விலை ரூ.350
"சகோதர சகோதரிகளே, தோழர்களே! முதலாளித்துவத்திற்கும் புதிய தாராளவாதத்திற்கும் எதிராக,மனிதகுல எதிர்காலத்திற்கு ஆதரவாக, உலகம் முழுவதும் நடைபெறும் போராட்டங்களுடன் எங்களை நாங்கள் இணைத்துக் கொள்வோம். இந்த நிலத்தையும் இந்த வானத்தையும் எங்களைப் போலவே நேசிப்பவர்களை நாங்கள் தேடிக் கண்டறிவோம். நம் அனைவருக்கும் மக்களாட்சியும் விடுதலையும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடுகிறோம். இடதுசாரிகளின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவும், புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்காகவும் ஒரு புதிய அரசியலை முன்வைத்து நாங்கள் போராடுகிறோம்.'''
ஆசிரியர் : துணைத்தளபதி மார்க்கோஸ்
வெளியீடு : விடியல், 11, பெரியார் நிகர், மசக்காளிபாளையம் (வடக்கு),
கோயம்புத்தூர் 641 015
பக்கங்கள் : 900
***
தலித் பெண்ணியம்
விலை ரூ.90
“இந்தியச் சூழலில் சாதியம், பெண்ணடிமை முறையும் ஒன்றுக் கொன்று இணைந்து பிரிவினையை வலுப்படுத்தியுள்ளன. சாதி, பெண் பற்றிய கருத்தாக்கங்களும், மதரீதியான விளக்கங்களும் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளன. குடும்பம் என்ற சிறு அலகிலிருந்து, அரசு போன்ற பெரிய நிறுவனங்கள் வழியாகக் கருத்தாக்கங்கள், அதிகாரமாகவும், சட்டங்களாகவும் நடைறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இங்குள்ள பெண் அமைப்புகளின் வரதட்சணை ஒழிப்புப் போராட்டங்கள் என்பவை, கொசு மருந்து தெளிப்புதான்.''
தொகுப்பு : அன்புக்கரசி, மோகன் லார்பீர்
வெளியீடு : தலித் ஆதார மய்யம், 32, பாரதிதாசன் சாலை,
அரசரடி, மதுரை 625 016
பக்கங்கள் : 284
***
புத்தம் சரணம்
விலை ரூ.50
“சாதி ஒழிப்புப் போராளிகளாலும், இடதுசாரி சிந்தனையாளர்களாலும் முன்னிறுத்தப்பட்ட புத்தர் மற்றும் புத்த தம்மத்தின் அரசியல் முக்கியத்துவம், இங்கே அறிகமான அளவிற்கு அது ஒரு வாழ்நெறியாக இங்கே அறிமுகமாகவில்லை. பவுத்தம் வெறும் வேத மறுப்பு மதம் மட்டுமன்று; மிகவும் நடைமுறை சார்ந்த மக்கள் மதம் அது. பார்ப்பனியத்திலிருந்தும் இந்துத்துவத்திலிருந்தும் போதிசத்துவம் பல்வேறு புள்ளிகளில் வேறுபட்டு நிற்கிறது. அந்த அம்சங்களை நான் புரிது கொண்ட அளவிற்கு, இந்த நூலுக்குள் கொண்டு வந்துள்ளேன். புத்த மதத்தைக் கடவுள் மறுப்பு மதம் என்று சொல்வதைக் காட்டிலும் கடவுள், பக்தி முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு நெறி எனச் சொல்வதே பொருத்தம்.''
ஆசிரியர் : அ. மார்க்ஸ்
வெளியீடு : கறுப்புப் பிரதிகள், 45 அ, இஸ்மாயில் மைதானம்,
லாயிட்ஸ் சாலை, சென்னை 5
பக்கங்கள் : 108