மனிதர்களிடையே அண்ணன்-தங்கை போன்ற நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு தவிர்க்கப்பட்டுள்ளது. இதைப்போன்றே சிலவகையான பறவை, எலி, பல்லி இனங்களிலும் நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் பாலுறவு தவிர்க்கப்படுகிறது என்பது ஆய்வுகளில் இருந்து தெரிய வருகிறது.  கறுப்புக்கால்களை உடைய “கிட்டிவேக்” என்னும் கடற்கரைவாழ் பறவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பதை  BMC Evolutionary Biology என்னும் ஆய்வு இதழ் ஒரு கட்டுரையாக வெளியிட்டுள்ளது.

மனிதர்களிடையே ஒருதாரமணத்தை பின்பற்றுபவர்கள், பலதாரமணத்தை ஏற்றுக்கொண்டவர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இதைப்போலவே, பறவைகளில்கூட ஒரே நேரத்தில் பல பறவைகளுடன் பாலுறவு கொள்ளுதல் அல்லது ஒரு சமயத்தில் ஒரு பறவையுடன் மட்டுமே பாலுறவு கொள்ளுதல் என்ற கோட்பாடுகள் கடைபிடிக்கப்படுவதுண்டு. கறுப்புக்கால்களை உடைய kittiwake என்னும் கடற்கரையோரமாக வாழக்கூடிய பறவை மிகத்தீவிரமான ஏகபத்தினி விரதன். இவை நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதுதான் BMC Evolutionary Biology இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையின் சாரம். பல ஆய்வர்கள் கூட்டாக நடத்திய ஆய்வில் இருந்து பல தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.

Kittiwake பறவைகள் நெருங்கிய இரத்த உறவுகளில் பாலுறவு கொள்வதில்லை என்பதும் அவ்வாறு பாலுறவு கொள்ள நேரிட்டால் உயிர்பிழைக்கும் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து போகிறது என்பதும் சுவையான செய்தி. கிட்டிவேக் பறவைகள் தங்களுடைய இரத்த உறவுகளை எத்தனை பெரிய பறவைக்கூட்டத்திலும் கண்டுபிடித்து விடுகின்றன. அப்படி தவறுதலாக ஏதேனும் பாலுறவு ஏற்பட்டாலும்கூட முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை அல்லது பொரித்த குஞ்சுகளும் இறந்துபோய் விடுகின்றன.

குஞ்சுகளைப் பொரித்தவுடன் அவற்றின் பெற்றோர் நெருங்கிய இரத்த உறவில் வந்த குஞ்சு இது என்று இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி, குஞ்சுகளை வெறுக்கத் தொடங்குகின்றன. இந்த வகை குஞ்சுகள் நோய், உண்ணி இவற்றால் எளிதில் தாக்கப்படுகின்றன. இவற்றின் வளர்ச்சியும் மெதுவாக இருப்பதால் மற்ற பறவைகளுடன் போட்டியிட்டு வாழமுடிவதில்லை. கிட்டிவேக் பறவைகள் வாழ்க்கை முழுவதும் சேர்ந்தே வாழுகின்றன என்பதும் மணமுறிவு எக்காலத்திலும் ஏற்படுவதில்லை என்பதும் வியப்பான செய்தி. உடல் வாசனையைக் கொண்டு நெருங்கிய இரத்த உறவுகளை இந்த கிட்டிவேக் பறவைகள் அடையாளம் காண்கிறதா என்பதைப்பற்றி ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/06/090629200636.htm

 - மு.குருமூர்த்தி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

 

Cat eyesஇரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.

இருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்களிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும், தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.

கருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.

இருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால், இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.

செல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.

முனைவர். க. மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

பயிரியல்துறை. பி எஸ் ஜி கலை அறிவியல் கல்லூரி. கோயம்புத்தூர்

 

Pin It

ஊர்வன என்பவை தரையோடு தரையாக ஊர்ந்து செல்லும் பிராணிகள் ஆகும்.

Snakeஊர்வனவற்றின் சிறப்புக் குணங்கள்:

1. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தல்
2. முதுகெலும்புள்ள பிராணிகள்
3. கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக்கொண்ட விரல்கள்.

பறவைகளும் கால்களில் கொக்கிபோன்ற உகிர்களைக் கொண்டிருக்கின்றன. எனவே பறவை அல்லாத ஊர்ந்து செல்லும் உயிர்களை ஊர்வன என்று வகைப்படுத்தலாம். எறும்பு, தேள், பூரான், பூச்சிகள், சிலந்தி போன்றவற்றிற்கு முதுகெலும்பு இல்லை. எனவே ஊர்வன என்று இப்பிராணிகளைக் கூற இயலாது.

சிறுவர்கள் வேலிகள், புதர்கள் இவற்றில் காணப்படும் ஓணான்களை எந்தவித காரணமும் இன்றி அடித்துக் கொன்றுவிடுகின்றனர். ஓணான்கள் நமக்கு எந்த தீங்கும் செய்வதில்லை. மாறாக நமக்கு அவை நன்மையே செய்கின்றன. பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை அவை இரையாக உண்ணுகின்றன.

பாம்பைக் கண்டால் அடித்துக் கொல்லும் மானிடர்கள் உண்டு. பயந்து ஓடும் மானிடர்களும் உண்டு. பாம்புகள் மனிதர்களுக்கு எந்த விதத்திலும் தீங்கிழைப்பதில்லை. பாம்பு கடித்து சிலர் இறந்திருக்கலாம். தனக்கு ஆபத்து என்று உணரும்போது மட்டுமே பாம்புகள் கடிக்கின்றன. மனிதர்களைத் தேடிவந்து எந்த பாம்பும் கடிப்பதில்லை.

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It

 

Xerophyta viscosa"உயிர்த்தெழும் செடி" என்று ஒரு தாவரம் இருக்கிறது. ஸீரோஃபைட்டா விஸ்கோசா (Xerophyta viscosa) என்பது அதன் அறிவியல் பெயர். இது 95 சதவீதம் காய்ந்துபோன பிறகும்கூட கொஞ்சம் தண்ணீர் விட்டால் மறுபடியும் பிழைத்துக் கொள்ளும். காய்ந்து போனாலும் உயிரைத் தாக்குபிடிக்கும். இதன் ஜீன் எது என்பதை கண்டுபிடித்து அதை நெல்லுக்கும் இதர பயிர்களுக்கும் வழங்கினால் நன்செய் பயிர்களை புன்செய் பயிர்களாக வறண்ட பூமியில் வளரச் செய்யலாம்.

ஆனால் ஜீன் மாற்று ஆய்வுகளில் பெரும்பகுதி தனியார் ஆய்வுக்கூடங்களின் அறிவுசார் சொத்தாக இருப்பதால் உண்மையான பசுமைப் புரட்சியைத் தருமா அல்லது இன்னுமொரு ஏழை பணக்கார போராட்டத்தைத் தருமா என்பது கேள்விக்குறி.

கலைக்கதிர், ஜூலை 2008

அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It