கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
![]()
கல்வித் திருவிழா, உணவுத் திருவிழா என்று திருவிழாக்கள் கொடி கட்டிப் பறக்கும் காலம் இது! அந்தத் திருவிழாக்களோடு பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் இன்டர்நெட்டிற்கும் விழா கொண்டாடினால் எப்படி இருக்கும்?
நாம் எல்லாம் இணையத்தில் உலாவப் பயன்படுத்தி வரும் பயர்பாக்ஸ் உலாவி(அதாங்க பிரெளசர்)யைப் பயன்படுத்துகிறோம் இல்லையா? அந்த பயர்பாக்சை நமக்கு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிறுவனம் தான் மொசில்லா பவுண்டேஷன். 'ஓப்பன் வெப்' எனப்படும் சுதந்திர இணைய வெளிக்குக் குரல் கொடுத்து வரும் நிறுவனம் இது!
இணையம் எனப்படும் இன்டர்நெட் வந்த பிறகு தான், வெகுமக்களின் குரல் கொஞ்சமாவது வெளியே தெரிகிறது. முன்பெல்லாம் பத்திரிக்கைகளில் எழுதுவோர் தான் எழுத்தாளர்கள், அவர்களுடைய எழுத்துகள் தான் மக்களின் கருத்துகள்! இப்போதெல்லாம் அப்படியில்லை! எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஒரு கணினியும் இணையமும் இருந்தால் போதும்! பிளாக், ஆடியோ, வீடியோ என்று அசத்தி விடுகிறார்கள் நெட்டிசன்கள். நம்மூர்க்காரர்கள் இங்கிருந்தே வெளிநாட்டு மொழி படிக்க வேண்டுமானாலும் சரி, வெளிநாட்டில் இருக்கும் நம்மவர்கள் அங்கிருந்தே தமிழ் படிக்க வேண்டுமானாலும் சரி! அத்தனையும் சாத்தியம் - இணையம் வந்ததோ வந்தது – ‘அது போன வாரம், இது இந்த வாரம்’ என்றெல்லாம் தப்பிக்க முடியாது. ஆதாரத்தோடு, பிரதமர் தொடங்கி உள்ளூர் கவுன்சிலர் வரை - அத்தனை பேரையும் லாடு கட்டி விடுகிறார்கள் இணையம் பயன்படுத்தும் இளைஞர்கள்.
இத்தனை இருந்தும் இணையம் என்னவோ இளைஞர்களின் கைகளில் மட்டும் தான் இருந்து வருகிறது. 'இன்டர்நெட் பத்தி நமக்கு என்னப்பா தெரியும்?' என்பதே வயதானவர்களின் அங்கலாய்ப்பாக இருந்து வருகிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் - எல்லாவற்றையுமே இலவசமாகக் கொடுக்கும் இணையத்தை, நாமும் பிறருக்கு இலவசமாகச் சொல்லிக் கொடுப்பது தானே முறை! அப்படி ஒரு தளத்தை இளைஞர்களுக்கு (மட்டுமல்ல இணையம் தெரிந்த எல்லோருக்குமே) மொசில்லா ஏற்படுத்திக் கொடுக்கும் திருவிழா தான் ‘வெப் மேக்கர் பார்ட்டி’!
பிறந்த நாள் பார்ட்டி, வேலை கிடைத்ததற்கு பார்ட்டி, திருமணம் ஆனதற்குப் பார்ட்டி என்று மட்டுமே பார்த்துப் பழகியிருக்கும் நமக்கு இந்த பார்ட்டி கொஞ்சம் புதுசு தான்! ஆனாலும் ஈசி தான்! இந்த பார்ட்டியை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். இரண்டு பேர் இருந்தால் கூடப் போதும். இணையம் பற்றித் தெரிந்தவர், தெரியாதவரைச் சேர்த்துக் கொண்டு இணையத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் அவ்வளவு தான்! இதற்காகத் தனிப் பயிற்சியறைகள், கல்லூரிகள், தேவை என்பதெல்லாம் இல்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே கூட நீங்கள் சொல்லிக் கொடுக்கலாம்.
