கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: விண்வெளி
எப்சிலான் ஆரிகே என்பது வட வானில் மின்னும் பிரகாசமான நட்சத்திரம். இது 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மெள்ள பார்த்துக் கொண்டிருக்கும் போதே பார்வையிலிருந்து மறைந்து போகும் அதிசய நட்சத்திரம். மறுபடியும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு புலப்படும். சூரியக் கிரகணத்தைப் போல இது தோன்றினாலும் ஏன் 2 ஆண்டுகள் அது நீடிக்கிறது? ஏன் 27 ஆண்டுகளுக்கு ஒரு முறை மறைந்துவிடுகிறது என்பதற்கான சரியான விளக்கம் கிடைக்காமல் சென்ற 100 ஆண்டுகளாக விஞ்ஞானிகள் திணறிக்கொண்டிருந்தனர்.
சென்ற வருடம் ஆகஸ்ட் அன்று எப்சிலான் ஆரிகே மீண்டும் மறைய ஆரம்பித்ததும் நாசாவின் ஸ்பிட்செர் ஆகாயத் தொலைநோக்கி அதை தனது புற ஊதாக்கதிர் கேமரா மூலம் படம்பிடித்தது. எப்சிலான் நட்சத்திர கிரகணத்திற்கு விளக்கம் உருவாகியிருக்கிறது. அது: எப்சிலான் ஆரிகே ஒரு பிரம்மாண்டமான நட்சத்திரம். அதைச் சுற்றியபடி இரண்டு நட்சத்திரங்கள் உள்ளன. அவை பிரும்மாண்டமான தூசிப்படலத்தில் மூழ்கியுள்ளதால் ஒவ்வொரு முறையும் அந்தத் துணை நட்சத்திரங்கள் நமக்கும் எப்சிலானுக்கும் இடையில் வரும்போது குறிப்பிட்ட கிரகணம் நிகழ்கிறது; எப்சிலான் மறைந்துவிடுகிறது.
படத்தில் புகை மண்டலம் நட்சத்திரத்தை மறைப்பது காட்டப்பட்டுள்ளது.
- முனைவர் க.மணி (
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
இந்த ஜூன் மாதம் நாம் ஒரு வால்மீனை விடிகாலை வேளையில் பார்க்க முடியும். வால்மீன், அதாங்க வால் நட்சத்திரம்னு சொல்றோமே அதுதான். ஆனால் அது விண்மீன்/நட்சத்திரம் இல்லை. அதுவும் நம் சூரிய குடும்பத்தின் உறுப்பினர்தான். கடைசி உறுப்பினர். ஆனா சொன்ன பேச்சு கேக்காத தறுதலைப் பிள்ளை. இதுபோல ஏராளமான தறுதலைப் பிள்ளைகள் சூரியனுக்கு உண்டு. நினைத்த நேரத்தில் வந்து, நினைத்த நேரத்தில் தன் சொந்த வீட்டை, தந்தையை, தான் நினைக்கும் காலம் வரை சுற்றி விட்டு ஓடிப் போய்விடும். சில சில சமயம் நினைத்தபோது மீண்டும் வரும் பிள்ளை. இப்போது வந்துள்ள இந்த பிள்ளையைப்போல் இன்னும் 54 தறுதலைப் பிள்ளைகள் இந்த வகையில் உண்டு. இந்த வகை வால்மீனுக்கு மெக் நாட் வால் மீன்கள் என்று பெயர். மெக் நாட் என்ற ஆஸ்திரேலியர் தான் இந்த வகையிலான வால் மீன்களைக் கண்டுபிடித்தார். அதனால் அவர் பெயரையே இவைகளுக்கு வைத்து விட்டோம்.
