ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் பலநூறு கோடிகள் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட வழக்கில் இருந்து தப்பிக்க லலித் மோடி கடந்த சில ஆண்டுகளாக இந்தியா விலிருந்து வெளியேறி லண்டனில் உல்லாசமாக வாழ்ந்து வ‌ருகின்றார். அவரைத் தேடப்படும் குற்றவாளி என இந்தியா அறிவித்துள்ளது.

susma 600இந்நிலையில் போர்ச்சுக்கல் நாட்டில் சிகிச்சை பெற்றுவரும் தன் மனைவியைப் பார்ப்பதற்குச் செல்ல இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்கிறார் லலித் மோடி. இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி என்பதால் அனுமதி வழங்குவதில் சிக்கல் எழுகிறது.

அதன்பின் “லலித் மோடிக்கு விசா உட்பட பயண ஆவணங்கள் வழங்க இங்கிலாந்து குடியேற்ற துறைக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நெருக்கடி கொடுத்தார். நானும் பரிந்துரை செய்தேன்” என்று இந்திய வம்சாவளி இங்கிலாந்து எம்.பி. கீத் வாஸ் கூறியுள்ளார்.

இது  குறித்து  விளக்கமளித்துள்ள சுஷ்மா சுவராஜ், “லலித் மோடியின் மனைவிக்குப் புற்றுநோய். மனிதா பிமான அடிப்படையில் நான் பரிந்துரை செய்தேன்” என்று கூறியுள்ளார்.

லலித் மோடி ஒரு தொலைக்-காட்சிக்கு அளித்த பேட்டியில் நட்புரீதியாக மட்டுமல்ல, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தொழில்ரீதியாகவும் தங்களுக்குள் உறவு உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறார். சுஷ்மா சுவராஜின் மகளும், வழக்கறிஞருமான பன்சூரி சுவராஜ், லலித் மோடிக்காக 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீதி-மன்றத்தில் வாதிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி, சுஷ்மா சுவராஜின் துணைவர் சுவராஜ் கவுசல், லலித் மோடிக்கு 22 ஆண்டுகளாக சட்ட ஆலோசனை வழங்கி வரும் தகவலும் வெளியாகி உள்ளது.

ஆக இது வெறும் ‘‘மனிதாபிமான உதவி” இல்லை என்பது குழந்தைக்குக்கூட புரியும். இதற்குமுன் சுஷ்மா சுவராஜ் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் இரும்புச் சுரங்கங்கள் மூலம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளை-யடித்து ஒரு நிழல் அரசாங்கமே நடத்தி வந்த ரெட்டி சகோதரர்களுக்கு ‘‘மனித நேய அடிப்படை-யிலான” நண்பராக இருந்து வந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சுஷ்மா சுவராஜ் மட்டுமின்றி ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும் லலித் மோடிக்கு உதவிய தகவல் வெளியாகியுள்ளது. லலித் மோடிக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்குவது தொடர் பாக அந்நாட்டு அதிகாரிக்கு ஆதரவுக் கடிதம் அனுப்பி யுள்ளார் வசுந்தரா. முதலில் மறுத்த அவர் ஆதாரம் வெளி யானதும் ”நண்பர்” என்ற முறையில் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

லலித் மோடி தனது பேட்டியில் வசுந்தராவின் குடும்பத்துடன் கடந்த 30 ஆண்டுகள் நட்புறவு உள்ளது, அதன் அடிப்படையில் உதவி கோரியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் வசுந்தராவின் மகனும் பா.ச.க. நாடாளுமன்ற உறுப்பி-னருமான துஷ்யந்த் நடத்தும் நிறுவனத்தில் லலித்மோடியின் நிறுவனங்-களில் இருந்து செய்யப்-பட்ட முதலீடும், வாங்கிய பங்கு களும் அது தனிப்பட்ட நட்பு மட்டுமல்ல, பொருளாதார ரீதியான கூட்டு என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டி-யுள்ளது.

ஒரு ஊழல் வழக்கில் தேடப்-படும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்டதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா இருவரும் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் ஆளும் பா.ச.க.வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ‘‘இது அவர்களது தனிப்பட்ட முடிவல்ல, இந்திய அரசின் நிலைப்பாடே இதுதான்” என அறிக்கைவிட்டு அவர்களது செயல்களை இன்றுவரை ஆதரித்து வருகின்றன.

· இது இந்திய அரசின் நிலைப்பாடு என்றால், நமது கேள்வியெல்லாம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உயிருக்கு போராடும் நிலையில் விசா வழங்காமல் திருப்பி அனுப்பியதே இந்திய அரசு அப்போது ஏன் மனிதநேயம் பார்க்கவில்லை? அரசியலாக மட்டும் ஏன் பார்த்தது?

· விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆன்றன் பாலசிங்கம் சிகிச்சைக்கு இந்தியா வர அனுமதி கோரினாரே அப்போது எங்கே போனது இந்திய அரசின் மனித நேயம்?

· பத்தாண்டுகள் செய்யாத குற்றத்திற்காக கோவைச் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ‘நிரபராதி’ என்று விடுதலையான அப்துல் நாசர் மதானி, மீண்டும் ஒரு பொய் வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட உடல் நிலை முடியாத நிலையில் பிணை கேட்டபோது எங்கே போனது இவர்களின் மாந்தநேயம்?

· இன்றும்கூட 90% உடல் செயலற்ற நிலையில் இருக்கும் பேராசிரியர்.சாய் பாபா அவர் களுக்கு மருத்துவம் செய்யக் கூட அனுமதியளிக்காமல், சித்ர வதை செய்யும் “அண்டா சிறையில்”அடைத்து கொடுமைப்-படுத்தி வருகின்றது இதே மத்திய அரசு. இப்படி எத்தனை ஆயிரம் அரசியல் கைதுகள், வாதாட வழியில்லாத ஏழைகள், ஒடுக்கப் பட்டோர், சிறுபான்-மையினர், அப்பாவிகள், இந்திய சிறைகளில் அடைக்கப்-பட்டுள்-ளார்கள் இவர்கள் மேலெல்லாம் இந்திய அரசின் மனித நேயம் ஏனோ திரும்புவதேயில்லை?

· 24 ஆண்டுகள் கொடுஞ்சிறைப்பிடியில் வாடுகிறார்களே பேரறி-வாளன் உட்பட எழுவர், அவர்களை விடுவிக்க உச்ச நீதி-மன்றமும், தமிழக அரசும் ஆணை பிறப்பித்த பின்னும் இந்திய அரசு தடை கோரி நிறுத்தியுள்ளதே. இதற்-கெல்லாம் உங்கள் மனித நேய அகராதியில் இடம் கிடைக்-காதா? இடம் கிடைக்காது. ஏனென்றால் இவர்களெல்லாம் லலித் மோடி போன்று பல நூறு கோடி ஊழல் செய்து “மாட்டி”(?), வெளி-நாட்டுக்குத் தப்பியோடிய கோடீஸ்-வரர்கள் இல்லையே.

இந்தியாவை உள்நாட்டு, வெளி- நாட்டு முதலாளிகளுக்கு கூவிக் கூவி விற்கும் பா.ச.க.வும் அதன் தாய் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.சும் சுஷ்மாவையும், வசுந்தராவையும் இந்த விவகாரத்தில் காப்பாற்ற முனைவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.ஆனால் காங்கிரஸ் அவரைக் காப்பாற்ற துணை நிற்காமல் எதிர்ப்பது போல் நடிப்பதுதான் நகை முரண். ‘‘எல்லோருக்கும் மனித நேயம்” காட்டாமல் இயற்கை வளங்களைக் கொள்ளையிடும் -பொருளியல் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட ‘‘பெரும் பணக்-காரர்-களுக்கு மட்டும் மனித நேயம்” காட்டு-வதில் காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பா.ச.க., ஆர்.எஸ்.எஸ். க்கு சளைத்-தவை அல்ல என்பதே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான இந்திய ஆட்சி மாற்ற வரலாற்றில் நாம் அறிவது.

லலித் மோடி விவகாரத்தைத் தாண்டி, மத்திய மனிதவள மேம்-பாட்டு அமைச்சராக இருக்கும் ஸ்மிரிதி இரானி மீதான போலி கல்விச் சான்றிதழ் வழக்கு தில்லி நீதிமன்றத்-தால் விசாரணைக்கு எடுக்கப்-பட்டுள்ளது, விசாரனை ஆகஸ்டு மாதம் 2ம் நாள் வருகிறது.

அவர் 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது தேர்தல் ஆணையத்திடம் அளித்த பிரமாண பத்திரத்தில் தில்லிப் பல்கலைக்கழக அஞ்சல்வழி கல்வி மூலம் பி.ஏ. பட்டப்படிப்பு படித்த-தாகவும், 2011-ம் ஆண்டு தில்லி மேல்சபை தேர்தலின்போது தில்லி பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழிக் கல்வி மூலம் பி.காம் படித்த-தாகவும், 2014-ம் ஆண்டு அமேதியில் போட்டியிட்ட போது தில்லி பல்கலைக்கத்தில் திறந்த-வெளி கல்விமுறையில் பி.காம். படித்துள்ளதாக தெரிவித்தார். இப்படியான 3 விதமான கல்விச் சான்றிதழ் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்-பட்டு விசாரணைக்கு வருவதைப் பற்றியும் பா.ச.க. இதுவரை அமைதி காத்துவருகிறது.