எத்தனைப் பேருக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்? என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும்? எவ்வளவு மணி நேரம் பார்ட்டியை நடத்த வேண்டும்? இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில் - உங்கள் விருப்பம் போல் என்பது தான்! 'நான் பக்கத்து வீடுகளில் இருக்கும் 40, 50 வயதுப் பெண்களுக்கு ஈமெயில் எப்படி அனுப்புவது என்று சொல்லிக் கொடுக்க ஆசைப்படுகிறேன்', 'என் நண்பர் ஒருவருக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் பற்றி நிறைய தெரியும், அவரைக் கூப்பிட்டால் கல்லூரி மாணவர்களுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கலாம்', 'அரசு ஊழியர்களுக்கு எக்செல், பவர்பாயிண்ட் பாடம் நடத்துவது' என்று எல்லாமே உங்கள் விருப்பம் தான்!
இதில் மொசில்லா பவுண்டேஷனின் பங்கு என்ன? https://learning.mozilla.org/events தளத்திற்குப் போய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை வைத்து, கணக்கு ஒன்றைத் தொடங்கிக் கொள்ளுங்கள். திருவிழா என்று சொன்ன பிறகு வண்ணமயமாக இருக்க வேண்டாமா? அதற்குத் தேவையான பல மென்பொருட்களை இலவசமாகவே மொசில்லா நமக்குத் தருகிறது. இணையத்தை உருவாக்கும் மென்பொருட்களை எளிய விளையாட்டுகள் மூலம், பிளக் இன்கள் மூலம் மொசில்லா தருகிறது.
இணையத் தளங்களை ரீமிக்ஸ் செய்ய உதவும் எக்ஸ்ரே காகிள்ஸ், இணையத்தளங்களை ஊடுருவும் ஹேக் தி மீடியா என்று விளையாட்டாகவே இணையத்தைப் படிக்க உதவும் எளிய மென்பொருட்களை இந்தத் தளத்தில் இருந்து எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் என்னென்னவோ சொல்கிறீர்கள். இணையம் என்றாலே எச்டிஎம்எல் தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்வார்களே! எங்களைப் போன்ற கத்துக்குட்டிகளுக்கு அது தெரியாதே! என்று யோசிக்க வேண்டிய தேவையேயில்லை. எச்டிஎம்எல் மொழியை எளிதாக நமக்குப் பயன்படுத்தும் அளவுக்குத் தெரிந்து கொள்ள வசதியாக 'சீட் ஷீட்' எனப்படும் உதவிப்பக்கத்தை இணைத்திருக்கிறார்கள்.
'கேட்பதற்கு இதெல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற நிகழ்ச்சியை நான் இதுவரை நடத்தியதே இல்லை. நிகழ்ச்சி நடத்த அடிப்படையாக என்னென்ன செய்ய வேண்டும்? நிகழ்ச்சிக்கு முன் செய்ய வேண்டியவை என்னென்ன? நிகழ்ச்சியின் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நிகழ்ச்சி முடிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும்? வெப் மேக்கர் பார்ட்டியில் கலந்து கொள்வோருக்குச் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்றால் டிசைனுக்கு எங்கே போவது? ஒரு திருவிழா என்றால் போஸ்டர் இல்லாமலா? அதை எப்படி வடிவமைப்பது? என்று பல கேள்விகள் வருகின்றனவா? கவலையே வேண்டாம், இவை எல்லாவற்றிற்கும் வரி விடாமல் மொசில்லாவின் https://learning.mozilla.org/events/resources பக்கத்தில் பதில் சொல்லியிருக்கிறார்கள். இது போதாதென்று நிகழ்ச்சியை நடத்துவதில் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்வதற்கு 'உதவிக்குழு'வின் இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு வித்தியாசமான திருவிழாவை நடத்தி இணையச் சமநிலைக்கு விதை போட்டு வருகிறது மொசில்லா. கூகுள், பேஸ்புக், என்று இணையத்தில் விடாமல் இயங்கும் நம்முடைய இளைஞர்கள் 'வேர் இஸ் த பார்ட்டி' என்று 'வெப் மேக்கர் பார்ட்டி'யை நடத்தத் தொடங்கினால் இணையத்திலும் நாம் முதலிடம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் ஆகஸ்ட் 1-15 இதழில் வெளியானது)
mages can be taken from : https://www.flickr.com/photos/mozilladrumbeat/sets/72157654235131834/with/19530785813/
- முத்துக்குட்டி
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்
