முந்தைய தமிழகத்தில் 1970களில்

இது அக்டோபர் மாதம், ஐப்பசி பிறக்கப்-போகிறது. “ஐப்பசி, கார்த்திகை” அடைமழை என்பது சொலவடை அதுமட்டுமல்ல, கார்த்திகை மாதம் பிறக்கும் குழந்தைக்கு காது கேட்காமல் போகலாம் என்ற நம்பிக்கையும் கூட மக்களிடம் நிலவிவந்தது. காரணம் அடர்ந்த தொடர்மழை சத்தத்தில், பிறந்த குழந்தையின் செவி கேட்காமல் போய்விடுமாம். ஆனால், இன்றைய நிலை என்ன நண்பர்! கோடைவெயில் போல் வெப்பம் கொளுத்துகிறது. சென்னை வெப்பநிலை 99” எட்டியுள்ளது. இதுவரை இப்படியரு வெப்பம் நிலவியதே இல்லை. இன்றைய தமிழகநிலை முன்பெல்லாம், தீபாவளியை மழையுடன்தான் கொண்டாடுவோம். எப்படா, கொஞ்சம் தூறல் விடும், பட்டாசு வெடிக்கலாம், என குழந்தைகள் வெடியை மழையில் நனையவிடாமல், அடை-காத்து, காத்து கிடப்பார்கள். சுமார் 30 ஆண்டுகளுக்குமுன், அடை மழைக்காலங்களில், நிறைய பள்ளி மற்றும் கல்லூரிகள், மழையை முன்னிட்டு விடுமுறை அறிவித்தன. இதை சொன்-னால், இன்று யாரும் நம்பக்கூட மாட்டீர்கள் நண்பா! ஆனால் இன்றைய நிலைமை என்ன? தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் பருவமழை தவறிவிட்டது. ஒரு சில மாநிலத்தின் சில ஊர்களில் பெருமழைகொட்டி, மக்களை சேதப்படுத்தியுள்ளது. கிராமத்தில் சொல்வது பொய், ஒன்று பெய்து இருக்கிறது அல்லது காய்ந்து இருக்கிறது. விவசாயம் செய்ய முடியாத கொடுமையால், பயிர் கருகி பட்டினிச் சாவுகளும், தற்கொலைகளும் இப்போது தொடர்கதையாய் நீளும் அபாயம் நிலவுகிறது.

புவி வெப்பமடைதல் எப்படி?

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, பருவ காலத்திற்கு தொடர்பில்லாத தட்பவெப்பநிலை உலவுகிறதே! இதுஏன் கடந்த ...... பூமிக்கு கடுமையாக காய்ச்சல் அடிக்கிறதே!  இதுஏன்! இப்போது கோடை காலம் மிகக் கடுமையான வெப்பத்தை அள்ளி வீசுகிறது. குளிர் மார்கழி, தை போன்ற குளிர் காலங்களில் கடுமையான குளிரும் கடுமையான பனியும் உள்ளது. சில சமயம் காலை 9 மணி வரைகூட பனிமூட்டம் உள்ளதால், போக்குவரத்து பிரச்சனையாய் உள்ளதை நாம் கண்கூடாக தொலை காட்சியின் மூலம் அறிகிறோம். கடந்த 20ஆம் நூற்றாண்டில்தான், முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பம் அதிகரித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் உலக வெப்பநிலை 0.74+0.18*சி, மட்டுமே உயர்ந்தது. “சர்வதேச அரசுகளின் கால நிலை கணிப்புக்குழு” இப்படி புவி வெப்படைதல் தொடர்பாக, பலநாட்டு விஞ்ஞானிகளின் கருத்தைக்கேட்டு, ஆராய்ந்து, சில முடிவுகளை அறிவித்துள்ளது. 20ஆம் நூற்றாண்டின் இடைக்-காலத்திலிருந்துதான் பூமியின் வெப்பம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஆனால், உலகம் உருவானதி-லிருந்தே, வெப்பநிலை தொடர்ந்து மாற்றத்துக்கு உள்ளாகி வருகிறது. இருப்பினும், மனித செயல்பாடுகளாலும், பசுமைவதை வாயுக்களாலும், தொல்படிவ பொருட்கள் எரிப்பாலும்தான், புவியின் வளிமண்டல வெப்பம் அதிகரித்து சமீப காலங்களில் வேகமாக அதிகரித்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது. பூமிக்கு அருகில் உள்ள காற்று மண்டலம்/ வளிமண்டலம் சூடாவதை, புவிவெப்பமடைகிறது எனக்குறிப்பிடுகிறோம். இதன் தொடர்பாக காலநிலையில் மாற்றம் ஏற்படுகிறது.

புவி சூடாதல் சிக்கல்:

நண்பர்களே! காலநிலை மாற்றம் என்பதையும், புவி சூடாவதையும், மிகச் சாதாரணமான சுற்றுச்சூழல் பிரச்சனை என நாம் ஒதுக்கிட முடியாது. ஆற்றில் கலக்கும் தொழிற்சாலை கழிவுகளும், பூச்சிக் கொல்லி மருந்தின் கலப்பும் போல இது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. ஒரு சட்டம், ஒழுங்கு நியதிமூலம், ஆற்று நீரை நஞ்சாக்காமல் தடுக்க-முடியும், காப்பாற்ற முடியும். புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றமும் அப்படி அல்ல நண்பா! இப்போ ஏற்பட்டுள்ள காலநிலை சிதைவை, இப்போதே கட்டுப்படுத்த சில முயற்சிகள் மற்றும் மாற்று ஏற்பாடு மூலம் சரி செய்யமுயன்றாலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமையைக் கொண்டுவர, இன்றும் சுமார் 50 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் தாக்கத்திலிருந்து பாதிப்பி-லிருந்து பூமியை அதன் சூழலை வளிமண்டலத்தை காப்பாற்றப்போவதுயார்? யார் நண்பா! பூணைக்கு மணிகட்டப் போகின்றனர்?

