில் பகுதியில் 07.08.2026 வெள்ளி காலை 10.00 மணிக்கு தக்கலை பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு ஆற்றூர் பகுதியிலும் கூட்டம் நடைபெற்றது. தொடக்க நிகழ்வாக மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.

கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், நம்பியூர் ஒன்றியச் செயலாளர் ரமேஷ், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, பெரியார் தொழிலாளர் கழகத்தின் விவசாய அணித் தலைவர் ரவி ஆகியோர் பரப்புரைப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக மேட்டூர் சீனி நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது. பயணக் குழுத் தோழர்களுக்கு உணவு ஏற்பாடுகளை குமரி மாவட்டப் பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

மூன்றாம் நாள்: ஏர்வாடியில் சங்கிகளின் சலசலப்பைத் தகர்த்து பரப்புரை ஆக-8, சனி காலை 10.00 மணிக்கு குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியிலும், மதியம் 12.30 மணிக்கு பணகுடி, மாலை 5.00 மணிக்கு ஏர்வாடி பகுதியில் நடைபெற்றது.

மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பை ஒட்டிய கழகப் பரப்புரைப் பாடலான “ஜாதியும் மதமும் வேர் விட்டு வளருது சனாதானம் நம்மை ஆளத் துடிக்குது” “நூற்றாண்டு கால திருப்பரங்குன்றம் கலவரவம் தொடங்க பார்க்குது சங்கிகள் கூட்டம்” என்ற பாடல் பாடும்போது அங்கிருந்த ஆர்.எஸ்.எஸ்- காரர் வேகமாக மேடைக்கு அருகில் வந்து இந்து முஸ்லீம் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்கள் இப்படி பாடக் கூடாது என்றும், அங்கு சுற்றி இருந்தவர்களை வேடிக்கை பார்க்காதீர்கள் இவர்களை விரட்டுங்கள் என்றும் மக்களை நோக்கி அந்த நபர் கலவரத்தை தூண்டும் விதமாக கூச்சலிட்டார். இதற்கு தோழர்கள் உடனடியாக தக்க பதிலடி கொடுத்து, அதன்பிறகு 2 மணி நேரம் நிகழ்ச்சியை நிறைவு செய்தனர். அங்கு கூடியிருந்த மக்கள் கடைசி வரை கலையாமல் கை தட்டி உற்சாகப்படுத்தி பெரும் ஆதரவு அளித்தனர்.கூட்டத்திற்கு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் தலைமை வகித்தார். குமரி மாவட்டச் செயலாளர் நீதி அரசர் முன்னிலை வகித்தார். சுடர் மணி வரவேற்புரை ஆற்றினார். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், ஆத்தூர் நகரச் செயலாளர் கணபதி, ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து கருத்துரையாற்றினர். நிறைவாக கொளத்தூர் கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

பயணக் குழுத் தோழர்களுக்கு காலை உணவு குமரி மாவட்ட நீதியரசர் ஏற்பாடு செய்திருந்தார். மதிய உணவு மற்றும் இரவு உணவு திருநெல்வேலி மாவட்டத் தலைவர் பால்வண்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.

தோழர்கள் கொளத்தூர் கணேசன், ராஜா தலைமையில் ராமச்சந்திரன், அம்ஜத் கான், கோபிசெட்டிபாளையம் தோழர்கள் துரைசாமி, நடராஜன், மயில்சாமி, கொளத்தூர் குமரேசன், வனவாசி நகர தலைவர் செந்தில் ஆகியோர் கடைவீதி வசூல் மூலம் ரூ.11,137 நிதி திரட்டினர். கழக வெளியீடுகள் ரூ. 2,270 விற்பனையானது. புத்தக விற்பனைப் பணியை தோழர்கள் தங்கதுரை,கோகுல், தேவராஜ் ஆகியோர் மேற்கொண்டனர்.

அனைத்து பரப்புரைக் கூட்டங்களிலும் ஜாதி எதிர்ப்பு, பகுத்தறிவு மூடநம்பிக்கை ஒழிப்பு பாடல்களை மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு கோவிந்தராஜ் மற்றும் நாட்டுப்புற பாடகர் சித்திரசேனன் ஆகியோர் உணர்ச்சியுடன் பாடினர்.