1. பாஸ்வேர்டுகள் பத்திரம்
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலரும் செய்யும் தவறு இது! ஸ்மார்ட்போன் மூலமாகவே மின்னஞ்சல் பார்ப்பது, வங்கிச் சேவைகள் பயன்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்யும் போது கடவுச்சொல்லை 'ரிமெம்பர்' (நினைவில் கொள்) எனக் கொடுத்து வைத்து விடுவார்கள். கூடிய வரை, பாஸ்வேர்டு, அக்கவுண்ட் எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை இப்படிச் சேமிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
2. செயலிகளுக்குப் பூட்டு
ஆண்டிராய்டு செயலிகளை மட்டும் பூட்டிப் பாதுகாக்கும் 'ஆப் லாக்' செயலிகள் நிறைய கிடைக்கின்றன. பேங்கிங் செயலிகள் போன்ற முக்கியமான செயலிகளை இந்த 'ஆப் லாக்' செயலிகள் கொண்டு பாதுகாக்கலாம். உங்கள் ஸ்மார்ட் போன், தவறான ஆட்களிடம் சிக்கினால் கூட, முக்கியமான தகவல்களைக் கசிய விடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
3. ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்

உங்கள் 'டேப்'ஐப் பலர் பயன்படுத்தும் போது - ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கவுண்ட் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். ஆண்டிராய்டு ஜெல்லி பீன் வெளியீட்டில் இருந்து ஒரே ஆண்டிராய்டு போன், டேப் போன்றவற்றிற்குப் பல பயனரை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பயனரும் தனக்குத் தேவையான செட்டிங், வால்பேப்பர், செயலிகள் என அனைத்தையும் தனித்தனியே நிர்வகித்துக் கொள்ள முடியும். இப்படிச் செய்வதன் மூலம், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முக்கியமான தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க முடியும்.
4. பேக் அப் முக்கியம்
என்ன தான் உங்கள் ஸ்மார்ட் போன் உயர்ந்த கான்பிகிரேஷனில் இருந்தாலும் ஒரே ஒரு தடவை அதைக் கீழே போட்டால் கூட, உங்களுடைய மொத்தத் தகவல்களும், போட்டோ, வீடியோ போன்ற முக்கியமான ஆவணங்களும் மிஸ் ஆக வாய்ப்புள்ளது. எனவே, அவ்வப்போது டேட்டா பேக் அப் எடுத்து வைப்பது முக்கியம்.
5. கார்டில் முக்கிய தகவல்கள் வேண்டாம்
சிலர் ஸ்மார்ட் போனில் இருக்கும் எஸ்டி கார்டு போன்ற எக்ஸ்டெர்னல் நினைவகங்களில் முக்கியமான தகவல்களைச் சேமித்து வைப்பார்கள். போட்டோக்கள், வீடியோக்கள் போன்ற தகவல்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்டெர்னல் நினைவகங்களில் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றைச் சேமித்து வைப்பது நல்லதல்ல. ஏனென்றால், உள் நினைவகங்களை ஹேக் செய்வதைக் காட்டிலும் கார்டு போன்ற நினைவகங்களில் தகவல்களைத் திருடுவது மிக எளிதானது. எனவே, வெளி நினைவகங்களில் முக்கிய தகவல்களைச் சேமிக்காதீர்கள்.
6. பொது இடங்களில் வை-பையா?
இப்போது ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் போன்ற பொது இடங்களில் வை-பை வசதி வந்து விட்டது. இந்த வை-பை வசதிகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எனப்படும் தகவல் திருடர்கள், நீங்கள் இணையத்தில் என்னென்ன செய்கிறீர்கள் என்று அத்தனை விவரங்களையும் திருடி விட முடியும். எனவே, பொது இடங்களில் உள்ள வை-பை வசதியைப் பயன்படுத்தும் போது httpக்குப் பதிலாக https மூலம் இணையத்தளங்களைப் பார்ப்பது கட்டாயத் தேவை. பேங்கிங் செயலிகள் போன்ற முக்கியமான செயலிகளுக்குப் பொது இடங்களில் உள்ள வை-பையைப் பயன்படுத்தும் சூழல் வந்தால், விபிஎன் எனப்படும் தனிநிலை நெட்வொர்க் மூலம் இணையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த விபிஎன் அமைப்புகள், வயர்லெஸ் & நெட்வொர்க்குகளின் கீழ் உங்கள் ஆண்டிராய்டு செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும்.