இப்போது, மெக் நாட் வால் மீன்களில் ஒருவர், ஜூன் மாதம் வருகிறார் நம் குடும்பத்தைச் சுற்றிப் பார்க்க. அவர் பெயர் வால்மீன், c/2009 R1, (மெக் நாட் - McNaught). இந்த மாதம்தான் இதனை நாம் நன்றாகப் பார்க்க முடியும். இது விடிகாலையில் வடகிழக்கே, பெர்சியஸ் (persius) என்னும் விண்மீன் படலத்தைக் கடந்து போகிறது. மேலும் இந்த மாதம்தான் இது மிகவும் பிரகாசமாக இருக்கும். இந்த வால்மீன் 5வது பிரகாச நிலையில் உள்ளது. ஒரு சின்ன இருகண் நோக்கி மூலம் பார்க்கலாம். வெறும் கண்ணாலும் பார்க்க முடியும். இப்போது வால்மீன் வரும் நேரம், நிலா காயும் நேரமாக இல்லாததால், நிலஉலக மக்கள் நிறைய பேர் இதன் பிரகாசத்தைப் பார்த்து மகிழ்ந்து உள்ளனர். இதன் மெலிதான நீளமான வாலையும் கூட பார்த்து பரவசப் பட்டனராம்.
ஜூன் 9ம் தேதியிலிருந்து மெக் நாட், விடிகாலை 3 .30௦ மணியிலிருந்து நன்றாகத் தெரிகிறதாம். அடிவானிலிருந்து நன்றாகப் பார்க்கும்படியான உயரத்தில், பெர்சியஸ் விண்மீன் படலத்திலுள்ள மூன்று விண்மீன்கள், முக்கோணமாக அமைந்துள்ள இடத்தில், வெறும் கண்ணாலேயே பார்க்குபடி உள்ளது. பொதுவாக வால்மீனுக்கு தலையும் வாலும் இருக்கும். வால் பல வடிவத்தில் இருக்கலாம். இங்கே மெக் நாட் வால் மீனுக்கு, சிறிய தலையும் , மெலிதான வாலும் உள்ளது. நிலநடுக்கோட்டின் வட பகுதியில் உள்ளவர்கள் எல்லோரும், விடிகாலையில் வடகிழக்கில் இந்த மெக் நாட் வால்மீனைப் பார்க்கலாம்.
மெக் நாட்டின் விஜயம் மே மாதமே துவங்கிவிட்டது. அப்போது இது நமது பால்வழிஅண்டத்தின் அடுத்த வீடான ஆண்ட்ரோமிடாவில் (Andromedae) காணப்பட்டது. ஜூன் 5 ம் நாளிலிருந்து இன்னும் கொஞ்சம் வடக்கு நோக்கி நகர்ந்து,
பெர்சியசின் எல்லைக்குள் வந்து விட்டது. இப்போதுதான் வால்மீனின் பிரகாசம் கூடிக்கொண்டே இருக்கிறது. இதுதான் நாம் பார்க்க மிகவும் சாதகமான காலம். இது ஜூன் 23 -24 தேதிகளில், ஔரிகா(Auriga ) விண்மீன் படலத்தின் அருகில் இருக்கும். அப்போது மெக் நாட் இப்போதைவிட இன்னும் பிரகாசமாக இருக்கும். ஆனால், நமக்கு ஒரே ஒரு கஷ்டம்தான். அதான் நிலா வலம் வந்து, மெக் நாட் அருகே நிற்பார். அப்புறம் எப்படி அவரது ஆட்சியில், இந்தத் துளியுண்டு ஒளி வெளியிடும் மெக் நாட்டைப் பார்க்க?
மெக் நாட் ஒவ்வொரு நாளும், 1 டிகிரி கிழே இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஜூன் மாத இறுதியில் மெக் நாட் நம் பார்வையைவிட்டே ஓடி விடும்; ஓடியே ஓடிப் போய்விடும். இது ஹைப்பர்போலிக் வளையத்தை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இதன் தாயகமான ஊர்ட் மேகத்தை விட்டு புறப்பட்டதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக பயணத்தை துவங்கி இருக்கிறது. இதன் பயணம் அடுத்த ஆண்டும் தொடரும். ஆனால் நமது கண் பார்வைக்குத்தான் தெரியாது.
