கடவுளை யாரும் பார்த்திருக்க மாட்டார் கள் சூழ்நிலை காரணமாக சில பேரை கடவுளாக மக்கள் மதிப்பதுண்டு. அந்த சில பேர் யார் எனில் மருத்துவரும், நீதிபதிகள் மட்டுமே. கட்டாயம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நீதிமன்றத்தை சந்திக்கிறார்களோ இல்லையோ, மருத்துவ பிரச்சனை காரணமாக மருத்துவர்களை கடவுளாக சித்தரித்திருப்பார்கள். இப்படி மதிக்கப்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறை செல்லும் பாதையை தற்போது பார்த்தால் தற்கால மருத்துவர்கள் பெரும்பாலனோர் “ஒய்ட் காலர்” கிரிமினல்களாக இருப்பது தெரிய வருகிறது.

       மருத்துவத்துறை கடந்த சில பத்தாண்டுகள் வரை சேவைத்துறையாக தான் இருந்தது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் தொழிலாக மாறி போட்டி தொழிலாக வந்து கொள்ளை லாபம் பெறும் “கிரானைட்” தொழில் போல் மாறிவிட்டது. இதில் மருத்துவமனை விளம்பரம் வேறு போட்டி போட்டுக் கொண்டு பிரம்மாண்ட முறையில் விளம்பரங்கள் கொடுத்து வருவதைப் பார்த்தால் இவர்களுக்கு எவ்வளவு பணம் மிஞ்சும் என்பதை அந்த விளம்பரங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இதைவிட பல மருத்துவமனைகள் கட்டப்பட்டு அனைத்து வசதிகளும் இருக்கும் மருத்துவர்கள் நோயாளியைப் பொருத்து வாடகைக்கு எடுத்து மருத்துவம் செய்யும் நிலையும் வந்துவிட்டது.

       பல்வேறு பெரிய மருத்துவமனைகள் டியூட்டி டாக்டர் என்று இரவு நேரங்களில் பணியாற்றுவார்கள். இவர்களில் பெரும்பால னோர் பயிற்சி டாக்டர்களாக தான் இருக்கிறார் கள். இரவில் ஏதேனும் அவசரம் என்றால் பயிற்சி டாக்டர்கள் பலரின் உயிரோடு விளையாடிய நிலையும் உண்டு.

       அரசு மருத்துவமனைபற்றி சொல்ல வேண்டுமென்றால் வாய் கூசுகிறது. உயிர் துடிக்க ஒருவன் போராடிக் கொண்டிருக்கும் பொழுது, எதைப்பற்றியும் கவலைப்படாமல், டீ குடிக்க வெளியே செல்லும் மருத்துவர்களும் இருக்கி றார்கள். அங்கே இருக்கக்கூடிய நர்சை பார்த்தால் சிலை போல் எனக்கென்னவென்று உட்கார்ந்து கொண்டிருப்பர். மருத்துவரையோ அல்லது வேறு ஏதேனும் செய்தியையோ நர்சிடம் கேட்டால் பாதி நேரம் பேச மாட்டார்கள். இல்லை என்றால் எரிந்து விழுவார்கள். மதிப்பு அதிகமான மருந்து மாத்திரைகள் அனைத்தும் அரசு மருத்துவமனை களிலிருந்தும் அதை பயன்படுத்த மருத்துவர்கள் முன் வருவதில்லை. பல அரசு மருத்துவமனை களில் எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற தொழில் நுட்பங் கள் இருந்தும் பாதி நேரம் மூடியே கிடக்கின்றது. 90% செயல்படாமல் இருக்கின்றது.

       இன்றைக்கு மருத்துவமனைக்கு சென்றுவிட்டால் நமக்கு என்ன நோய் என்று கேட்கிறார் களோ, இல்லையோ உடனடியாக இன்னென்ன டெஸ்ட் செய்யுங்கள் என்று வரிசையாக குறித்து கொடுப்பார்கள். நாம் வயிற்று வலிக்கு போயிருப் போம். ஆனால் வயிற்றிலிருந்து தலை வரை பல்வேறு டெஸ்ட்கள் செய்ய சொல்லுவார்கள். இதில் அவர்கள் எழுதி தரும் மருந்துச் சீட்டில் அச்சடிக்கப்பட்ட மருந்து கடைகளில் மட்டுமே உள்ள மருந்துகளையே எழுதி கொடுப்பார்கள். இதில் பாதி டாக்டர்க்கு பரிசோதனைக்காக மருந்துக் கம்பெனிகள் கொடுத்த மருந்துகளை வைத்தே பணம் பண்ணி விடுவார்கள்.