அமைப்புச் செயலாளர் ஈரோடு ப. இரத்தினசாமி, தலைமைக் குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன், பயண ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, நங்கவள்ளி நகரச் செயலாளர் சந்திரசேகரன், சேலம் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரபாகரன், சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், தமிழ்நாடு மாணவர் கழகம் கவியரசு, கொளத்தூர் செந்தமிழ் கலையமுதன், பெரியார் நம்பி, குமரி மாவட்டத் தோழர்கள் சாகுல் ஹமீத், மஞ்சு குமார், ஐசக் ராஜ், திருநெல்வேலி மாவட்டக் கழகத் தோழர்கள் கசமுத்து, தாஸ், முகைதீன், ஜாகிர் உசேன், சுரேஷ், குணசீலன், வெள்ள பாண்டி, நம்பிராஜன், முருகன், திமுக சார்பில் நாகர்கோவில் நகர கிழக்குப் பகுதிச் செயலாளர் துரை, வட்டச் செயலாளர்கள் பாலா, ஜீவா மற்றும் நிர்வாகிகள் சிதம்பரம், ஜோனி, ராஜேஷ் ரத்தினமணி, நாஞ்சில் ராஜ், சத்ய சாய்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

பரப்புரைப் பயணத்திலிருந்து சில துளிகள்….

திருநெல்வேலி பணகுடி பகுதியில் கழகப் பரப்பரைச் செயலாளர் பால்.பிரபாகரன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் உற்சாகம் பெற்று மேடைக்கு வந்து தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டினார். தோழர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பணகுடி பகுதியில் பரப்புரையைக் கவனித்துக் கொண்டிருந்த பார்வையாளர் ராஜலட்சுமி பயணக் குழு தோழர்களை பாராட்டி குளிர்பானம் வழங்கினார். அவருக்கு கழக வெளியீடுகளை தோழர்கள் வழங்கினர்.

அதிராம்பட்டினம் பள்ளிகொண்டான் பகுதியைச் சார்ந்த தோழர்கள் ராஜேஷ், வினோத், மகேஷ் ஆகியோர் கழகப் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆடை போர்த்தி கழக வெளியீடுகளை வழங்கினார்.

கோவை ’தோழர்’ அறக்கட்டளை சாந்தகுமார் பேராவூரணி அணி தோழர்களுக்கு முதலுதவி மருந்து பொருட்களை வழங்கினார்.

பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துக்களை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர்.

திருச்சி பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் இரண்டு நாட்களும் தனது இல்லத்தில் பயணக்குழு தோழர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அய்யாவுக்கு வயது 85. பயணக்குழு அரியலூர் நோக்கி புறப்படுவதற்கு முன் இவ்வாறு கூறி வழியனுப்பினார். ”யார் யாரோ சொல்லுகிறார்கள் சிங்கப்படை என்று; ஆனால், மக்களுக்காக களத்தில் நிற்கும் இது தான் சிங்கப்படை”.

திருச்சி அணியை தலைமையேற்று நடத்தும் உமாபதிக்கும், குழுவில் இணைந்து பயணிக்கும் பெரியார் பிஞ்சு திராவிட மகிழனை ’இளம்புலவர்’ என்று பாராட்டினார். ஆண் தோழர்களோடு சமமாக இணைந்து பயணிக்கும் இரண்யாவுக்கும் பாராட்டு தெரிவித்து ஆடை போர்த்தினார்.

சமூநீதிப் பேரவை மாவட்டச் செயலாளர் மேகநாதன் திருச்சி பயணக் குழு தோழர்களுக்கு குளிர்பானங்களை வழங்கி ரூ.500 நன்கொடை அளித்தார்.

திருச்சி தொடக்கவிழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர் பானுமதி பயணக் குழுவினரை பாராட்டி ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

அரியலூரில் தெருமுனைக் கூட்டம் பொதுக்கூட்டம் போல் மிகச்சிறப்பாக நடந்தது. கழகத் தோழர் பாரி.சிவா சிறப்பான முன்னேற்பாடுகளை செய்திருந்தார். திமுக ஒன்றியச் செயலாளர் எழில்மாறன் 50-க்கும் மேற்பட்ட தோழர்களோடு பங்கேற்றார்.

கழகத் தலைமைக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை இளையராசா அரியலூர் நிகழ்வில் பங்கேற்று ரூ.5000 நன்கொடை வழங்கினார்.

திருச்சியில் நடந்த பயணத் தொடக்க விழாவில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழுவில் பங்கேற்ற தோழர்கள் மற்றும் கலைக் குழுவினர் 18 பேருக்கும் தலா ரூ.1,000 அன்புப் பரிசாக வழங்கினார்.  

