சர்வதேச ‘யோகா நாளை’ இந்துத்துவத்தின் செயல் திட்டமாக்க மோடி ஆட்சி முயற்சிக்கிறது. மதம்-கடவுள் நம்பிக்கைகளோடு தொடர்பில்லாத உடல் - மூச்சுப் பயிற்சியாக யோகாவை பரிந்துரைக்கலாமே தவிர, அதை பள்ளிகளில் கட்டாயப்படுத்தி, கடவுள்-மத நம்பிக்கைகளைத் திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது. பசி, வறுமை, சமூக நெருக்கடிகள் சூழ்ந்து நிற்கும் மக்கள் பிரச்சினைக்கு ‘யோகா’ தீர்வாகிட முடியாது. பிரச்சினைகளிலிருந்து மக்களை விடுவிக்கச் செய்ய வேண்டுமே தவிர, தப்பிக்கச் சொல்லும் வழிமுறைகள் வெற்றி பெற முடியாது. அய்.நா. அறிவித்துள்ள உலக யோகா தினத்தை பல இஸ்லாமிய நாடுகளும் ஆதரித்துள்ளன. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்புகளையும் பகைமை உணர்வையும் திணித்துக் கொண்டிருக்கும் பார்ப்பன மதவாதம், யோகாவின் வழியாக பிரச்சினைகளுக்கு வடிகால் தேடிக் கொள்ள அறிவுறுத்துவது, காதில் பூ சுற்றும் வேலையாகும்.

Pin It