       இந்த டெஸ்ட் எடுக்கும் விஷயத்தில் மருத்துவர்கள் எந்த லேஃபில் பரிசோதனை செய்ய சொல்கிறார்களோ அந்த லேஃபில் தான் பரிசோதனை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த இடத்திலோ அல்லது விலை குறைவாக வாங்குமிடத்திலோ பரிசோதனை செய்திருந்தால் “செல்லாது, செல்லாது” என கூறிவிட்டு தான் சொன்ன இடத்தில் தான் சரியாக ஆய்வு இருக்கும் என்று கூறி அவர் சொன்ன லேஃப்பில் போய் பரிசோதனை செய்ய கட்டாயப்படுத்துவார். ஏனென்றால் அந்த லேஃப்பிற்கும் இந்த டாக்டர்க்கும் தான் கமிஷன் தருவதாக அக்ரிமெண்ட் இருக்கும். தற்போது கமிஷன் என்பது நாம் நினைப்பது போல 10-15 சதவிகிதமோ அல்ல. 40% முதல் 50% வரை கமிஷனாக பெற்றுக் கொள்கிறார்கள். பல நேரம் விலையுயர்ந்த ஆய்வு எழுதிக் கொடுத்தார்கள் என்றால் அந்த ஆய்வினை நடத்த வேண்டாம் என மறைமுகமாக கூறிவிட்டு 90% பணத்தை மருத்துவர்கள் வாங்கி விடுவார்கள்.

       ஆய்வு பரிசோதனைக்கு பல்வேறு ஆய்வு களை செய்ய சொல்லி வரிசையாக எழுதிவிட்டு அந்தப் பேப்பரிலேயே ஒரு மறைமுக அடை யாளம் இருக்கும், அந்த அடையாளத்தை குறித்து விட்டால் எழுதிக் கொடுத்த ஆய்வு எதையுமே நடத்த வேண்டாம் என்று அர்த்தம். நாம் கட்டிய பணம் அப்படியே அபகரித்துக் கொள்வார்கள் டாக்டர்கள்.

       இன்றைக்கு மருத்துவமனைகள் ஏதோ கொள்ளைக் கூடாரமாக செயல்படுகின்றன. ஒருவரை மருத்துவமனையில் சேர்த்தது முதல் தினமும் பணம் கரக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனையில் நிர்வாகிகள் இருப்பார்கள். அவர்களுடையே வேலையே நோயாளிகளிடம் என்னவெல்லாம் சொல்லி பணம் கரக்கலாம் என்பதுதான். அவர்கள் சிக்னல் கொடுத்தால் தான் மருத்துவரே மருத்துவம் செய்யும் நிலை உள்ளது. எல்லாவற்றிலும் கட்டாயம் கமிஷன் தர வேண்டும் என்று சொல்லி மாத்திரை, மருந்து கடைகளிலிருந்து ஆம்புலன்ஸ் வரை மருத்துவர்கள் கொள்ளையடிக்கிறார்கள். மருத்துவர்கள் இவ்வாறு செய்வது மாபெரும் நம்பிக்கை துரோகம் ஆகும்.

       மருத்துவதுறையில் இன்னும் சில முரண் பாடுகள் இருக்கின்றன. அலோபதி மருத்து வர்கள் மட்டும்தான் மருத்துவர் என்று நினைத்துக் கொண்டு சித்தா மற்றும் மாற்று மருத்துவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அதனால்தான் மாற்று மருத்துவத் தை வளரவிடாமல் ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தி மாற்றுமருத்துவர் எல்லாம் போலி டாக்டர்கள் போல சமூகத்திற்கு தவறாக அடையாளம் காட்டி வருகின்றனர்.

       சில பெரிய மருத்துவமனைகளில் இலவச மருத்துவ பரிசோதனை என்று சொல்லி சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவர் எவரும் சிகிச்சை அளிக்காமல் அம்மருத்துவமனை சார்பில் நடத்தி வரும் மருத்துவ கல்லூரி மாணவர்களை வைத்தே வைத்தியம் செய்து பழகி கொள்கிறார்கள். இது தான் இலவச மருத்துவ சேவையா என மனசாட்சியுடன் சிந்திக்க வேண்டும்.

       பெரும்பாலான அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் சொந்தமாக பல மாடி மருத்துவமனைகளை தன்னகத்தே கொண்டு வைத்துள்ளார்கள். தங்களிடம் அரசு மருத்துவமனையிலிருந்து வரும் நோயாளிகளை உயிர் பயத்தை ஏற்படுத்தி தன் சொந்த மருத்துவ மனைக்கு அழைத்து கொள்ளை அடித்து, சிகிச்சை அளித்து அனுப்பி வைப்பார்கள். மருத்து வர்கள் இவ்வாறு செய்வது மாபெரும் நம்பிக்கை துரோகம் ஆகும். 

- நன்றி: ‘மனித உரிமைகள் - இண்டர்நேஷனல்’ மாத இதழ் செப் - 2010    

Pin It