ஒரு தேசிய இன மக்கள் வாழுகின்ற தாயகப் பகுதி யில், பிற தேசிய இன மக்களை வேண்டுமென்றே மிகை எண்ணிக்கையில் குடியமர்த்தி, அத்தாயகத்தை சீர் குலைத்து சிதைக்கின்ற போக்கு, உலகெங்கும் ஆதிக்க இனவாதிகளிடம் காலந்தோறும் வெளிப்பட்டு வரு கின்ற நடவடிக்கையாகும்.

அவ்வகையில், பாலத்தீனத் தாயகத்தை சிதைக்கும் வகையில் நடைபெறுகின்ற யூதக் குடியேற்றங்களும், தமிழீழத் தாயகத்தை சிதைக்க நடைபெறும் சிங்களர் குடியேற்றங்களும், உலகெங்கும் உள்ள சனநாயக சக்திகளால் வன்மையாக கண்டிக்கப்படுகின்றன.

ஆனால், உலகின் மிகப்பெரும் சனநாயக நாடு என சொல்லிக் கொள்ளும் இந்திய அரசு, இந்தியத் துணைக் கண்டமெங்கும் உள்ள பல்வேறு தேசிய இனத் தாய கங்களை திட்டமிட்டு சீர்குலைத்து வரும் அபாயகர மானப் போக்கு, சனநாயக சக்திகளால் பெரிதும் கண்டு கொள்ளப்படுவதில்லை.

ஆரியத்தின் அரச வடிவமாக நிற்கும் இந்திய அரசு, தேசிய இனங்களின் தாயகங்களை சிதைப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு பல்லாண்டு காலமாக செயல்பட்டு வருவது கண்கூடு.

இந்தி பேசாத மக்கள் வாழும் மாநிலங் களில் இயங்கும் நடுவண் அரசு அலு வலகங்களில், இந்திக்காரர்களை யும், பிற மொழிக்காரர்களையும் வேண்டு மென்றே அதிகளவில் பணியமர்த்துவது, இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களுக் குச் செல் வதை ஊக்குவிக்கும் வகையில் புதிய புதிய தொடர் வண்டிகளை அறிமுகப்படுத்துவது என இந் நடவடிக்கைகள் இந்திய அரசால் திட்டமிட்டு நடத் தப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் இயங்கும் சென்னை ஆவடி நடுவண் அரசு பாதுகாப்புத் துறைத் தொழிற்சாலை (Heavy Vehicles Factory - H.V.F.), திருச்சி பொன்மலை - துப்பாக் கித் தொழிற்சாலை, திருவெறும்பூர் - மிகுமின் தொழிற் சாலை உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசு நிறுவனங் களில், முடிவெடுக்கும் தலைமைப் பொறுப்புகளிலும், அதிகாரம் செலுத்தும் அதிகாரிகளாகவும் பிற மாநிலத் தவர்களே அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அண்மையில், புதுச்சேரியில் இயங்கும் நடுவண் அரசு தன்னாட்சி மருத்துவமனையான ஜிப்மரில் செவி லியர் பணியிடங்களுக்கான பொதுத் தேர்வு நடை பெற்று, அதன் முடிவுகள் செப்டம்பர் மாதம் வெளி யானது. அதில், தேர்வான 463 பேரில், 323 பேர் கேரளாவைச் சேர்ந்த மலையா ளிகள் ஆவர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து வெறும் 140 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதிகளவில் மலையா ளிகள் தேர்ச்சி பெற்ற கேரளாவின் திருவனந்தபுரம் தேர்வு மையத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப் பட்டவர், ஜிப்மர் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியான உன்னிக் கிருஷ்ணன் என்பவர் ஆவார். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவார்.

இவ்வாறு, தொடர்ச்சியாக, நடு வண் அரசு அலுவலகப் பணி களின் மூலம், பிற மாநிலத்தவரை அதிகளவில் தமிழகத்தில் குடியமர்த்தும் பணியை நெடுங்காலமாக இந்திய அரசு செய்து வருகின்றது.

அசாம், மகாராட்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங் களில் இதற்கு கடும் எதிர்ப்புகள் அவ்வப்போது எழுந்து வருகின் றன.

