1956 நவம்பர் 1க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய அயல் இனத்தாரை, வெளி மாநிலத்தவரை தமிழ் நாட்டை விட்டு வெளியேற்றுவோம் என த.தே.பொ.க. இயக்கம் நடத்தி வருகிறது.

இது பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கி வருகிறது. ஏற்றும் தூற்றியும் எதிர் வினைகள் வருகின்றன. கோரிக்கையின் ஞாயத்தை, தீவிரத்தை முழுதாய் உணர்ந்து கொண்டும் பல உள் நோக்கங்களோடு, எதிர்பவர்களும், உள் நோக்கமின்றி மாந்தநேய அடிப்படையில் இதை எதிர்ப்பவர்களும் உண்டு. இரண்டாவது வகையினர்க்கு விளக்கம் அளிப்பதும் தெளிவுபடுத்துவதும் நமது கடமை.

sempridhi 600 copyதமிழ்நாட்டில் மார்வாடி, மலையாளி ஆதிக்கம் தொழில் வணிகத் துறைகளில் கொடி கட்டி பறக்கிறது. அதை ஆதிக்கம் என இப்போது ஏற்றுக் கொள்ளும் பலர் மனம், பல இலட்சக் கணக்கான வட மாநிலத் தாரின் தமிழக மிகை நுழைவை அவர்கள்- இங்கேயே தங்கிவிடுவதை ஆதிக்கம் என ஏற்றுக் கொள்ள தயங்குகிறது. அதற்குக் காரணம் அவர்கள் உடல் உழைப்பாளிகள் என்பதும் சாதாரண மக்கள் என்பதும் ஆகும். நம் நாட்டில் உழைத்துப் பிழைக்க வரும் அவர்களால் நமக்கு என்ன தீங்கு நேர்ந்து விடும் எனக் கருதும் மனப் போக்கும் காரணம்.

எப்படி மார்வாடி, மலையாளிகளால் நமது தொழில் வணிகம் பறிபோய்க் கொண்டு இருக்கிறதோ, அதேபோல் உடல் உழைப்பு தரும் வட மாநிலத் தாரால் தமிழ் கூலித் தொழிலாளிகளின் வாழ்வு பறிபோய்க் கொண்டு இருக்கிறது.

தமிழகத்தின் ஓசூர் போன்ற தொழிலகப் பகுதிகளில் தனியார் நிறுவனங்களில் 2000 ஆம் ஆண்டு வரை காவல் பணியில் (செக்யூரிட்டி) தமிழர்களே இருந்தனர். அவர்களுக்கு 8 மணி நேரம் அல்லது 10 மணி நேரம் வேலை, வாரம் ஒரு நாள் விடுமுறை இருந்தது. குறைந்த கூலியாக இருந்தாலும் வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறை இருந்தது., உடல்வலுகுன்றிய நடுத்தர வயதைத் தாண்டியவர்களும் முதியவர்களும் பெருமளவில் வேலையில் இருந்தனர்.

இன்று தமிழர்கள் காவல் பணியில் இருப்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களது இடத்தில் வட மாநிலக் காவலர்களுக்கு 12 மணி நேர வேலை, வார விடுமுறை கிடையாது. பெருமளவில் உடல் வலுமிக்க இளைஞர்களே உள்ளனர்.

உலக மயமாக்கலின் விளைவால் பெரிய நிறுவனங்களில் பல வேலைகள் வெளியகப் பணியாக (அவுட் சோர்ஸ்) ஒப்பந்தப் பணியாக விடப்படுகின்றன. அந்த வேலைகளில் எல்லாம் வட மாநிலத் தொழிலாளர் களே உள்ளனர். அந்த வேலைகள் அனைத்தும் தமிழ்த் தொழிலாளர்களால் செய்யப்பட்ட வேலைகள்.

குறைந்த கூலியாக இருந்தாலும் 8 மணிநேர வேலை, வார விடு முறை தொழிலாளர் நல ஈட்டு உறுதி (ESI) சேமத் தொகை (பி.எப்) பிடித்தம் என ஒழுங்கமைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கை இன்று வட மாநில, தொழிலாளர்களால் பறிக்கப்பட்டுள்ளது.

பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமங்கள் வரை நீளும் இவர்களின் வேலை ஆதிக்கம் மலைப் பகுதியையும் தொட்டு விட்டது.

தேனி மாவட்டம் மேகமலை எஸ்டேட் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழ்த் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கைத் தேவை மற்றும் மருத்து வத்திற்கு மலையின் கீழ் உள்ள சின்னமனூர், தேனி, கம்பம் போன்ற நகரங்களுக்கு வரவேண்டி இருக்கிறது.

அவர்கள் பயணித்து வர வேண்டிய மலைப் பாதைகள் தனியார் முதலாளிகள் வசம் இருந்தன. அண்மையில் தமிழக அரசின் வசம் வந்துள்ளன. அந்த மலையின் பாதை பயணிக்க முடியாத படி சீர் கெட்டுக் கிடக்கிறது. அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு மனித உயிர்கள் பலியாவது தொடர் நிகழ்வாக இருக்கிறது.

தோட்டத் தமிழ் தொழிலாளர்கள் சாலை வசதி வேண்டி நீண்ட காலமாக போராடி வருகி றார்கள். தனியார் முதலாளிகளோ தமிழக அரசோ துளியும் அசைந்து கொடுக்க வில்லை. மரணங்களும் நின்றபாடில்லை.

வெறுத்துப் போன தமிழ்த் தொழிலாளர்கள் ஆயிரக் கணக்கானோர் தலைமுறை தலைமுறையாக வேலை பார்த்த தங்கள் வாழ் விடத்தை விட்டு கொஞ்சம் கொஞ்ச மாக வெளியேறி பல்வேறு இடங்களுக்கு சிதறிக் கொண்டிருக்கின் றனர்.

தலைமுறை தலைமுறையாக வேலை பார்த்த அவர்களை நெருக் கடிகளுக்கு உள்ளாக்கி, எந்த இழப் பீடும் இன்றி வெளியேறும் சூழலை உருவாக்கி அவர்களின் வேலைகளில் குறைந்த கூலியில் “சத்தீஸ் கரில்’’ இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்து பணிக்கு அமர்த்தி வருகிறது எஸ்டேட் நிர்வாகம்.

இந்த எண்ணிக்கை மெல்ல மெல்ல விரிவடைந்து எதிர்காலத்தில் மேகமலை மலைப்பகுதியே வடமாநில தொழிலாளர்களுக் கானதாக மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

“வெளியாரை வெளியேற்று’’ என்ற நமது முழக்கத்தையும் அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்களர் அட்டை வழங்கக் கூடாது எனும் நமது முழக்கத்தையும் மனித உரிமை என்ற பெயரிலே கண்டிக்கின்ற தோழர்களை, தோழமை அமைப் புக்களை பார்த்துக் கேட்கிறோம்.

உடல் உழைப்பு தருகிற வட நாட்டு தொழிலாளி, அந்த வேலையில் அரை குறைவயிற்றை நிரப்பிய தமிழ்த் தொழிலாளியை அப்புற படுத்தியிருக்கிறார்கள் என்பதை நீங்கள் உணரவில்லையா?

வயிற்றுப் பிழைப்புக்காக வந்துள்ள வட மாநிலத் தொழிலாளி பல தலைமுறையாக தமிழ் தொழிலாளியை அவன் இடத்தில் இருந்து விரட்டியிருக்கிறானே, அதை நீங்கள் உணரவில்லையா?

தமிழ் முதலாளிக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என தூற்று கிறீர்களே? தமிழ் தொழிலாளியை அப்புறப்படுத்திவிட்டு வட மாநில தொழிலாளியை திணிப்பதன் மூலம் அதிக்கப்படியான உழைப்பு சுரண்டலில் முதலாளியின் இலாபம் குறையுமா கூடுமா? கூடும்! இவ்வாறு தமிழ்த் தொழிலாளி உரிமைக்குப் போராடுவது முதலாளிய முழக்கமா?

வெளியாரை வெளியேற்று என்ற முழக்கம், முதலாளியத்திற்கும் இந்தி யத்திற்கும் உலக மயமாக்கலுக்கும் எதிரானது. உழைக்கும் வர்க்கத் திற்கு உவப்பானது. உயிரானது. இதை உங்கள் அறிவார்ந்த மூளை ஏன் அறிய மறுக்கிறது?

