கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி அன்று தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு 26 பேருக்கு தூக்கு தண் டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 26 கைதிகளில் 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் 19 பேரை விடுதலை செய்தும் எஞ்சியுள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கான தூக்கு தண்டனையை உறுதி செய்தும் தீர்ப் பளித்தது.

இதனையடுத்து தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட கைதிகள் நால்வரும் தமிழக கவர்னரிடத்தில் கருணை மனு அளித்தனர். நளினியின் மனுவை ஏற்று தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த கவர்னர் மற்ற மூவரின் கருணை மனுக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த 12-08-2011 அன்று இந்த கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்ட தாக மத்திய உள்துறை அமைச்ச கம் தெரிவித்துள்ளது. இதனைய டுத்து தூக்கிலிடப்படும் தேதியும் முடிவானது.

இந்தத் தகவல்கள் வெளி வந்தவுடன் தமிழ் ஆர்வலர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுமாறு கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி தவிர மற்ற எந்த அரசியல் கட்சியும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியும் லேசான எதிர்ப்பை மட்டுமே காட்டியது. மற்றபடி தமிழக முதல்வர் நிறைவேற்றிய தீர்மானம் எந்த எதிர் விளைவையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது காஷ்மீர் முதல்வர் தெரிவித்த கருத்துகளை வைத்து ஒரு சிலர் நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

உமர் அப்துல்லாஹ் தெரிவித்த கருத்துக்கள் பாதகமானது அல்ல. தமிழகத்தில் ஒரு தீர்மானம் போட்டிருப்பதைப் போல ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையிலும் ஒரு தீர்மானம் போட்டு அப்சல் குருவின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூறினால் இதேபோலத்தான் அமைதி நிலவுமா? நான் அப்படி நினைக்கவில்லை என்று தன்னுடைய டிவிட்டர் இணையதளத்தில் கருத்து தெரிவித்திருந்தார் உமர் அப்துல்லாஹ். அவர் எதை நினைத்தாரோ அதுதான் நிகழ்ந்தது.

உமர் அப்துல்லாஹ்வின் கருத்துகள் வெளிவந்தது தான் தாமதம், உடனடியாக களமிறங்கிய ஊடகங்கள் தமிழக சட்டசபைத் தீர்மானத்திற்கு எதிராக விமர்சனம் செய்துள்ளதாக தலைப்பு செய்தியிட்டு சிண்டு முடியும் வேலையில் இறங்கியது.

பாரதீய ஜனதா கட்சியோ உமர் அப்துல்லாஹ் பேசக் கூடாத ஒன்றைபேசி விட்டது போல நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுப்பி பேயாட்டம் போடுகிறது. தமிழக முதல்வரை பின்பற்றி உமர் அப்துல்லாஹ் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை. தாங்கள் இதேபோன்று தீர்மானம் நிறைவேற்றினால் அமைதி நிலவுமா? என்று கேள்வியைத் தான் எழுப்பினார்.

பாரதீய ஜனதா கட்சி அமைதி நிலவாது என்பதைக் காட்டும் விதமாக பல்வேறு பிரச்சாரங்களை உமர் அப்துல்லாஹ்வுக்கு எதிராக திருப்பி யுள்ளது.

உமர் அப்துல்லாஹ்வின் விஷயத்தில் எகிறிக் குதிக்கும் பாஜக மற்ற மாநில முதல்வர்கள் பேச்சில் மட்டுமல்ல, செயலிலும் ஈடுபட்டபோது செய் தது என்ன?

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரும் தமிழக சட்டமன்றத் தின் தீர்மானம் குறித்து பாஜக எந்தக் கண்டனத்தையும் தெரி விக்கவில்லை. இதேபோன்றுதான் சில மாதங்களுக்கு முன் காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தைச் சேர்ந்த தேஜிந்தர் பால் சிங் புல்லாரின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.

புல்லாரின் தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று குரல் கொடுத்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு எதிராக பாஜக எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்தது. பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்ட சரப் ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதி மன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனையை தடுக்கும் அனை த்து செயல்களிலும் பாஜக கச்சை கட்டிக் கொண்டு களமிறங்கியது. இந்த பாஜக உமர் அப்துல்லாஹ்விற்கு எதிராக களமிறங்குவது உமர் அப்துல்லாஹ்வும், அப்சல் குருவும் முஸ்லிம்கள் என்பதுதான் காரணம்.