இதுவரை வந்த மெக் நாட் குழும உறுப்பினரில், 2007ம் ஆண்டு, ஜனவரியில் பொங்கலுக்குப் பின் வந்த வால் மீன்தான் மிகவும் பிரகாசமானது. அதனை வெறும் கண்ணால், சூரியன் மறைந்த உடனேயே, மேற்கு வானில் 40 ௦டிகிரி உயரத்தில் பார்த்து மகிழ்ந்தோம்
- பேரா.சோ.மோகனா (
- விவரங்கள்
- முனைவர் க.மணி
- பிரிவு: விண்வெளி
சந்திரா என்பது நாசாவின் விண்வெளி டெலஸ்க்கோப்பு. ஆகாயத்தின் மிதந்தபடி பேரண்டத்தைப் படம் பிடிக்கிறது. லாரா லோபெஸ் என்பவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (சான்ட்டா க்ரூஸ்) பயிலும் பேரண்டவியல் மாணவி. இவரது வேலை நட்சத்திரங்கள் தமது வாழ்நாள் இறுதியில் எப்படி வெடித்து மடிகின்றன என்பதை வகைப்படுத்துவது.
நட்சத்திரங்கள் தம்மையே எரித்து பிரகாசிக்கின்றன. அவற்றின் எரிபொருள் தீர்ந்து போகும் தருவாயில் மிகப் பெரிய தெர்மோ நியூக்ளியார் வெடிப்புக்கு உள்ளாகி ஹைட்ரஜன் பாம் போல வெடித்துச் சிதறுகின்றன. அந்த சிதறலை சூப்பர் நோவா என்று அழைப்பது வழக்கம். சாதாரணமாக ஒரு வெண் புள்ளியாக இருந்த நட்சத்திரம் திடீரென்று மிகப் பிரகாசமாக பெரிய ஒளிப்பந்தாக காட்சிதரும்.
லாராவின் வேலை சூப்பர்நோவா வெடிப்புகளுக்குப் பிறகு அந்த விண்மீன் எப்படி விரிந்து சிதைகிறது என்பதை அறிவதன் மூலம் அதன் மரணகால நிகழ்வுகளைக் கண்டறிவது. சூப்பர் நோவாக்களில் இரண்டு வகைகள் இருப்பது தெரிகிறது. ஒன்று டைப் 1ஏ என்பது. இது வெள்ளைக் குள்ளன் என்று அழைக்கப்படும் வயோதிக நட்சத்திரம் வெடிக்கும்போது நிகழ்வது இது.
இன்னொரு வகை சூப்பர்நோவா அகால மரணமடையும் பூதாகரமான இளம் நட்சத்திரங்களின் மரணத்தின் போது நிகழ்வது. இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு மரண வயதும் மரணமடையும் நட்சத்திரத்தின் சைசும்தான். இவ்விரண்டையும் அவற்றின் சூப்பர்நோவாக்களின் அமைப்பை வைத்து கண்டுபிடித்துவிட முடியும் என்பது லாராவின் கண்டுபிடிப்பு.