மராட்டிய மாநிலக் குழந்தை மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சர் பங்கஜா முண்டே பள்ளிக்கூட மாணவர்களுக்கான உணவுப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் வாங்குவதில் முறைப்படி ஒப்பந்த அறிவிப்பு விடாமல், அறிக்கைகள் வாயிலாக ரூ.206 கோடி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்த ‘‘கடலை மிட்டாய்” ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரே ஆண்டில் ஊழல் வெளியில் வருவது கொஞ்சம் கடினமே, 2004ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் முதல் ஆண்டிலும் பெரிய ஊழல்கள் வெளியில் வரவில்லை. ஆனால் இப்போது ஊழல் எதுவுமே வெளியில் தெரியாமல் இருக்க பா.ச.க. அரசு இன்னொரு நுட்பமான வேலை நடத்தியது அம்பலமாகியுள்ளது. தணிக்கை செய்து அறிக்கை சமர்பிப்பதற்கும், ஊழலைக் கண்காணிப்-பதற்-காகவும் அமைக்கப்பட்டுள்ள, சன நாயகப்பூர்வமாக செயல்படும் தற்சார்பு அமைப்புகள் என்று சொல்லப்படுவனவற்றின் தலைமைப் பொறுப்பு-களான மத்தியப் புலனாய்வு ஆணையர் (CVC - Central Vigilance Commissioner)), தலைமை தகவல் ஆணையர் (CIC - Chief Information Commissioner)) ஆகிய பொறுப்புகளுக்கு கடந்த 10 மாதங்களாக யாரையும் அமர்த்தாமல் அந்த வேலையை முடக்கி-யுள்ளது பா.ச.க. அரசு. இது வெளியில் தெரிந்து சன-நாயக சக்திகள் கண்டிக்கவும் இரு வாரங்களுக்கு முன்புதான் இன்னும் சிறிது நாட்களில் ஓய்வு பெறும் அதிகாரிகளை அமர்த்தி-யுள்ளார்கள். இவர்கள் மீதும் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் இருப்பது கவனிக்கத்தக்கது.

ஆக, எந்த கண்காணிப்புக்கும், தணிக்-கைக்கும் உட்படுத்தாமல் இப்படித்-தான் ஓராண்டுகால ஊழலற்ற ஆட்சி என்று மக்களை ஏமாற்றி-வருகிறது பா.ச.க.. இதையும் தாண்டி வெளியில் வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அத்வானிக்கும்- மோடிக்கும் இடையே கட்சிக்குள் நடக்கும் முரண்-பாட்டினால்தான் என வெளிப்படையாக பேசப்-படுகின்றன. இந்த ஓராண்டு மத்திய பா.ச.க. ஆட்சியில் இது புனிதமான, கறைபடியா தாமரையல்ல. கறைபடிந்து, அழுக்-கேறிய தூக்கியெறியப்பட வேண்டிய‌’தாமரை’ என்று மக்களிடம் மெய்ப்பித்து விட்டது.

எங்களின் ஓராண்டு கால ஆட்சியில் ஊழலை எதிர்க் கட்சியினால் கூட சுட்டிக்காட்ட முடியாது என முழங்கிய மோடியும், பா.ச.க.-வினரும் தான் கண்காணிப்பு, தணிக்கை அமைப்புகளின் தலைமைப் பொறுப்பு-களை நிரப்பாமல் எந்த ஊழலும் வெளியில் தெரியாமல் முடக்கி-யுள்ளார்கள். கடந்த மாதம் ஜெயலலிதாவை விடுவித்து வாழ்த்து கூறினார்கள். இன்று ஊழல்வாதி லலித் மோடியைத் தப்பிக்க வைக்க முயற்சி செய்யும் சுஷ்மாவையும் வசுந்தராவையும் ஊழலில் சிக்கிய பங்கஜாவையும் பாது-காக்கின்ற‌னர். இதைத் தான் “பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்” என்பார்கள்.

இந்த ஊழல்வாத, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வளங்களை கொள்ளையடிக்க இருந்த தடைகளை முழுவதும் நீக்கி சட்டப் பூர்வமாக அனுமதிக்கிற, அதைத் தடுக்கிறப் போராட்-டங் களையும் மக்களையும் நசக்கத் துடிக்கிற, மக்களை வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து திசைதிருப்ப சாதிய-மதவாத மோதல்களைத் தூண்டிவிடும் இந்த சனநாயக விரோத சர்வாதி கார அரசை எப்படி மக்களும், சனநாயக இடதுசாரி சக்திகளும் எதிர்கொள்ளப் போகிறோம் என்பதே நம்முன் இன்று இருக்கும் மிகப்பெரிய சவால்...

Pin It