அண்மைப் படைப்புகள்

கீற்றில் தேட

இந்தியாவின் முதல் தொலை விண்வெளித்திட்டம் - சந்திராயன் -1 இந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. தானே ஏவுஊர்தி - Rocket தயாரித்து செயற்கைகோள் வடிவமைத்து விண்வெளி சாதனைகள் பல புரிந்துள்ளது இந்தியா. ஆயினும், புவியினைவிட்டு விண்வெளிக்கு - அதாவது வேறு கோள்களுக்கு செல்லும் முதல்திட்டம் சந்திராயன்.

சந்திராயன் என்ற பெயர் சந்திரன் மற்றும் “யான்” என்ற இரண்டு வடமொழி சொற்களின் கூட்டு ஆகும். சந்திரன் என்றால் நிலவு. யான் என்றால் பயணம் செய்யும் கலன். எனவே நிலவுக்கு பயணம் செய்யும் கலம் என்பதே சந்திராயன். தானே சுயமாக வடிவமைத்து Rocket- ஏவுஊர்தி PSLV வழி சந்திராயன் நிலவுக்கு ஏவப்படும். PSLV என்பது Polar Sattelite Council Vehicle என்பதாகும். 832 சுற்றுப் பாதைக்கு செயற்கைக்கோள்களை எடுத்துசெல்லும் ஏவுஊர்தி இது. 1995 முதல் இந்த ஏவுஊர்தி வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. 45 மீட்டர் உயரம், சுமார் 295 டன் எடை கொண்ட இந்த ஏவுஊர்தி சந்திராயன் கலத்தை ணிஜிளி எனப்படும் சுற்றுப்பாதைக்கு எடுத்து செல்லும்.

ஷாட்புட் எனப்படும் குண்டு எறிபந்தயத்தில் வீரர் குண்டை கையில் வைத்து தட்டாமாலை சுற்றுவார். பின்னர், தேவையான இழுவிசை பெற்றதும் குண்டை எறிவார். இதன்வழி குண்டு முடுக்கு பெற்று வெகுதூரம் பயணம் செய்யும். அதுபோல ETO என்கிற சுற்றுப்பாதையில் சுழலும் செயற்கைக்கோள் முடுக்கு பெற்று அதன் பாதை நீள்வட்டமாக மாறும். ETO என்பது Elliptic Transfer orbit ஆகும். அதாவது நீள்வட்டத் தடம்மாற்று சுற்றுப்பாதை. முதலில் அண்மைப்புள்ளி 260 கி.மி. சேர்மைபுள்ளி 36000 கி.மி. என்கிற நீள்வட்ட பாதையில் அமையும். கலம் இந்த சுற்றி சுற்றி வரும்போது அதன் சேர்மைபுள்ளி 40000 கி.மி. ஒரு லட்சம் கி.மி என உயர்ந்து கொண்டேபோகும். சுமார் இரண்டு நாட்கள் இவ்வாறு நீள்வட்ட தடம்மாற்று சுற்றுபாதையில் சுற்றிவர வேண்டும். மெல்ல மெல்ல சேர்மைபுள்ளி உயர்ந்து 4,00,000 கி.மி. என உயரும். புவியிலிருந்து கலம் அச்சமயத்தில் 400000 கி.மி. தொலைவில் அமையும்.

-தா.வி.வெங்கடேஸ்வரன்

Pin It

 

Moon2002 என்.டி.7 (2002 N.T.7) என்ற விண்கல் ஒன்று விநாடிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது 2019வது ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதி பூமியைத் தாக்கும் என்று விஞ்ஞானிகள் நாள் குறித்தனர். ‘இந்த விண்கல்லின் அகலம் 3 கிலோமீட்டர். இது பூமியின் மீது மோதினால் 77 லட்சம் அணுகுண்டுகள் வெடித்தது போன்ற பேரழிவு ஏற்படும், பூமியில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்துவிடும், கடல்பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வற்றிவிடும், தொடர்ந்து 16 மணிநேரம் வானம் இருட்டாக இருக்கும், 12 கோடி பேர் இறந்து போவார்கள், ஓசோன் படலத்தில் பெரிய ஓட்டை விழுந்து பகலில் அதிக வெப்பமும், இரவில் அதிக குளிரும் இருக்கும்’ என்று ஆல்ஸ்டர் அப்ஸர்வேஷன் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

ஆனால் பின்னர் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் இந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் என்றும் அப்படியே பூமியின் பாதையில் வந்தாலும் அதைத் தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளன. விண்கற்கள் பூமியின் பாதையில் வருவதும், பின்பு அவை விலகிச் செல்வதும் விண்வெளி வரலாற்றில் அவ்வவப்போது நடைபெறும் நிகழ்வுகளே. எனவே பயம் கொள்ளத் தேவையில்லை.

Pin It

 

Moonபூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது.Pin It


Black Holeநமது கேலக்ஸியின் (ஆகாய கங்கை அல்லது பால்வழி மண்டலம்) மையத்தில் ஏராளமான கருந்துளைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் ஆயிரம் முதல் நூறாயிரம் சூரியன் எடை கொண்டவை. அத்தனை பாரியாக இருந்தாலும் உருவத்தில் அவை இந்த வாக்கியத்தின் முடிவில் இடப்படும் முற்றுப்புள்ளி அளவே உள்ளன. அவை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட முடியாது, ஏனெனில் அவை அசுர வேகத்தில் கேலக்ஸியில் ஓடித்திரிந்தபடி வழியில் அகப்படும் நட்சத்திரங்களை ஸ்வாகா செய்து கொண்டிருக்கின்றன என்று ஹார்வர்டு ஸ்மித்சோனியன் ஆஸ்ட்ரோ ஃபிசிக்ஸ் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். நல்ல வேளையாக நமது சூரிய மண்டலம் கேலக்ஸியின் விளிம்பில் இருப்பதால் ஆபத்திலிருந்து தப்பித்தோம். நமக்கு அருகாமையில் இருக்கும் கருந்துளை குறைந்தது ஆயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பால்தான் உள்ளது. அவை ஒளி வேகத்தில் தாக்க வந்தால்கூட ஆயிரம் ஆண்டுகள் வரை நிம்மதியாக இருக்கலாம். ஆனால் பொருள்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்ய இயலாது என்று ஐன்ஸ்ட்டின் சொல்லியிருக்கிறார். அவர் சொல் பலிக்கும். 

கருந்துளைகள் கேலக்ஸிகளில் ஆரம்பத்தில் தோன்றிய சூரியன்கள்தான். வயது முதிர்வின் காரணமாக அவை கருந்துளையாக மாறிவிட்டன. அது சரி அந்தக் கிழட்டுச் சூரியன்கள் ஏன் இப்படி தலை தெறிக்க ஓட வேண்டும்? ஆகாய கங்கை போன்ற பெரிய கேலக்ஸிகள் பல சிறிய பிஞ்சு கேலக்ஸிகள் ஒன்றாய்த் திரண்டு உருவானவை என்பது ஒரு விளக்கம். பிஞ்சு கேலக்ஸிகள் கருந்துளைகள் ஒன்றிரண்டை வயிற்றில் சுமந்தபடி ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதால் பெரிய கேலக்ஸிகள் தோன்றுவதாக இருப்பின் அந்த மோதலின் விளைவாகவே கருந்துளைகள் எலாஸ்ட்டிக் கொல்லிஷன் என்ற விளைவால் ரப்பர் பந்துகள் போல மோதி விலகி இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன என்பது நல்ல விளக்கமாக இருக்கிறது. 

முனைவர். க. மணி 
பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It