வெள்ளைக்குள்ள நட்சத்திரம் அதாவது டைப் 1ஏ வகை மரணங்களின்போது உருண்டையான சூப்பர்நோவா ஏற்படுகிறது (படம்- இடது). மாறாக அகால மரணமடையும் நட்சத்திரங்களின் வெடிப்பின்போது சீரற்ற சூப்பர்நோவா (படம்- வலது) ஏற்படுகிறது. மேலும் இதை ஆராய்ந்தால் நட்சத்திரங்களின் இரகசிய வாழ்க்கைகளைப் பற்றிய விஷயங்கள் பல வெளிப்படும் என்பது லாராவின் எதிர்பார்ப்பு.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: விண்வெளி
நாம் எல்லோரும் தினமும் வானைப் பார்க்கின்றோம். வானைப் பார்க்காத மனிதர்கள் உண்டா? இரவு பகல் எந்த நேரத்திலும் வானில் வலம் வரும் சூரியன், சந்திரன், விண்மீன்கள், வால்மீன்கள், மேகங்கள் என பார்க்கிறோம். ஆனால் அவற்றைப் பற்றிய அறிவியல் உண்மைகள் எத்தனை பேருக்குத் தெரியும்? அதேபோல் தான் சோதிடமும். அதன் தோற்றமும், உண்மை பொய் பற்றியும் தெரியாது. எந்த விஷயமாக இருந்தாலும் பத்துபேர் சேர்ந்து சொல்லி விட்டாலோ, எழுத்துக்களில் வந்துவிட்டாலோ நம்மில் பெரும்பாலோர் 100 சதவீதம் உண்மையென்றே நம்பி விடுகின்றனர். வானியலையும். சோதிடத்தையும் பாலையும், காப்பியையும் ஒன்றாகக் கலப்பது போல் கலந்து குழப்பி விடுகின்றனர். தன் கைக்கு எட்டாத கண்ணில் படுகின்ற, தொலைவில் உள்ள பொருட்களின் மேல் செலுத்தும் கற்பனையும் விருப்பக்கருத்தும் அரைகுறையாளர்களின் புருடாவும் தான் சோதிடம்.
வானியல் என்றால் என்ன?
வானவியல் என்பது வானில் காணப்படும் சூரியன், சந்திரன், விண்மீன்கள் தவிர வானில் காணப்படும் கணக்கு தெரியாத ஆழ்வானின் பொருட்களைத்தான் நாம் அறிவோம். நம் குழந்தைகட்கு பூமி பற்றி சொல்லும்போது கண்டம், கடல், நிலம், தாவரம், விலங்கு, பாறை போன்ற விசயங்களையும் சேர்த்துத்தானே சொல்லுகின்றோம். அதுபோல்தான் வானியலும், வான் பொருட்களும். பூமிக்கு வெளியே வளிமண்டலம் தாண்டி என்ன இருக்கிறது? காற்றில்லாத வெற்றிடம், அது தாண்டி கோள்கள், விண்மீன், அதனைச்சார்ந்த கோள்கள் எல்லாம் உள்ளன. அதுமட்டுமா, புவியின் துருவங்களில் உண்டாகும் துருவ ஒளி, வெகு தொலைவில் பிரபஞ்ச கதிர்வீச்சு என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன. இவை இயற்பியல், வேதியியல், கணிதம் தொடர்பானவைதான்.
பழங்கால வான்நோக்கு இடங்கள்
நாம் வானை நோக்குவது என்பது காலம்காலமாய் கடைப்பிடித்துவரும் பொழுது போக்குகளில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மனிதன் தான் பார்த்துத் தெரிந்த தகவல்களை குகைகளிலும், களிமண் பலகைகளிலும், கற்களிலும், எலும்புகளிலும் மிகப்பாதுகாப்பாக பதிவு செய்துள்ளான். முற்காலத்தில் சாதாரணமாய் கண்ணுக்குப் புலப்படும் வான்பொருட்களின் நகர்வு கண்டு காலம், நேரம் கணிக்கப்பட்டது. இங்கிலாந்தில் முன்பு வளைய வடிவில் அமைக்கப்பட்ட நீண்ட நெடும் கற்பாறைகள் வான்நோக்கு கற்கள் என அழைக்கப்பட்டன. இதன் இடைவெளி வழியே சூரியனைப் பார்த்து நேரம் காலம் அறியப்பட்டது.
சோதிடத்தின் பிறப்பு...
