மோடி வேட்டி சட்டை துண்டு அணிந்தார், சீன அதிபர் நார்மல் பேண்ட் சட்டை அணிந்தார், இட்லி, தயிர்வடை, அரிசி சாதம் சாப்பிட்டார்னு சொன்ன நீங்க... இரண்டு பேரும் பேசுன விசயத்தை - இரண்டு நாட்டு அதிகாரிக கையெழுத்து போட்டுக் கொண்ட ஒப்பந்தங்களைப் பற்றி சொல்ல மாட்டீங்கிறீங்களே கோபால்...?

அரிசி சாதம் சாப்பிட்ட சீன அதிபரின் நாடு இன்று இந்தியாவின் அரிசி ஏற்றுமதி சந்தையின் 60 சதவீதத்தை பிடித்துக் கொண்டது தெரியுமா கோபால்..?

Modi with Xi JinpingTVS மோட்டார் கம்பெனி, கோவையின் லட்சுமி மில்ஸ் , CRI பம்பு நிறுவனம் சீனாவில் தனது உற்பத்தியை அதிகப்படுத்திக் கொண்டு இங்குள்ள தொழிலாளிகளுக்கு கதவடைப்பு பரிசு கொடுத்தது தெரியுமா கோபால்...?

பாலித்தீன் கவரை ஒழிப்போம்னு விளம்பரம் செய்துவிட்டு சீன உற்பத்தி பிளாஸ்டிக் பொருட்களைத் தடையின்றி இறக்குமதி செய்து நாட்டை நாசமாக்குவது தெரியுமா கோபால்..?

பருத்தி விவசாயத்தை அழித்து விட்டு சீனாவிலிருந்து செயற்கை நூலிழை வாங்கி ஆடை தயாரிக்க திருப்பூர் ஆயத்த ஆடை கம்பெனிகளுக்கு அறிவுரை கூறுகிறார் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர்.. அதுவாவது தெரியுமா கோபால்..?

திருப்பூர் ஆடைத் தொழிற்சாலைகளின் 75% கருவிகள் அன்னிய நாட்டுத் தயாரிப்பு தான் என்பது Make in - Made in India பேசுபவர்களுக்குத் தெரியுமா கோபால்..?

உலகிலுள்ள மிகப் பெரும் வங்கிகளில் முதன்மையான நிதிமூலத்தைக் கொண்டுள்ளது சீன வங்கிகள். இந்திய வங்கிகள் திவாலாவதை தள்ளிப் போட இணைப்பு நாடகம் போடுவதாவது தெரியுமா கோபால்..?

சிறு நடுத்தர ஆடை ஏற்றுமதிக்கு கொடுத்த சலுகைகளை நிறுத்தி, திருப்பூரை அல்லாட விட்டுவிட்டு, SBI வங்கியில் பெருமுதலாளிகளுக்குக் கொடுத்த ₹75,000/- கோடிக் கடனை தள்ளுபடி செய்தது தெரியுமா கோபால்...?

இப்படி நமக்கானதைப் பேசாமல் வேறு யாருக்காகவோ பேசுறீங்களே கோபால்...?

ஆயுதப் புரட்சி கொண்டே பாட்டாளி வர்க்கம் தனக்கான ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்ற கம்யூனிச ஆசான்களின் புத்தகத்தையாவது படியுங்கள்... கோபாலான உழைக்கும் மக்களே!

- தருமர், திருப்பூர்

Pin It