7. வாட்சப் பயன்படுத்தும்போது..

வாட்சப் போன்ற மெசேஜ் செயலிகளைப் பயன்படுத்தும் போது, நீங்கள் வாட்சப்பில் வைத்திருக்கும் ப்ரொபைல் படத்தை எல்லோரும் பார்க்கும்படி இருக்கும். வாட்சப் செட்டிங்கிற்குப் போய் உங்கள் தொடர்புகள் மட்டுமே உங்கள் படத்தை, ஸ்டேட்டசைப் பார்க்கும் படி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
8. ஒவ்வொரு செயலியை நிறுவும் போதும் கவனம்
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நிறுவும் போது அவை என்னென்ன தகவல்களைக் கேட்கின்றன என்று காட்டப்படும். கணினியில் சாப்ட்வேரை நிறுவும்போது எதையும் படிக்காமல் ‘நெக்ஸ்ட்’ பொத்தானை அழுத்துவதைப் போல, ஸ்மார்ட் போனிலும் அந்தத் தகவல்களைப் படிக்காமல் விட்டு விடாதீர்கள். எந்தெந்தச் செயலிகள் எந்தெந்தத் தகவல்களைப் படிக்கின்றன என்று பார்த்து அவற்றை நிறுவுங்கள்.
(புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூலை 16-31 இதழில் வெளியானது)
- விவரங்கள்
- ஷேக் அப்துல் காதர்
- பிரிவு: தொழில்நுட்பம்

விமானத்தின் உயிர், விமானங்களில் பயன்படும் Engine தான் Jet engine ஆகும், ஆனால் தற்போது தானியங்கிகளில் உலக சாதனைகாக இவ்வகை இன்ஜின்கள் பயன்படுகிறது, இதுவும் ஒரு வகை internal combution engine ஆகும் (பொதுவாக தானியங்கிகளில் பயன்படும்) ஆனால் அதில் பொதுவாக காணப்படும் Piston, crank shaft போன்ற அமைப்புகள் இதில் இல்லை மாறாக இவை ஆற்றலை உள்ளிழுக்கப்படும் காற்றை அதிக அழுத்தம் மற்றும் வேகத்தில் வெளியேற்றுவதன் மூலம் பெறுகிறது.
Jet engine என்றால் என்ன?
Jet engine என்பது எரிபொருள் ஆற்றலை உந்து சக்தியாக மாற்றும் இயந்திரம் ஆகும். அதாவது Engine முன் பகுதியில் உள்ளிழுக்கப்படும் காற்றை எரிபொருளில் இருந்து பெறப்படும் ஆற்றலின் மூலம் அதிக அழுத்த நிலைக்கு கொண்டுசென்று, அழுத்தப்பட்டை காற்றை Engine ன் பின்புறம் வெளியேற்றும் போது, ஒவ்வொரு விசைக்கும் அதற்கு நிகரான எதிர் விசை உண்டு என்ற நியூட்டனின் மூன்றாம் விதிப்படி விமானத்திற்கு உந்து சக்தி கிடைக்கும்.
உதாரணமாக ஒரு விமானம் காற்றில் 1000 Km /hr என்ற வேகத்தில் செல்வதாக கொள்வோம் அப்படியானால் காற்றானது அதே வேகத்தில் அதன் Engine ஐ நோக்கி நகரும்
அப்போது Engine ன் முன் பகுதியில் இருக்கும் காற்றாடி (Fan) உள்ளே வரும் குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து அழுத்தமாக முகப்பு துவாரம் (Inlet) வழியே Engine உள்ளே செலுத்தும் அப்போது காற்றின் வேகம் 400 Km / hr அதாவது 60% குறைந்துவிடும். அதன் பின் ஒரு Fan அமைப்பு காணப்படும் அதன் பெயர் Compressor ஆகும், இது காற்றழுத்தத்தை அதிகப்படுத்தும் ஆதாவது உள்ளே வரும் காற்றின் அழுத்தத்தை போல் எட்டு மடங்கு, அதே நேரத்தில் அதன் வெப்பநிலையும் அதிகரிக்கும்.
இப்பொழுது எரிபொருள் ஆனது Engine உள் செலுத்தப்படும், மேலும் எரிபொருள் தொட்டி விமானத்தின் இறக்கை பகுதியில் இருக்கும்.