நவீன வானவியல் என்பது சோதிடத்துடன் ஒன்றாக சேர்ந்து கைகுலுக்கிக்கொண்டு குழம்புவதோ குழப்புவதோ இல்லை. சோதிடம் என்பதை ஆங்கிலத்தில் Astrology என்று கூறுகிறோம். இதன்பொருள் விண்மீன்கள் பற்றிய நம்பிக்கை என்பதே. (Astro-Star : Logy – belief / study). சோதிடம் என்பது முழுக்க முழுக்க நம்பிக்கையின் அடிப்படையில் உருவானது. உலகில் மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு வான்பொருட்கள் நகர்வதே காரணம் என கற்பனை செய்துகொண்டான். வானவியல், சோதிடம் இரண்டும் வேறு வேறு துறைகள் தான். ஆனால் இரண்டும் வான் பொருட்களை ஆதாரமாகக்கொண்டே உருவானவை. இரண்டிற்கும் பொதுவான துவக்க அம்சங்கள் உண்டு. சோதிடம் சூரியன், சூரியனைச்சுற்றும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றைக் குறிப்பிடுகிறது. சூரியக்குடும்பத்தின் பிற கோள்களான யுரேனஸ், நெப்டியூன் பற்றி மூச்சு விடுவதே இல்லை. அதுமட்டுமல்ல, சோதிடக்கட்டத்தில் நம் குடும்பத்தலைவரான சூரியனையும் ஒரு கோளாகவே குறிப்பிடுகின்றனர். பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கும் கோளின் பதவி தரப்படுகிறது. பாம்பு என்ற ஒன்றைப் புகுத்தி அதன் தலையை வெட்டி தனியாக்கி தலைக்கும், பாம்புக்கும் தனித்தனியாக ராகு, கேது என்று பட்டமும் கொடுக்கின்றனர். ராகு, கேது என்ற கோள்கள் வானவியலில் கிடையாது. இவை சோதிடரின் கற்பனையே...
பழங்கால வானவியல்
சோதிடமும், வானவியலும் பழங்கால நாகரிகங்களின் வழியே வளர்ந்துள்ளன. நாகரிகம் வளர வளர பாபிலோனியா, பெர்சியா, எகிப்து பழங்கால கிரிஸ், இந்தியா, சீனா போன்ற நாகரிகங்களில் வான்நோக்கு கூடங்கள் கட்டப்பட்டன. எகிப்து நாட்டின் கல்லறைகளான பிரமீடுகளின் வழியே வானில் தெரியும் வேட்டைக்கார விண்மீன் மற்றும் சிரியஸ் விண்மீன்களைப் பார்க்கலாம். அவர்கள் வாழ்க்கையை இந்த விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி பார்த்தனர். பிரபஞ்சம் பற்றிய கண்ணோட்டம் பழங்கால நாகரிகத்தினிடையே கொஞ்சம் கொஞ்சமாக விரியத் தொடங்கியது. கோள்களின் நகர்வு சூரியன், சந்திரன், பூமியின் தன்மை பற்றி அறியப்பட்டது. நாம் ஊர் ஊராக அழைந்து கொண்டு இருப்பவரை பரதேசி என்று குறிப்பிடுவோமே... அதேபோல நிற்காமல் அலைந்து கொண்டிருக்கும் சூரியக்குடும்ப உறுப்பினர்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்றவற்றை கோள்கள் என்றே அழைத்தனர்.
ஒண்டவந்த பிடாரி
அண்டம் போகட்டும். ஜோதிடம் எப்படி, காலம் காலமாக தனக்கு தெரிந்த விஷயங்களை மனிதன் வானில் பார்க்கிறான். அப்போது பூமியில் எதேச்சையாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன. அக்காலகட்டத்தில் வாழ்ந்த அறிவு ஜீவிகள் இரண்டையும் தொடர்புபடுத்தி சாதாரண பாமர மக்களிடம் தெரிவிக்கின்றனர். மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் நிகழ்வுகளும், நகர்வுகளும் காரணம் என்பது சுவையாகமிருந்தது. ஆனால் வெளிச்சப்பொருட்களான சூரியன் சந்திரனுக்கான காரணங்கள் பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை. எதனை எதனோடு இணைப்பது என்ற ஆர்வத்தில் பிறந்தது தான் சோதிடம். நம் ஊருக்கு யாராவது தெரியாதவர் வந்து நடமாடினால் அவரைப்பற்றி நமக்குத்தோன்றியதெல்லாம்.. சும்மா எடுத்துவிடுவதில்லையா, அதுபோல் தான் இதுவும். எனவே வானில் சூரியன், சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, திருமணம், குழந்தைப்பேறு, கெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்க தொடங்கினர். பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்த கதைதான் சோதிடத்தின் பின்னணி. சோதிடம் முக்கியமாக மன்னர்களின் வாழ்நாள், வழித்தோன்றல்களுக்கு காரண காரியம் மற்றும் குறிசொல்லத்தொடங்கி பாமர மக்களிடம் வந்து ஒட்டிக்கொண்டது. இவ்வாறு தான் இன்று அதுபோக வீடுகட்டுதல். சமையலறை, கழிப்பறை, நடந்துபோதல் போன்றவைகளுக்கும் கூட வாஸ்து, தாஸ்து என பார்க்க ஆரம்பித்துவிட்டனர். முயற்சியை ஒதுக்கும் போலிமையின் நிகழ்வுகள் இவை.
