தென்கொரியாவில் கல்லூரிக்கான நுழைவுத்தேர்வினை அரசாங்கம் நடத்துகிறது. அது தான் அங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயக்கும் தேர்வு. இந்த தேர்வு நடக்கும் நாட்களில் அரசாங்கம் எதை எல்லாம் செய்கிறது என்ற பட்டியலை பாருங்கள்.

1. பரிட்சை நாள் அன்று காலை அலுவலகம் செல்கின்றவர்கள், வணிகர்கள் மற்றும் பிற தொழில் செய்கின்றனவர்கள் ஒரு மணி நேரம் தாமதாமாக தங்கள் பணிக்கு செல் லும்படியாக இரசு கேட்டுக் கொள்கிறது.அதற்கான அனுமதியை எல்லா நிறுவனங் களும் அளித்ததிருக்கின்றன. முக்கிய காரணம் பரிட்சைக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து ரயில் சாலை போன்ற இடங்களில் நெருக்கடி இல்லாமல் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே.

2. பரிட்சை நாள் அன்று கூடுதலான ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

3. பரிட்சை நடைபெறும் வளாகத்தில் யாரும் செண்ட் அடித்துக் கொண்டு வருவது முற்றி லும் தவிர்க்கப்படுகிறது. காரணம் அது கவன சிதையை உண்டு பண்ணக்கூடும்.

4. பரிட்சைக்கு தயார் ஆகும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்வதற்கு வசதியாக மாலை முன்னதாகவே அவர்கள் வேலையிலிருந்து திரும்ப அனுமதி தரப்படுகிறது.

5. பரிட்சைக்கு மாணவர்கள படித்துக் கொண்டிருக்கும் நாட்களில் பெற்றோர்கள் விளை யாட்டு போட்டிகள்மற்றும் கேளிக்கை விழாக்களில் கலந்து கொண்டு இரவில் தாம தமாக வீடு திரும்ப கூடாது என்பதற்காக இரவு பத்து மணிக்கு எல்லா விழாக்களும் நிறைவு செய்யப்படுகின்றன.

6. பரிட்சை நாளில் ஆங்கில தேர்வு எழுதும் மாணவர்கள் உச்சரிப்பு கேட்டு பதில் எழுத நேரிடும் என்பதால் அதற்கு இடையூறு செய்ய கூடாது என்று பரிட்ரை நடக்கும் நேரத்தில் விமான சேவைகள் ரத்து செய்யப் படுகின்றன. விமானம் பறக்கும் ஓசை மாணவர்களின் கவனத்தை சிதற அடிக்கும் என்பதால் விமான சேவை நேரம் அன்று மட்டும் மாற்றப்படுகிறது. தரையிறங்க உள்ள விமானங்கள் கூடுதாமதமாகவே அனுமதிக்கப்படுகின்றன.

7. ரேடியோ மற்றும் தொலைக்காட்சி பரிட்சைக்கு செல்லும் மாணவரகள் பொது மக்கள் வாழ்த்தும் நிகழ்ச்சியை ஒளிபரப்புகின்றன.

8. பரிட்சை நடைபெறும் நேரத்தில் இந்த ஆண்டு பரிட்சை எப்படியிருக்கிறது. இது சென்ற ஆண்டுகளில் இருந்து எந்த அளவு மாறுபட்டிருக்கிறது. எப்படி மாணவர் கள் இதை எதிர் கொள்கிறார்கள் என்பதை முக்கிய தொடலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றது

9. அன்று மின்சார ரயில்கள் கூட அவசியமில்லாமல் ஒலிப்பானை உபயோகப்படுத்தகூடாது

10. தேர்வு நடைபெறும் வளாகங்களின் அருகாமையில் எவரும் எவ்விதமான ஒலிப்பானையும் ஒருபோதும் பயன்படுத்த கூடாது.

11. ஸடாக் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய வணிக மையங்கள் கூட அன்று ஒரு மணி நேரம் தாமதமாகவே இயங்க துவங்குகின்றன.

12. நுழைவு தேர்வு எழுதும் மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் மற்ற மாணவர்கள் வந்து போகும் இடையூறு தவிர்க்கப்படுகிறது.

13. தேர்வு நடைபெற்ற நாளின் மாலையில் அன்று கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான சரியான பதிலையும் நாளிதழ்கள் பிரசுரம் செய்கின்றன. இதனால் தான் எவ்வாறு தேர்வு எழுதினோம் என்பதை மாணவன் உடனே தெரிந்து கொள்ள முடிகிறது.

14. தேர்விற்கு ஒருவாரம் முன்னதாகவே மாணவர்களின் நினைவாற்றலை வளர்க்க உதவும் குறிப்புகள் மற்றும் பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சீரான உணவு முறை பற்றிய தகவல்களை எல்லா ஊடகங்களும் வாறி வழங்குகின்றன. வீடு தேடி வந்து உளவியல் நல ஆலோசகர்கள் நம்பிக்கை பயிற்சிகளும் தருகிறார்கள்.

15. இது போலவே பௌத்த ஆலயங்களும் கிறிஸ்தவ தேவலாயங்களும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நினைவாற்றலை பயிற்சி தருகின்றன.

16. கொரிய மின்சார துறை இதற்காக தனது 4000 பணியாளர்களை சிறப்பு பணி என கருதி மின்சார தடையே இல்லாமல் பரிட்ரை நடைபெற உதவி செய்கிறது.

17. பரிட்சைக்கு மாணவர்கள் தயார் ஆகும் நாட்களில் வீட்டில் பெற்றோர்கள் ஹெட்போன் போட்டுக் கொண்டு மட்டுமே தொலைக்காட்சி பார்க்கும்படியாக தொலைக்காட்சிகளே வற்பறுத்துகின்றன.

18. தாமதமாகவோ அல்லது நுழைவு தேர்விற்கான அடையான அட்டையை மறந்துவிட்டோ வரும் மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு என்றே தனியாக போலீஸ் படை அமைக்கப்பட்டு உதவி செய்கிறார்கள்.

19. கேள்விதாளை 400 ஆசிரியர்கள் கொண்ட குழு நான்கு நிலைகளில் உருவாக்கி முடிவு செய்கிறது. பாடத்திட்டத்தில் இல்லாத கேள்விகள் ஒரு போதும் இடம் பெறுவ தில்லை.

20. தோல்வியுற்ற மாணவர்களின் பெற்றோர்கள் தன் பிள்ளையின் தோல்விக்கு ஒரு போதும் ஆசிரியரை குறை சொல்வதில்லை. மாறாக கூடுதல் கவனம் தந்து எப்படி படிக்க வைப் பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார்கள்.

Pin It