கடந்த காலங்களில் உழவுத் தொழிலாளிகள் கூலி உயர்வு கேட்டுப் போராடிய போது அவர் களை ஒடுக்குவதற்கு பக்கத்து ஊரிலிருந்து உழவுத் தொழிலாளி களைத் தங்கள் நிலத்தில் பண் ணையார்கள் இறக்கினார்கள். அவ் வாறு வந்த அடுத்த ஊர் தமிழ்த் தொழிலாளிகளை இடது சாரிகள் அப்போது எதிர்த்தனர். அதே இடதுசாரிகள் இப்போது அயல் இனத்தொழிலாளிகளுக்குப் பரிந்து பேசி, தமிழ்த் தொழிலாளிகளின் உரிமைகளைக் காவு கொடுக்கத் துணிகின்றனர்.

அந்த போரட்டத்தை பக்கத்து ஊர் விவசாய தொழிலாளியின் வாழ்வாதாரத்திற்கு எதிராக முற் போக்கு உலகம் பார்த்ததா? போரா டும் உள்ளூர் விவசாயக் கூலிக ளுக்கு ஆதரவாக நிற்கவில்லையா?

அதுதான் அறம் அல்லவா? அதையே தான் இப்போது விரிந்த பொருளில் பார்க்க வேண்டும்.

தேசிய இன அடிப்படையில் பிரிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழன் மட்டும் தன் நிலத்தை, நீரை, மொழியை, தொழிலை, வணிகத்தை, பண்பாட்டை, வாழ்வாதாரத்தை, அடையாளத்தை இழந்து கலப்பினத் தேசமாக சுருங்கி சுருண்டு போக வேண்டுமா?

பீகாரியோ, அசாமியோ, உ.பியோ அவர்கள் மீது நமக்கு துளியும் வெறுப் பில்லை. மானுட நேயத்தில் நாம் யாருக் கும் குறைந்தவர்கள் அல்லர். அதே நேரத்தில் விருந்தாளிக்கு வீட்டைக் கொடுத்துவிட்டு வீதியில் குடும்பம் நடத்துவதை உயர்வாகக் கருதும் முட்டாள் தனத்தை செய்யக் கூடாது.

பீகாரியோ,அசாமியோ, உ.பியோ, தனது வாழ்வாதாரத்திற் காகத் தத்தமது மண்ணில் இருந்து தத்தமது தேச அரசுகளை நெருக்க வேண்டும். போராட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டால் நாம் நமது மண்ணில் இருந்து அவர் களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்.

பாலஸ்தீனத்திற்கு, ஈராக்கிற்கு, வியட்நாமுக்கு, கியூபாவிற்கு வீதியில் இறங்கி முதல் குரல் கொடுத்த நாம் இவர்களுக்காகவும் குரல் கொடுப்போம்.

அதை விடுத்து அயலாரின் அதிகப்படியான இருப்பை, தமிழர் நாட்டில் அனுமதிப்பது, தமிழினத் திற்குச் சவக்குழி வெட்டுவதாகும்.

வெளியாரை வெளியேற்று என்ற முழக்கம்

சுரண்டும் முதலாளியத்திற்கு எதிரானது.

பன்மைத் தன்மையை அழிக்கும் இந்தியத்திற்கு எதிரானது

அற வாழ்வை சூறையிட துடிக்கும் உலகமயத்திற்கு எதிரானது.

இந்த முழக்கத்திற்கு எதிரான முழக்கம் முதலாளியம், இந்தியம், உலகமயம் மூன்றையும் பாது காக்க வழி சமைப்பது. எதிர் முழக்கம் எழுப்புவோர் அறிந்து செய்தாலும் அறியாமல் செய்தாலும் விளைவு இதுதான்.

வெளியாரை வெளியேற்று என்பது அடாவடி அல்ல. அறம். அந்த அறத்திற்கு வலிமை சேர்ப்பது மானுடத்தை நேசிக்கும் அனை வரின் கடமை.

Pin It