Combution chamber இது engine ல் Compressor கு அடுத்த பகுதியாக அமைந்திருக்கும், இதில் தான் எரிபொருளானது அழுத்தப்பட்ட காற்றுடன் சேறும் அப்பொழுது எரிபொருள் எரிந்து exhaust gas உருவாகும் அப்போது காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் ஏறத்தாழ 900 °C ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக உள்ள பகுதி Turbine blades ஆகும், இவை காற்றாலை (Windmill) போல் செயல்படும், எரிபொருளில் இருந்து பெறப்பட்ட ஆற்றலின் ஒரு பகுதி இந்த Turbine ஐ சுழற்ற பயன்படும் எனவே Exhaust gas Turbineல் இருந்து வெளிவரும் போது அதன் அழுத்தம் மற்றும் வெப்பநிலை சற்று குறைந்திருக்கும்.
பின் ஏன் இந்த Turbine ஐ சுழற்ற வேண்டும், ஏனென்றால் Turbine ஆனது ஒரு Engine நீள அளவிலான axle உடன் இணைக்கப்பட்டிருக்கும், இந்த Axle ல் தான் Compressor மற்றும் fan இணைக்கப்பட்டிருக்கும் எனவே Turbine சுழலும் போது இவை இரண்டும் சேர்ந்து சுழலும் அதாவது Compressor மற்றும் Fan ஐ இயக்கத் தேவைப்படும் ஆற்றல் Turbine மூலம் பெறப்படும்.
இதற்கு அடுத்த பகுதி தான் Exhaust nozzle ஆகும் இதன் மூலம் தான் சூடான Exhaust gas ஆனது வெளியே செல்லும் அதாவது பின் பகுதி இதன் வாய் பகுதி முன் பகுதி வாய் பகுதியை விட குறுகியதாக இருக்கும் அப்போது தான் வெளியேறும் Exhaust gas ன் திசை வேகம் அதிகரிக்கும் அதன் அளவு 2100 Km /hr ஏறத்தாழ, இந்த வெப்பகாற்று வெளியேறும் இதே நேரத்தில் குளிர்ந்த காற்று Engine ன் முன் பகுதியின் வழியே அதை விட அதிக வேகத்தில் உள்ளே செல்லும், இராணுவத்தில் பயன்படுத்தும் விமானத்தில் After burner பயன்படுத்தப்படும். இது என்னவென்றால் Nozzle ல் இருந்து வெளியேறும் வெப்ப காற்றோடு மேலும் எரிபொருள் சேர்பதற்கான அமைப்பு ஆகும் இதன் மூலம் அதன் வெப்பநிலையை மேலும் அதிகரித்து அதிக ஆற்றலை பெறலாம் எனவே Exhaust gas ன் வேகம் விமானத்தின் வேகத்தை விட அதிகமாக இருக்கும்.
பாகங்களும்....பயன்பாடும்.....
Compressor: காற்றின் அழுத்தம் மற்றும் வெப்பநிலையை அதிகரிக்க பயன்படுகிறது.
Combustion chamber: எரிபொருளிலிருந்து வெப்ப ஆற்றலை வெளிபடுத்துவதன் மூலம் காற்று-எரிபொருள் கலவையின் வெப்பநிலையை அதிகரிக்கிறது.
Exhaust nozzle: Exhaust gas ன் திசைவேகத்தை அதிகரிப்பதோடு விமானத்திற்கு சக்தி அளிக்கிறது.
- விவரங்கள்
- முத்துக்குட்டி
- பிரிவு: தொழில்நுட்பம்

பாட்டு கேட்பதில் இருந்து, படம் பார்ப்பது, பாடம் படிப்பது என்று எல்லாமே ஸ்மார்ட் போனில் சாத்தியம் என்றாகி விட்டது. கடிகாரம், கால்குலேட்டர், கேமரா, டார்ச் லைட் என்று எல்லாமே நம் கைக்குள் ஸ்மார்ட் போன் வடிவெடுத்து வந்து விட்டது. இல்லை என்பதே இதில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் புதுப் புது ஆப்கள் (செயலிகள்) வந்து கொண்டிருக்கின்றன. இப்படி ஸ்மார்ட் போன்கள் குறுங்கணினி வடிவமெடுத்து வந்து கொண்டிருக்க, ஸ்மார்ட் போன் வாங்கிய பிறகு செய்ய வேண்டிய சின்னச்சின்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?
