மாதம் பத்து சுமந்து
மணிக்கணக்கில் கண் விழித்து
ஊர் மெச்ச பேர் சூட்டி
உறவோர் சூழ வளர்த்தவளை
பாராட்டி சீராட்டி
பள்ளிக்கு அனுப்பியவரே
பாடைக்கு அனுப்பியதேனோ?
மனதைக் கவர்ந்தவனை
மணாளனாக்க எண்ணியது குற்றமா?
மஞ்சளும் மாலையும் சூட்டியவன்
மாற்று சாதியாய்
இருந்தது யார் தவறு?
கனவுகள் பல சுமந்து
கணவனின் கரம் பிடித்து
இல்லறம் நுழைந்தவளைக்
கல்லறைக்கு அனுப்பியதேனோ?
சரிந்துவரும் சாதிக் கட்டமைப்பை
நிமிர்த்தி நிறுத்துவதற்காக
நடக்கும் இறுதிப் போரில்
ஆதிக்க வெறியினர்க்கு
இளஞ்சிட்டு இறையாகிப் போவதேனோ?
ஊர் வாய் பேசுமென
உன் சேய் அழித்ததேனோ?
சாதி கவுரவத்தைக் களபலியாக்க
காதல் திருமணத்தை ஆதரிப்போம்!
ஊர் சேரி ஒன்றிணைய
உதிக்கும் காதலை காத்துநிற்போம்!
சாதிக்குப் பலியானோம்!
- விவரங்கள்
- அருண்சோரி
- பிரிவு: மக்கள் விடுதலை - அக்டோபர் 2014
More articles by அருண்சோரி
- செங்கொடி முளைக்கட்டும் (15 டிச 2014)
- ஒடுக்குமுறைக்கு அஞ்சோம்! போராட்டத்தைக் கைவிடோம்! (13 அக் 2013)
- இந்திய அரசுக்கு எதிரான மாணவர் போராட்டத்தைத் திசை திருப்ப முயலும் மே 17 திருமுருகன் (25 மார் 2013)
- தருமபுரி - சாதிய வன்கொடுமையாளர்களை உடனே கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் (01 பிப் 2013)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.