lady 338

உனக்கான எழுத்துக்கள் மனக்குவளைக்குள்
ததும்பி தளும்பிக் கொண்டிருக்கின்றன
சொல்லாய் கோர்க்கும் வித்தையறியாது
சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கிறேன் ஊருக்கு
சில நேரங்களில் நீ
சூரிய சிவப்பை இதழ்களில்
பூசிக்கொள்வதால்
சாம்பல் போர்த்திக்கொள்கின்றன
அந்த எழுத்துக்கள்
ஊதாங்குழலாய் இதழ் குவிப்பாயெனில்
உதிர்ந்து வீழலாம் சில
சேகரித்துக் கொண்டிரு அவற்றை
கோர்க்க எனைத் தயாரித்துக்
கொண்டு வருகிறேன்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.