திருச்சி அணி:

துவக்க பொதுக்கூட்டம் திருச்சி மேலப்புலிவார்டு பகுதியில் ஆக-6 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பயணக்குழு தலைவர் உமாபதியிடம் கழகக் கொடியைத் தந்து பயணத்தைத் துவக்கி வைத்தார்.dvk campaign 720டார்வின் தாசன் தலைமை தாங்கினார். பெரியார் விருதாளர் தி.நெடுஞ்செழியன், தலைமை நிலையச் செயலாளர் தபசிகுமரன் ஆகியோர் கருத்துரையாற்றினர். சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மற்றும் லதா சத்யா குழுவினரின் பகுத்தறிவுப் பாடல்களை பாடினர். தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகரன் பயணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். கழகத் தோழர்கள் மணிகண்டன், குணா உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து உதவினர்.

2-ம் நாள்: திருச்சி புறநகர் அண்ணா நகர் 3வது பேருந்து நிலையம், MIET குண்டூர், சோமரசம்பேட்டை, அல்லித்துறை ஆகிய பகுதிகளில் ஆகஸ்ட்-7, அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், கருப்பு கோகுல் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

மூன்றாம்நாள்: லால்குடி, அரியலூர் பேருந்து நிலையம், ஆர்.எஸ் மாத்தூர் ஆகிய இடங்களில் ஆகஸ்ட்-8 அன்று பிரச்சாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஸ்டான்லி, திமுக மாவட்டத் துணை அமைப்பாளர் ஓரம்போ சுரேஷ் ஆகியோர் பரப்புரை பயணம் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன் கருத்துரையாற்றினார். பாரி சிவா கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் துரை. தாமோதரன் நடத்திய "மந்திரமா? தந்திரமா?" நிகழ்ச்சி, திரண்டிருந்த மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திமுக ஒன்றியச் செயலாளர் எழில்மாறன், திருச்சி பயணக்குழு தோழர்களுக்கு ஆடை போர்த்தி வரவேற்றதுடன், உணவு மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். எழில்மாறனுக்கு கழகப் பொதுச்செயலாளர் எழுதிய ‘ஆரிய மாடலா?திராவிட மாடலா’ நூல் வழங்கப்பட்டது.

தலைமைக் குழு உறுப்பினர் இளையராஜா, இராவணன், ஆ.வ. வேலு, சுகுமார், ஏசுகுமார், சு. கோபிநாத், த.நா. சூர்யா, இரண்யா, கடலூர் சிவா, மயிலை அருண், அசோக், வீரா, ரஞ்சித் ஆகியோர் கலந்துகொண்டனர். பரப்புரைக் கூட்டத்திற்கு பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டிருந்தனர். எழுச்சியுடன் கூட்டம் நடைபெற்றது.

பேராவூரணி அணி

ஆக-6, பயண துவக்க பொதுக்கூட்டம் போராவூரணியில் தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் தலைமையில் மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நகரச் செயலாளர் கலைசெல்வன் வரவேற்புரையாற்றினார். தோழர்கள் கோபி வேலுச்சாமி, முகில்ராசு ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு மணி நேரத்திற்கு மேலாக சிறப்புரையாற்றினார்.

இரண்டாவது நாள்: காலை 9 மணிக்கு உடையநாடு கிராமம், மாலை 4 மணிக்கு மல்லிப்பட்டினம், மாலை 6 மணிக்கு அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பரப்புரை நடைபெற்றது. தோழர்கள் திருவேங்கடம், கவிமணி ஆகியோர் தலைமை தாங்கினர். கிருஷ்ணன் அவர்கள் பாடலுடன் தொடங்கியது.

பரிமளராஜன், மதத்தில் பார்ப்பனியம் என்ற தலைப்பில் அய்யனார் (தலைமைக்குழு உறுப்பினர்) ஜாதியில் திருமணம் தலைப்பில் கலைச்செல்வன், நிர்மல்குமார் (தலைமைக்குழு உறுப்பினர்), வாழ்வில் மூடநம்பிக்கை என்ற தலைப்பில் கோபி.வேலுச்சாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகப் பொருளாளர் துரைசாமி சிறப்புரையாற்றினார். தோழர் கவிமணி நன்றி கூறினார்.

