வன்முறையில் பிறந்து, வன்முறையில் வளர்ந்து, வன்முறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காவிக் கூட்டம், கழகத்தின் இளைய தலைவன் உதயநிதி தலைக்கு விலை வைத்திருக்கிறது!

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியது மாபெரும் குற்றமாம். ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் வாழ வேண்டும் என்றா பேச முடியும்?udhayanidhi stalin 282

உதயநிதியின் மீது இவ்வளவு கோபப்படுகிறவர்கள், அவர் தலையை வெட்டிக் கொண்டு வந்தால் 10 கோடி தருவோம் என்று பகடி செய்கிறார்கள்.

இவர்களுக்கு தேர்தலின் மீதும், ஆட்சி அதிகாரத்தின் மீதும்தான் பற்றுதல்! எனவே உதயநிதியைக் குறிவைத்து இந்துக்களின் வாக்குகளைத் தாங்கள் பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்!

கலவரங்களில் வெறிகொண்டு அலையும் காவிக் கூட்டம், இரண்டு செய்திகளைப் புரிந்து கொள்ள வேண்டும்! ஒன்று, அமைச்சர் உதயநிதி தாமாக விரும்பி முடி திருத்தும் கடைக்குப் போனாலன்றி, அவருடைய தலை முடியைக் கூட அவர்களால் வெட்ட முடியாது! இரண்டு, என்னதான் இந்துக்கள் இந்துக்கள் என்று அவர்கள் கூச்சலிட்டாலும், பக்தியும் மதமும் வேறு, அரசியல் வேறு என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் தமிழ் மக்கள்!

கோயிலுக்குப் போவார்கள், காவடி எடுப்பார்கள், மத விழாக்களைக் கொண்டாடுவார்கள். ஆனால் தேர்தல் வந்தால், உதயசூரியனுக்குத்தான் வாக்களிப்பார்கள்! எத்தனை காலமானாலும் இங்கு உதயசூரியன்தான் உதிக்கும், ஒரு நாளும் தாமரை மலராது!

- சுப.வீரபாண்டியன்

Pin It