moon 400

வீட்டில் சாண்டில்யன் படிக்கும் முதிய தலைமுறை
சேலை தலைப்பை சரி செய்து கொள்ள
சரிசெய்தல்களை சரியவிட்டு சாலைகளில்
முத்த ஊர்வலம் விட்டுக்கொண்டிருக்கிறது
ஜீன்ஸ் அணிந்த இளைய தலைமுறை
தனது ஒருநாளை முடித்துக்கொண்ட சூரியன்
செய்தியொன்றை நிலவிடம் கூறிவிட்டு மலையிறங்க
சேதியை ஊமத்தம்பூக்களுக்குள்
ஒளிக்கிறது நிலவு
சிலிர்த்தெழுந்த சுடுகாட்டுப் பேய்கள்
நகர்வலம் வர
கடுகுகள் வீசி கட்டுப்படுத்தி விட்டு
கவிழ்ந்து விட்ட இருளை ஊதி
கலைத்துக்கொண்டிருக்கிறது
வெண்ணிற அன்னமொன்று .
அடுத்தொரு நாளுக்காய் சுழலத்
தொடங்குகிறது பிரபஞ்சம்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.