வணிகர்களும், பொதுமக்களும் பரப்புரைக்கு ஆதரவு தெரிவித்து மகிழ்ச்சியுடன் நன்கொடை கொடுத்தனர். திமுக பொறுப்பாளர்கள் கழகப் பொருளாளர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் திருவேங்கடம் ஆகியோருக்கு ஆடை அணிவித்தனர். பயணக்குழு தோழர்களுக்கு தேநீர் வழங்கி ஆதரவு தெரிவித்தனர். பேருந்து நிலையத்தின் அருகில் இருந்த திருப்பூர் வியாபாரிகள் சிறுகுறு வியாபாரிகள் பரப்புரைப் பயணத்துக்கு நன்கொடை வழங்கினர். பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் பேசிய கருத்துகளை கவனித்து விட்டு ரூ.500 ஒருவரும் மற்றொருவர் ரூ.1000 வழங்கினர். கழகப் பரப்புரைப் பயணத்தை ஆதரித்த நாம் தமிழர் கட்சியில் முன்பு பணியாற்றிய சைபுதீன் அனைவருக்கும் தேநீர் வாங்கிக் கொடுத்தார். மேலும் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு எதிராக சீமான் பேசியபோது அதை கீழே இருந்து எதிர்த்தவன் நான். கொள்கை இல்லாமல் பயணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துவிட்டேன் என்றார். பரப்புரைப் பயணம் சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் தெரிவித்தார். இரவு உணவையும் தங்கும் இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.

மூன்றாம் நாள்: துவரங்குறிச்சி, உள்ளிக்கோட்டை, மன்னார்குடி ஆகிய பகுதிகளில் ஆக-8 அன்று பரப்புரை நடைபெற்றது. தோழர் பாரி, திருவேங்கடம் (தலைமைக் குழு உறுப்பினர்) ஆகியோர் தலைமை தாங்கினர்.

`தடை அதை உடை’ கழகப் பரப்புரைப் பயணப் பாடல் மற்றும் தோழர்கள் வீரமணி, கிருஷ்ணனின் பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. மாரி, முகில்ராசு (திருப்பூர் மாவட்டத் தலைவர்), நிர்மல்குமார் (தலைமைக்குழு உறுப்பினர்), ஜாதியில் திருமணம் என்ற தலைப்பில் கலைச்செல்வன், திருப்பூர் முத்து, நிறைவாக கோபி வேலுச்சாமி, சமூக ஊடகப் பொறுப்பாளர் பரிமளராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர் குணா ஏன் இந்த பரப்புரைப் பயணம் என்பதைக் கேள்வி பதில் பாணியில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

துவரங்குறிச்சியில் தோழர்கள் பேசும்போது இடையில் சங்கிகள் இந்து மதத்திற்கு எதிராக பேசுகிறார்கள் இந்து மதத்தை ஒழிக்கப் பார்க்கிறார்கள் என்று கூச்சலிட்டனர். காவல்துறையின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் கூட்டம் நிறுத்தப்பட்டது.

மதிய உணவை கவிமணி ஏற்பாடு செய்திருந்தார். தோழர்கள் அனைவருக்கும் தங்கும் இடத்தையும் இரவு உணவையும் மறைந்த கொள்கையாளர் திமுக "மன்னை நாராயணசாமி" அவர்களின் பேரன் சோழராஜன் ஏற்பாடு செய்தார்.

கடைவீதி வசூல் வழியாக ரூ. 8876 நிதி திரட்டினர். ரூ.590 ரூபாய்க்கு கழக வெளியீடுகள் விற்பனையானது. கடைவீதி வசூல் மற்றும் துண்டறிக்கை வழங்கும் பணியை செல்வராஜ் , மதுரை முருகேஷ் , கிருஷ்ணன் , கோபி வேலுச்சாமி, நல்லதம்பி, முகில்ராசு உள்ளிட்ட தோழர்கள் செய்தனர்.

திவிக புகார் எதிரொலி - ஜாதிச் சங்க வாகனங்கள் பறிமுதல்

தீரன் சின்னமலை அவர்கள் நினைவுநாள் என்ற பெயரில் ஜாதிச் சங்கங்கள் நடத்தும் நிகழ்வுகளில் ஆணவப் படுகொலையை ஆதரித்தும், ஜாதிக் கலவரத்தை தூண்டுவதும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பியும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவதை தடுத்திடவும் மீறுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு மேற்கு மண்டல காவல்துறை அய்.ஜி அவர்களிடம் கோவை மாவட்டக் கழகம் சார்பில் ஆகஸ்ட்-1 அன்று மதியம் 12 மணி அளவில் மனு அளிக்கப்பட்டது. மனு கொடுத்ததன் எதிரொலியாக காவல்துறையால் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 220 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது.

- பெ.மு. செய்தியாளர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.