கதை சொல்லவா..
சோதிடத்தில் அறிவியல் கூறுகள் மிக மிக குறைவாக உள்ளதால் இதனை போலி அறிவியல் என்றே அழைக்கிறோம். இந்த நம்பிக்கை பழங்கால நாகரிகம் மற்றும் வாழ்வியலுடன் பின்னிப்பிணைந்தே வளர்ந்தது. நம் பிரச்சனைக்கு யாராவது வழி காட்டமாட்டார்களா, உதவிக்கரம் நீட்டமாட்டார்களா என்ற பரிதவிப்பிலும் நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லை, யாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கை குறைவாலும், செழிப்புடன் வளர்ந்தது சோதிடம். சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கள் இந்த இடத்தில் இருந்தபோது இந்த நிகழ்வு நடந்ததது என்ற தற்செயல் நிகழ்வாலும் உருவானதுதான் சோதிடம் ஆனதால் ஆதிகால கணிதவியலாளர்கள் எல்லாம் வானவியல், சோதிடம், நிலவியலில் விற்பன்னர்களாக இருந்தனர். பலவகை நாகரிகங்களிலும் அவர்களின் கணிப்புப்படியே சோதிடம் உருவாக்கப்பட்டிருந்ததது. சுமேரியா, பாபிலோனியா, சீனா, இந்தியா, எகிப்து, கிரிஸ் மற்றும் ரோமானிய நாகரிகங்களிலும் சோதிடம் பற்றி பேசப்படுகிறது. ஆனால் அவற்றில் கணிப்பு ஒன்றையொன்று சார்ந்ததில்லை; தனித்தனியே உருவானவையே. வான்பொருட்கள் பற்றிய கணிப்பு மட்டும் எல்லா நாகரிகங்களிலும், எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. சீன சோதிட உருவாக்கமும் அதன் பரிணாமமும் வேறு விதமானவை.
இந்திய சோதிடம்
இந்தியாவில் வானில் சூரிய வீதியில் காணப்படும் விண்மீன் தொகுதிகளை 27 நட்சத்திரங்களாகவும், 12 ராசிகளாகவும் பிரித்துள்ளனர், ஒவ்வொரு ராசிக்கும் 2 ¼ விண்மீன் தொகுதிகள் என கூறப்பட்டுள்ளது. தமிழ் சோதிடத்தில் உள்ள ஒரு விண்மீன் என்பது வானில் பல விண்மீன் தொகுதிகளைக்கூட குறிக்கிறது. (உதாரணம் உத்திராடம்) வானில் தெரியும் விண்மீன்களை கிழக்கில் இருந்து மேற்காகவே நாம் ராசிமண்டலத்தில் சேர்க்கிறோம். இது ராசி மண்டல வளையம் எனப்படுகிறது. இவை தெரிவதை சூரிய விதி என்றும் சொல்கிறோம். இது நிலநடுக்கோட்டிலிருந்து 23 ½ பாகை சரிந்துள்ளது. சூரிய வீதியும், நிலநடுக்கோடும் சந்திக்கும் இடத்தில் சமகால நாட்கள் அமைந்துள்ளன. வருடத்தில் அவை மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23 என 2 நாட்களில் நிகழும். தமிழில் தான் 27 நட்சத்திரங்கள் உள்ளன என்று கூறுகிறோம். ஆனால் சர்வதேச வானியல் கழகத்தின் கணிப்புப்படி வானின் விண்மீன் தொகுதிகளை 88 விண்மீன் படலங்களாக பிரித்துள்ளனர். இவற்றின் முக்கியமானவை வடதுருவ பெருங்கரடிக்கூட்டம், துருவ விண்மீன், தென்பகுதி தெற்குச்சிலுவை ஆகியவை. இவை பொதுவாக இடம் மாறுவது இல்லை. இவை துருவத்தை சுற்றிவருதால் துருவம் சுற்றும் விண்மீகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால் கிழக்கு மேற்காக உள்ள விண்மீன்கள் பூமியின் சூழற்சியால் கிழக்கிலிருந்து மேற்காக நகர்வதுபோல தோன்றுகிறது.
