வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு.

29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக செயல்பட வைப்பதே இவரது வேலை. நாடாளுமன்றத் தேர்தலிலிருந்தே இந்த வேலையை அவர் செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா, கனடா, துபாய், மலேசிய நாடுகளில் மோடிக்கு தந்த வரவேற்பு களுக்கான திட்டமிடல் எல்லாம் இங்கிருந்துதான் கண்காணிக் கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டன. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். முன்னணி அமைப்பு களும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகம் முழுதும் வாழும் இந்திய தொழிலதிபர்களின் சேமிப்பு 44 பில்லியன் டாலர் என்றும், இதில் 70 பில்லியன், இந்தியாவுக்கு திருப்பிவிடப்படுகிறது என்றும் உலக வங்கியின் மதிப்பீடு கூறுகிறது. இவர்களில் பெரும் பகுதியினர் பார்ப்பனர்கள்-பனியாக்கள்.

இந்தியாவின் பாரம்பர்ய பெருமைகளைக் காப்பாற்றும் மோடியின் இந்துத்துவா கொள்கைக் காகவே, நாங்கள் அவரை ஆதரிக்கிறோம் என்கிறார் நரேந்திர தாக்கரார் என்ற பிரிட்டனில் வாழும் இந்திய தொழிலதிபர். “ஒரு பக்கம் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு மதப் பெருமைகளையும் காப்பாற்றி வருவதுதான் மோடிக்குரிய பெருமை” என்கிறார், பிரிட்டனில் வாழும் மற்றொரு தொழிலதிபதிரான மேக்நாத் தேசாய். இந்த பார்ப்பன பனியா தொழிலதிபர்கள், அந்நாட்டு அரசுகளுடனும் நெருக்கமாகி அதிகாரத்தில் பங்கெடுத்து வருகின்றனர்.

பிரிட்டனில் நடந்த 2015 தேர்தலில் 10 இடங் களையும், கனடாவில் கடந்த மாதம் நடந்த தேர்தலில் 20 இடங்களையும் இந்த இந்துத்துவ பார்ப்பன-பனியாக்கள் பிடித்துள்ளனர். அமெரிக்கக் காங்கிரசில் 3 பேர் உறுப்பினர்களாக இருப்பதோடு, இரண்டு மாநிலங்களில் ஆளுநர் களாகவும் இருக்கிறார்கள். வெளிநாடுகளுக்கு பயணமாகும் மோடி, அந்நாட்டின் பிரதமர், அதிபர் களிடம் இந்த பார்ப்பன-பனியா தொழிலதிபர் களுக்காக பேசுகின்றார். இவர்களுக்கு இந்தியா விலும் ஓட்டுரிமை வழங்க முடிவு செய்திருப்பதாக கடந்த ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மோடி, தனது செல்வாக்கையும் புகழையும் வெளிப்படுத்திக் கொள்வதை விரும்பாத நாடுகளும் உண்டு. கடந்த நவம்பர் 24ஆம் தேதி சிங்கப்பூரில் இதேபோல் அங்கே வாழும் ‘இந்தியர்கள்’ வரவேற்பு விழா நடந்தது. இந்த விழாவில் இந்திய குடியுரிமை கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். சிங்கப்பூர் குடியுரிமை கொண்ட இந்தியர்கள் பங்கேற்கக் கூடாது என்று சிங்கப்பூர் அரசு அறிவித்து விட்டது.

இந்திய கடவுச் சீட்டை சான்று காட்டி, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே மோடி விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். மோடியின் ‘இனவாத’ப் பேச்சுகள் சிங்கப்பூரில் பல்வேறு இனமக்களின் நல்லுறவை பாதித்து விடக்கூடும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது. இதுவே இந்த கெடுபிடிகளுக்குக் காரணம் என்று தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. துபாயிலும் இதே போன்ற அரசின் கெடுபிடிகளை மோடிக்காக விழா நடத்துவோர் எதிர்கொள்ள வேண்டி யிருந்தது.

அதே நேரத்தில் மோடிக்கு எதிர்ப்புகளும் இருக்கவே செய்தன. இலண்டனில் பிரதமர் கேமரூனிடம் மோடி பேசிக் கொண்டிருக்கும் போதே மாளிகைக்கு வெளியே காஷ்மீரிகள், பஞ்சாபிகள் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட் டங்களை நடத்தினர்.

பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் வெளி நாடுகளில் வாழும் பார்ப்பன-பனியா தொழி லதிபர்கள் மேலும் தங்களின் செல்வாக்கையும் அதிகாரங்களையும் உறுதி செய்து வருகிறார்கள். இதற்கு பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் இருந்து செயல்படுகிறது.

(நவ.14, ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் சுகாசினி ஹைதர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகள்)