புதிதாக உருவாக்கப்படவுள்ள தெலுங்கானா மாநிலத்தில் சீமாந் திரா உள்ளிட்ட பிற மாநிலத்தவ ருக்கு அரசுப்பணியில் இட மில்லை என தெலுங்கானாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான அனுமந்த ராவ் திருப்பதியில் 17.08.2013 அன்று தெரிவித்தார்.

அசாமில் கடந்த 14.09.2013 அன்று, தலைநகர் கவகாத்தியில் மாநிலத்தின் அனைத்து அரசுப் பணிகளிலும் அசாம் மாநிலத்த வருக்கு 100 விழுக்காட்டு இடங்க ளையும் ஒதுக்கக் கோரி அனைத்து அசாம் மாணவர் சங்கம் , பெருந்திரள் போராட்டத்தை நடத்தியது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தமிழகத்தில் இயங்கும் நடுவண் அரசுத் தொழிற்சாலை களிலும் அலுவலகங்களிலும் தமி ழர்களுக்கு 85 விழுக்காட்டு இடங்களை ஒதுக்க வேண்டுமெனக் கோரி வருகிறது.

ஒருபுறத்தில், உயர் அரசு அதிகாரிகளாக பிறமாநிலத்தவரைத் பணியமர்த்தும் இந்திய அரசு, மறுபுறத்தில் தொடர் வண்டித் துறையின் மூலம் பீகார், ராஜஸ் தான், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநி லங்களைச் சேர்ந்த சாதாரண மக்களை தமிழகத்திற்கு தங்கு தடையின்றி வந்து போகும் வகையில் புதிய தொடர்வண்டிகளை அறிமு கப்படுத்துகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு நடு வண் தொடர்வண்டித்துறை வரவு செலவுக் கணக்குத் திட்டத் தில், தமிழகத்திற்கு 10 விரைவு தொடர் வண்டிகளும், 4 பயணிகள் தொடர் வண்டிகளும் அறிவிக் கப்பட்டன. அதில், தமிழகத்திற் குள்ளே தமிழக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மாநிலத்திற்குள்ளான தொடர் வண்டிகளைவிட, கேரளா, ஹைத ராபாத், கொல் கத்தா, ராஜஸ்தான், பெங்களுர், ஒரிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வந்து போகும் தொடர்வண்டி களே அதிகம். வெளிமாநிலத்த வர்கள் தங்குதடையின்றி தமிழகம் வந்து போவதற்கான, இந்திய அரசின் வெளிப்படையான ஏற் பாடு இது! ஒவ்வொரு வரவு செலவுக் கணக்குத் திட்டத்திலும் இப்போக்குத் தொடர்கிறது.

இவ்வாறு, தமிழகத்தில் பிற மாநிலத்தவர்கள் தங்கு தடையின்றி தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யும் இந்திய அரசு, தேசிய இனத் தாயகமான மாநிலங்களை பிற தேசிய இனத்தவர்களின் குடியேற் றங்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை சரியே என கொள்கையள வில் ஏற்றுக் கொண்டுள்ள அரசு தான்.

1948ஆம் ஆண்டு காசுமீரை இந்திய அரசு ஆக்கிரமித்த போது ஐ.நா.வில் இது குறித்து பாகிஸ்தான் நாடு சிக்கல் எழுப்பியது. காசுமீரின் சிங்கமென அழைக்கப்பட்ட ஷேக் அப்துல்லா அப்போது, காசுமீரை இந்தியா விடுவிக்க வேண்டுமெனக் கோரி வந்தார். ஐ.நா.வையும், ஷேக் அப்துல்லாவையும் சமதானப்படுத்த வேண்டிய நெருக்கடியில் இருந்த இந்திய அரசு, காசுமீரை காசுமீரி களின் தேசிய இனத் தாயகமாக பகுதியளவில் அங்கீகரித்தும், அத் தாயகத்தை இந்தியாவின் ஆதிக்க தேசிய இனங்கள் சிதைத்து விடாமல் பாதுகாக்கும் வகையிலான சில விதிகளைக் கொண்டும் இந்திய அரசமைப்புச் சட்ட விதி 306-கி என்ற சட்டப்பிரிவை உருவாக்கியது. அதுவே பின்னர், இந்திய அரசமைப்புச் சட்ட விதி 370 ஆனது.

