அண்டம்

ஓர் உயிர் உருவாகும் மூலத்தை தான் நாம் ‘அண்டம்’ என அழைக்கிறோம். எனவே தான் உயிரை உருவாக்கும் கரு முட்டைக்குக்கூட அறிவியலில் அண்டம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பல கோடி உயிர்களைக் கொண்ட புவியையும், விண்மீன்களையும், கோள்களையும், விண்மீன் கூட்டங்களையும், வெற்றிடங்களையும் தனக்குள்ளே வைத்திருக்கும் பிரபஞ்சத்தை கூட நாம் அண்டம் என்றே அழைக்கிறோம். அண்டம் என்ற பெயருக்கு ஏற்ப அது அகண்டும் இருக்கிறது!

ஒளி ஆண்டு

உலகிலேயே மிகவும் வேகமாக பயணம் செய்யும் ஆற்றல் பெற்றவை ஒளிக்கதிர்கள் மட்டும்தான். ஓர் ஒளிக்கற்றை ஓர் ஆண்டில் பயணம் செய்து கடக்கின்ற தூரம் தான் ஓர் ஒளியாண்டு என அழைக்கப்படுகிறது. அப்படியானால் ஒளி ஒரு வினாடி நேரத்தில் பயணம் செய்யும் தொலைவு என்ன? ஒளி ஒரு வினாடி நேரத்தில் 3,00,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது (1,86,000 மைல்கள்). வினாடி கணக்கை நாம் அப்படியே ஓர் ஆண்டுக்கு மாற்றலாம்.

ஒரு வினாடிக்கு ஒளி பயணம் செய்யும் வேகம் 3 x 108 என்ற அளவீட்டால் குறிக்கப்படுகிறது. இந்த அளவீட்டுடன் நாம் ஓர் ஆண்டின் மொத்த நாட்களையும், ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்தையும், ஒரு மணி நேரத்தின் அறுபது நிமிடங்களையும், ஒரு நிமிடத்தின் அறுபது வினாடிகளையும் சேர்த்து பெருக்கிக் கொள்ளலாம்.

ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

-(நன்றி : தலித் முரசு ஏப்ரல் 2008)

Pin It