நீங்கள் முன்னிரவில் அடிவானில் தோன்றும் விண்மீன் ஒன்றின் நேரத்தைக் குறித்துக்கொள்ளுங்கள். மறுநாள் அது எத்தனை மணிக்கு உதிக்கிறது என்பதையும் கவனியுங்கள். அந்த விண்மீன் 4 நிமிடம் தாமதமாகவே வானில் தெரியும். காரணம் நம் பூமியின் சூழற்சியால்தான். மேலும் விண்மீன்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. ஆனால் என்றோ பார்த்த விண்மீன்களை கணக்கில் கொண்டு சோதிடர்கள் சோதிடம் கணிக்கின்றனர். அனைத்து விண்மீன்களும் தங்களின் இடத்திலிருந்து என்றோ இடம் பெயர்ந்துவிட்டன. சோதிடர்கள் கணிக்கும் விண்மீன்கள் பல 100 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளன. உதாரணமாக திருவாதிரை விண்மீன் 640 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. நனவும், நினைப்பும் வேறு வேறாக உள்ளது நண்பா! தமிழ் சோதிடத்தில் அஸ்வினி, பரணி, கார்த்திகை 3ம் சேர்ந்தது மேஷராசி. ஆனால் 3 நட்சத்திரங்களும் தனித்தனி விண்மீன் தொகுதிகள். கார்த்திகை விண்மீன்தொகுதியில் ஆறு பெரிய விண்மீன்களும் அதற்குள் ஏராளமான விண்மீன் திரள்களும் உள்ளன.
பேரா.சோ.மோகனா (
- பிரபஞ்சத்தின் எல்லையில்லா தொடர் பயணம்
- மதவாதிகளால் ஒடுக்கப்பட்ட பழங்கால வானவியல்
- சூரியனின் சாவும், பிரபஞ்சத்தின் பிறந்த தினமும்
- லைரிட்.. விண்கற்கள்.. பொழிவு ..!!
- டெலஸ்கோப்பின் துளை வழியே பேரண்ட எழில்
- நிலவைத் தேடி சந்திராயன்
- 2019ம் ஆண்டு பூமியை விண்கல் தாக்குமா?
- சந்திரனில் காற்று இல்லாதது ஏன்?
- போக்கிலி கருந்துளைகள்
- பேரண்டம் தோன்றுவதற்கு எது முதல் காரணம்?
- சந்திரன் பெரிதாகத் தோன்றும் ஜனவரி 10ஆம்தேதி.
- சூரியக் குடும்பம்
- வால் நட்சத்திரம்
- உலகம் தோன்றிய கதை
- சூரியன் ஒரு முழுக்கோளம் இல்லை
- சூரிய நடுக்கம்
- யாரறிவார் இயற்கையை...
- மயிரிழையில் பூமி பிழைத்தது
- எளிமையான ரேடியோ தொலைநோக்கி
- நிலாவில் குடியேறுவதற்கான வழிகள்