பூமி சூடாவது ஏன்?

சர்வதேச அரசுகளின் காலநிலை கணிப்புக்குழு - IPCC ன் கணிப்புப்படி, உலகில் கடந்த 100 ஆண்டுகளில் பசுமை அக வாயுக்களின்........ அடர்த்தி அதிகரித்துவிட்டது. இது எப்படி எனகிறீர்களா தொல்படிம எரிபொருட்களான பெட்ரோல், நிலக்கரி, எரிப்பு மற்றும், காடுகளை அழித்தல் போன்ற மனித செயல்பாடுகளாலும் பசுமை அக வாயுக்களின் அளவும், அடர்த்தியும் அதிகரித்து-விட்டது. என்கின்றனர். உலகம் தோன்றிய காலத்திலிருந்தே, சூரிய ஒளிக்கதிர் வீச்சு, எரிமலை சீற்றம் காடுகள் எரிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால், 1800 களுக்கு முன்புவரை இவ்வளவு அதிக பசுமை அக வாயுக்களின் வெளியேற்றம் இருந்ததில்லை தொழிற்புரட்சிக்குப் பின்னரே, பசுமை அக வாயுக்களின் அடர்த்தி அளவுக்கு அதிகமாய் உயர்ந்தது. இது தொடர்ச்சி-யாக உலகிலுள்ள 70 க்கும் மேற்பட்ட அறிவியல் சமூகம் மற்றும் சர்வதேச தொழில் வளர்ச்சி நாடுகளின் அறிவியல் குழுவும், பல்வேறு விவாதங்-களுக்குபின், ஒத்துக்கொண்ட முடிவுகள்தான் .

நமது வாழிடம்:

நண்பா! இந்த பசுமை அக வாயுக்களின் பின்னணி என்ன? எப்படி உருவாகிறது? இதன் பங்கு என்ன? இதற்கு விடை கூறுமுன், பூமியின் ஆற்றல்கள் எது? நம்பூமி நமது செயல்பாடுகள் போன்றவற்றை அறிவது அவசியம்.. நமது பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான அண்டங்கள் உள்ளன. ஒவ்வொரு, அண்டத்திலும் கோடிக்கணக்-கான விண்மீன்கள் வலம் வருகின்றன. பிரபஞ்சத்தின் அண்டங்களில் ஒன்றுதான், நமது சூரிய குடும்பம் வசிக்கும் பால்வழி மண்டலம் இரவில் (நிலவற்ற, மேகமற்ற இரவில்.. நாம் இதனைக் காணமுடியும்) நமது சூரியகுடும்பம், இந்த அண்டத்தின் வெளிப்பிரகாரத்தில், ஒரு தூசு போல் ஒட்டிக் கொண்டிருக்கிறது. சூரிய விண்மீனைச் சுற்றிவரும் மூன்றாவது கோள்தான் ... நாம் வாழும் பூமி. விஞ்ஞானிகள் அறிந்தவரை நமது பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன. ஏனெனில், உயிர் தோன்றுவதற்கு, உயிர் வாழ்வதற்கு சாதகமான தட்பவெப்பநிலை மற்றும் வளிமண்டலம் பூமியில் மட்டுமே உள்ளது. நண்பா!

நம் வளிமண்டலம்.

நம் புவியினை அற்புதமான பாதுகாப்பு கவசம் போல், போர்வை போல, பாதிப்பான சூரியனின் புற ஊதாக்கதிர்களிடமிருந்து காத்துக்-கொண்டிருக்கிறது. வளிமண்டலம்தான் வளி-மண்டலத்தில் 78% நைட்ரஜன் 20.9% ஆக்ஸிஜன் பிராணவாயு 0.03% கரியுமிலவாயு/ கார்பன்டை ஆக்ஸைடு உண்டு. மீதமுள்ள வாயுக்கள் நியான், ஹீலியம், ஹைடிரஜன், முதேன், நீராவி, சல்பன் என ஏராளமான வாயுக்கள் கலந்துள்ளன. இவற்றில் கரியுமல்ல வாயு, குளோரோ புளோரோ கார்பன் சுருக்கமாக CFE எனப்படுவது மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு, சல்பர்டை ஆக்ஸைடு போன்ற வாயுக்கள், பசுமை அக வாயுக்கள் எனப்படுகின்றன. இவற்றின் அடர்த்தி, வளிமண்டலத்தில் குறைவாக இருந்தாலும், இந்த வாயுக்களின் செயல்-பாட்டால்தான் புவியில் உயிரினங்கள் உயிர்-வாழ்கின்றன நண்பர்களே!

பசுமை அக வாயுக்களின் பங்களிப்பு:

சூரியன்தான் .. நம் பூமியின் ஆற்றல் நாயகன். தினமும் ஏராளமான ஒளி ஆற்றலை பூமிமீது வீசிக்கொண்டு இருக்கிறது. இதில் பூமிக்கு தேவையானது போசு, மீதி ஒளியும், வெப்பமும் வான்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது. விண்-வெளிக்குச் செல்லாமல் பூமியின் வளிமண்டலத்தில் நிற்கும் வெப்பமே, கடலை இயக்க, மழை பொழிய பனிகொட்ட தாவரம் உணவு தயாரிக்க உதவுகிறது. இந்த வெப்பத்தை தக்க வைத்துக் கொள்ள துணை புரிவவை பசுமை அக வாயுக்களே!

வெப்பம் ......... தொடரும்.

Pin It