சென்னை ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு அளிக்கிறது. அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அரசியல் ரீதியாக எதிர்ப்புத் தெரிவிக்க இடதுசாரிகள் முன் வந்திருப்பது வரவேற்கத்தக்கது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், மதவாதம் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நோக்கத்தோடு, திராவிடர் விடுதலைக் கழகம், இடதுசாரி கட்சி வேட்பாளர்களையே ஆதரித்தது. அதே கண்ணோட்டத்தோடு இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிப்பதோடு, ஆர்.கே. நகர் தொகுதி வாக்காளர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

Pin It