காசுமீரில் பிற மாநிலத்தவர் (தேசிய இனத்தவர்) சொத்து வாங்க தடை விதிப்பது, 10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் கூட காசுமீரி அல்லாத பிறருக்கு வாக்குரிமை மறுப் பது, காசுமீர் பல்கலைக்கழ கங்கள் மற்றும் கல்லூரிகளில் பிற மாநிலத் தவர் கல்வி கற்க தடை விதிப்பது உள்ளிட்ட சில பலன்களை இச் சட்டத்தின் மூலம் காசுமீர் மாநி லத்திற்கு அளித்த்து இந்திய அரசு. இச்சட்டத்தின்படி, காசுமீரி பெண் ஒருவர் பிற மாநிலத்தவரை திரும ணம் செய்து கொண் டால், அப்பெண்ணால் கூட காசுமீரில் நிலம் வாங்க முடியாது.

இதே போல, பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் அரு ணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், அந்தமான் - நிக்கோபர் தீவுகள், நாகலாந்து ஆகிய பகுதி களில், பழங்குடியினத்தவரின் வாழ் வாதாரங்களைப் பாதுகாக்கும் வகையில் பிற மாநிலத்தவர்கள் அங்கு நிலம் உள்ளிட்ட சொத்து கள் வாங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதை இந்திய அரசு ஏற்றக் கொண்டுள்ளது.

ஆக, கொள்கையளவில் இந்திய அரசு, தனது இறையாண்மைக்கு உட்பட மாநிலம் எனப்படுகின்ற தேசிய இனத் தாயகங்களை பாதுகாக்க, அம்மாநிலங்களில் பிற மாநி லத்தவர்கள் சொத்துகள் வாங்கத் தடை விதிக்க வேண்டும் என்ற விதியை ஏற்றுக் கொண்டுள்ளது. அதை தமிழகத்திற்கும் செயல் படுத்த வேண்டுமென்பதுவே நமது கோரிக்கை!

தமிழகத்தில் பிற மாநிலத்தவரை குடியமர்த்தவதை ஊக்குவிக்கின்ற இந்திய அரசு, வெளியாரை வெளியேற்றுவோம் என நாம் கூறுகின்ற முழக்கத்தையும் கூட கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அசாமில் அதை செயல்படுத்தியும் காட்டியது.

அசாம் மண்ணில், 1970களில் நடைபெற்ற மிகை எண்ணிக் கையிலான இந்திக்காரர்களின் குடியேற்றத்தை, அசாம் மாணவர் இயக்கங்கள் வன்மையாக எதிர்த் தன. போராட்டம் தீவிரம் பெற் றதைத் தொடர்ந்து, 1985 ஆகத்து 15 அன்று, இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி முன்னிலையில் மிகை எண்ணிக்கையில் அசாமில் குடியேறியவர்களை வெளியேற்று வது என ஒப்பந்தம் கையெழுத் தானது. 1971க்குப் பிறகு அசாமில் குடியேறிய பிற மாநிலத்தவர்கள், வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

காசுமீர் - அசாம் மாநிலங்களில், தமது தாயகத்தைத் தற்காத்துக் கொள்ள வேண்டுமென்ற முனைப்பும், விழிப்புணர்வும் அரசியல் கட்சி, இயக்கங்கள், மக்கள் என அனைத்துத் தரப்பிலும் தீவிரமாக எழுந்ததன் விளைவாகவே இந்திய அரசு இதற்கான சட்டதிட்டங் களை வகுக்கப் பணிந்தது. தமிழகத் திலும், இதற்கான விழிப்புணர்வும், இந்திய அரசை அதற்குப் பணிய வைக்கும் வகையிலான போராட்டங்களும் வெடித்தால் மட்டுமே நம் தாயகத்தின் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். தாயகத்தை சிதைவிலி ருந்து காப்பாற்ற முடியும்!

Pin It