வேலிகளுக்குள்
மின்சாரம் பாய்ச்சி
தளிர்களைச் சருகாக்கி
வேர்களுக்குள்
அமிலம் ஊற்றி
விழுதுகளைச் சாம்பலாக்கி
செம்மாந்து நின்ற
விருட்சத்தை
மொட்டை மரமாக்கி
பிறப்பு மூலத்தை
நிர்மூலமாக்கி
சிங்கப்பல் பிதுக்கி
தாண்டவமாடிச் சென்றது
போதிமரத்து மோகினிப் பிசாசு
மத்தளம் கொட்டி
சாம்பிராணி புகைகாட்டி
மாலையிட்டு
மோகினி கையில்
சூலாயுதமும் அக்கினிச்சட்டியும் கொடுத்து
சேர்ந்தாடிக் களித்தது
இந்திரப்பிரஸ்தத்து
இரவல் புறா.
கழுகாய் மாறிட்ட
புறாவின்
உதிர்ந்த சிறகாய் மாறிய
சூரியப் பறவையோ
நங்கூரமிட்டு
நாற்காலியயனும் கூட்டில் கெட்டியாய்.
நாற்காலிக்கு மேலும் கீழும்
கனத்த பெட்டிகளுக்குள்
மூன்று சிங்க சிம்மாசன
காகித அரக்கனை சுமந்து
மூச்சு வாங்கியபடி.
விளம்பர இடைவேளைகள்
செல்லுலாய்டு புணர்ச்சிகள் நடுவே
எல்லாவற்றையும் கொறித்தபடிக்கு
எதுவுமற்று
நீங்களும் நானும்.
தொடர்புடைய படைப்புகள்
கருக்கல் விடியும் - மார்ச் 2012
நாளை நமது மரமும்...
- விவரங்கள்
- இரா.காமராசு
- பிரிவு: கருக்கல் விடியும் - மார்ச் 2012
More articles by இரா.காமராசு
- மக்கள் மனங்களில் வாழும் புலவர் (06 பிப் 2026)
- பட்டுக்கோட்டையாருக்கான கவிதாஞ்சலி (24 நவ 2025)
- மஜூலா சிங்கப்புரா (13 ஜூன் 2025)
- சமூக அசைவியக்கங்கள் குறித்த விவாதம் (28 மே 2025)
- ‘கல்’ சிற்பி ‘சொல்’ சிற்பி ஆன கதை (25 ஏப் 2025)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.