loversநம்மிடையேயான தனிமை கணங்களின் கண்ணியம் பேச

தேர்ந்தெடுத்த இசைத்தட்டில்
புல்லாங்குழலை ஒலிக்க விட்டு
என்னருகே அமர்கிறாய்

அடர்ந்த கானக இருளில் சிறிய
வெளிச்ச மொட்டு

பறக்கும் ரெட்டைவால் குருவி வாலினைத் தொடர்கிறது,

செங்குத்து உச்சி மலை தொட்டு
சீரான மேகமாகிறது,

பூவினுள் தூங்கும் தேன்துளி
கலக்கும் பனித்துளியாகிறது,

பரந்த வான்வெளி பறந்து
பிறந்த புல்வெளி சுற்றி
இறுதியில்
ஆநிரை மேய்க்கும் அநிருத்தன்
கை குழலாகிறது

பிறக்கும் கானம் கை வளை ஓசை
கலந்து மூங்கில்களை மூழ்கடிக்கிறது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.