- புதிய மின்னஞ்சல் முகவரி
நீங்கள் ஆண்டிராய்டு போன் வாங்கும் பட்சத்தில், அதில் உள் நுழைவதற்கே ஜிமெயில் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும். நீங்கள் ஏற்கெனவே வைத்திருக்கும் மின்னஞ்சல் முகவரியை இங்கு உள்ளிட்டால், உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மின்னஞ்சல் முகவரிகள் ஆகியன கூகுள் நிறுவனத்தால் கண்காணிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, ஆண்டிராய்டு போன் வாங்கிய உடனேயே, உடனடியாக ‘டம்மியாக’ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிக் கொள்ளுங்கள். அந்த டம்மி மின்னஞ்சல் முகவரியை உங்கள் ஆண்டிராய்டு போனில் கொடுத்து விடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் – நீங்கள் உங்கள் உண்மையான மின்னஞ்சலில் சேர்த்து வைத்திருக்கும் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளைக் கூகுளிற்குத் தாரை வார்க்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
- தேவையற்ற ‘ஆப்பு’கள் வேண்டாமே
கார்களை வாடகைக்கு விடும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் உபெர். தற்போது தன்னுடைய ஆண்டிராய்டு ஆப்’ மூலமாக வாடகையை உயர்த்தி லாபம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கியிருக்கிறது உபெர். இந்தச் சர்ச்சை நடந்த இடம், நல்ல வேளை நம்மூர் இல்லை, இங்கிலாந்தில். தன்னுடைய் ஆப்’ மூலம் செல்போனின் பேட்டரித் தகவல்களைத் திரட்டியிருக்கிறது உபெர். பின், யார் யாருக்கெல்லாம் பேட்டரி சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கிறதோ அந்த வாடிக்கையாளர்களுக்கெல்லாம் கார் வாடகையை உயர்த்திக் காட்டியது உபெர் என்பது தான் இப்போது அதன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ‘நாங்கள் அப்படிச் செய்யவே இல்லை’ என்று உபெர் மறுத்தாலும் சாதாரணமாக நாம் வைத்திருக்கும் ஒரு ஆப்பை எப்படியெல்லாம் நிறுவனங்கள் பயன்படுத்த முடியும் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.
சிலர் ஸ்மார்ட் போன் வாங்கி விட்டோம் என்னும் ஆர்வக் கோளாறில் கூகுள் பிளே ஸ்டோரில் தட்டுப்படும் எல்லா ‘ஆப்பு’களையும் இன்ஸ்டால் செய்வார்கள். இது கட்டாயம் தவிர்க்கப் பட வேண்டிய ஒன்று. தேவையில்லாத செயலிகளை வைத்திருப்பதன் மூலம் உங்கள் செல்போனின் பேட்டரி சார்ஜ் சீக்கிரம் இறங்கி விடும் வாய்ப்பு அதிகம். எனவே, ஒரு செயலியை போனில் வைத்திருப்பதற்கு முன்னர், ஒரு முறைக்கு இரு முறை நன்றாக யோசித்து விட்டு நிறுவிக் கொள்ளுங்கள்.
‘சார்! உங்களுக்கு கிரெடிட் கார்டு வேணுமா?’, ‘மேடம், நீங்க ஏன் எங்க யுனிவர்சிட்டியில் எம்பிஏ பண்ணக்கூடாது?’ என்பன போன்ற தேவையற்ற அழைப்புகள் உங்களுக்கு வருகின்றனவா? கிட்டத்தட்ட எல்லா ‘ஆப்’புகளுமே உங்களுடைய தொடர்புகள், மெசேஜ்கள் ஆகியவற்றைப் படிக்கின்றன. எனவே, இந்தத் தேவையற்ற அழைப்புகளுக்கு, வேண்டா விருந்தாளியாக நீங்கள் வைத்திருக்கும் ஆப்புகள் கூடக் காரணமாக இருக்கலாம்.
- பிளே ஸ்டோருக்கு மாற்றாக எஃப் டிராய்டு
நல்ல செயலிகள் மட்டும் தான் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இருக்கும் ஆப் ஸ்டோர் எஃப் டிராய்டு. கூகுள் பிளே ஸ்டோருக்குப் பதிலாக இந்த எஃப் டிராய்டு செயலியை நிறுவிக் கொள்ளலாம். கட்டற்ற மென்பொருள் எனப்படும் ஓப்பன் சோர்ஸ் செயலிகள் மட்டும் தான் இங்கு கிடைக்கும் என்பது தான் எஃப் டிராய்டின் தனிச்சிறப்பு. இங்கிருந்து நீங்கள் எடுத்துப் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலி பற்றிய விவரத்திலேயே அந்தச் செயலி உங்கள் தகவல்களைத் திரட்டுமா, விளம்பரங்கள் வெளியிடுமா என்பன போன்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். அதைப் படித்துப் பார்த்து நீங்கள் எந்தெந்தச் செயலிகள் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளலாம்.
இதே போல் கூடிய வரை கூகுள் குரோம் பிரவுசருக்குப் பதிலாக மொசில்லா பயர்பாக்ஸ் போன்ற கட்டற்ற இணையத்தை ஆதரிக்கும் பிரவுசர்களைப் பயன்படுத்தலாம். இதன் மூலமும் நம்முடைய தகவல்கள் திருடப்படுவதை ஓரளவு தடுக்க முடியும்.
- ஆட்டோ டவுன்லோடு வேண்டவே வேண்டாம்!
‘நானும் அவனும் வாட்சப்ல பேசினோம்’, ‘எனக்கு வாட்சப்ல எக்கச்சக்க வீடியோ, போட்டோ எல்லாம் வருது’என்று சொல்வது பெருமைப்படும் விஷயமாக இருக்கலாம். ஒரே நண்பனின் போட்டோவை நாலு குருப்பில் அனுப்பி வைத்திருப்பார்கள். இந்தத் தேவையில்லாத வீடியோ, போட்டோவிற்கெல்லாம் நாம் எவ்வளவு கட்டி அழப் போகிறோம் என்று அடுத்த மாதம் பில் வந்தால் தான் தெரியும். எனவே, வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளை நிறுவிய உடன் மறக்காமல் செய்ய வேண்டியது ‘மீடியா ஆட்டோ டவுன்லோடு’ ஆப்சனைச் செயலிழக்கச் செய்வது தான்! இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் போனின் மெமரி மிச்சமாவதுடன் பில் கட்ட வேண்டிய தொகையும் மிச்சமாகும்.
இதே போல் தேவையற்ற குருப்புகளில் சேர்வதைத் தவிர்ப்பது, குருப் மெசேஜ்களுக்கு அழைப்பு ஒலி இல்லாமல் வைப்பது ஆகியனவும் உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காமல் இருக்க உதவும்.
(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூன் 1-15 இதழில் வெளியானது)
- முத்துக்குட்டி
- காரீய அமில இரண்டாம் நிலை சேமிப்பு மின்கலம்
- கியர் எப்படி வேலை செய்கிறது?
- சாட்பாட் – துணைக்கு வரும் தொழில்நுட்பம்
- கிளட்ச் (Clutch) - பயன்பாடும், செயல்முறையும்
- விமானம் பறப்பது எப்படி?
- நியூட்டனின் தலையில் ஆப்பிள் விழுந்தபோது... - சுனில் லக்ஷ்மண்
- இரத்தத்தில் ஜாதி அடையாளம் இருக்கிறதா?
- ஏன் வேண்டாம் பேஸ்புக்கின் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டம்?
- ஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்
- இலவசத் தளங்கள் இணையச் சமநிலையைப் பாதிக்குமா?
- Facebook’இன் அடுத்த நாடகம்
- அதிக வெப்பத்தில் நீர்த்துளிகள் உருவாவது ஏன்?
- Genetically Modified சோளமும் கேன்சரும் - ஆய்வு கட்டுரையை திரும்ப பெற்ற பத்திரிக்கை!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம்
- அணுசக்தி மனித குலத்திற்குத் தேவையா?
- ஹேப்டோகிராஃப்பிக்குத் தயாராகுங்கள்
- ஹிக்ஸ் போசான் (கடவுள் துகள்?!)
- மூளை சித்தரிக்கப்படுகிறது
- அணுசக்தி சட்டம் 1962
- கோமாவில் கிடப்பவர்கள் முன்னே