பிரச்சினை தனக்கு எதிராக திசை திரும்புவதை உணர்ந்த உமர் அப்துல்லாஹ், “எனக்குத் தெரியும் இந்த சேனல்கள் ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்துவார்கள். பிறகுதான் அமைதியாக வேண்டும். அதாவது இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்கி றேன் என்று கூறி இதற்கு முடிவுரை எழுத முனைந் துள்ளார்.

உமர் அப்துல்லாஹ்வின் இந்தப் பின் வாங்கல் இந்தியாவில் முஸ்லிம்களின் யதார்த்த நிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளது. மற்ற முதல்வர்கள் தூக்குத் தண்டனைக் கைதிகள் விஷயத்தில் குரல் கொடுத்தால் அமைதி காக்கும் ஊடகங்களுக்கும், இந்துத்துவாவாதிகளுக்கும் முஸ்லிம் முதல்வர் "நான் குரல் கொடுத்தாலும் இதே நிலை தானா?' என்ற கேள்வி எழுப்புவதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனால்தான் ஜெயலலிதாவும், பிரகாஷ் சிங் பாதலும் குரல் கொடுத்தபோது முக்கியத்துவம் குறித்து வெளியிட்ட பத்திரிகைகள், உமர் அப்துல்லாஹ் விஷயத்தில் சீறிப் பாய்கின்றன. இதனை உணர்ந்த காரணத்தால்தான் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானம் குறித்த கருத்து தெரிவிக்கும்போது கூடுதலாக காஷ்மீர் மக்கள் என்றாலே ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர். அந்த அளவுக்கு காஷ்மீருக்கு வெளியேயும் அவர்களின் நிலை உள்ளது என்று தெரிவித் தார்.

சட்டமன்றத் தீர்மானம் குறித்து காஷ்மீர் முதல்வரின் கருத்தில் இருந்த நியாயத்திற்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எந்த வித ஆதரவுக் குரலும் எழுப்பப்படாததைக் கவனிக்கும்போது காஷ்மீர் மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்படுகின்றனர் என்ற கருத்துக்கள் உண்மை என்றாலும் அதில் ஒரு சிறு திருத்தம் தேவை. காஷ்மீர் முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்திய முஸ்லிம்களும் ஒதுக்கப்பட்டவர்களாக கருதப்படுவதும், நடத்தப்படுவதும்தான் இந்தியாவின் யதார்த் தம்; உண்மை நிலை.

அப்சல் குருவைப் பற்றி பேசியதற்காக தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்

பாஜகவுக்கு உமர் அப்துல்லாஹ் பதிலடி

சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதில ளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப் துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக் குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளனின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இதையொட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதே போன்று அப்சல் குருவுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்கு தண்டனையைக் குறைக் கும் தீர்மானத்தைக் காஷ்மீர் சட்டசபை யில் தீர்மானம் கொண்டு வந்தால் இதே போல் அமைதி காக்குமா தேசம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

உமர் அப்துல்லாவின் கருத்துகளைக் கடுமையாக கண்டித்த பாஜக இது தவ றான முன்னுதாரனம் என்றும் குறிப்பிட் டது. இது குறித்து கருத்து தெரிவித்த உமர் அப்துல்லா தன்னைத் தேர்ந்தெ டுத்த மக்களைத் தவிர பாஜக உள்ளிட்ட யாரும் தன் குரலை அடக்க முடியாது என்றும் தான் இந்நாட்டின் குடிமகன் எனும் முறையில் கருத்து சொல்லும் சுதந் திரம் உள்ளது என்றும் கூறினார். மேலும் தன் கருத்து தவறென்றால் தன் மீது பாஜக வழக்கு தொடரட்டும் என்றார்.

அப்சல் குருவைப் பற்றி பேசியதற்காக தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்

பாஜகவுக்கு உமர் அப்துல்லாஹ் பதிலடி

சமீபத்தில் அப்சல் குருவை பற்றி ஒமர் அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பாஜக கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப் துல்லா தான் அப்சல் குருவைப் பற்றி சொன்னது தவறென்றால் பாஜகவுக்குத் தைரியமிருந்தால் தன் மீது வழக்கு போடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளனின் தண்டனையை குறைக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. இதையொட்டி டிவிட்டரில் கருத்து தெரிவித்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இதே போன்று அப்சல் குருவுக்கு விதிக்கப்பட் டுள்ள தூக்கு தண்டனையைக் குறைக் கும் தீர்மானத்தைக் காஷ்மீர் சட்டசபை யில் தீர்மானம் கொண்டு வந்தால் இதே போல் அமைதி காக்குமா தேசம் என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

உமர் அப்துல்லாவின் கருத்துகளைக் கடுமையாக கண்டித்த பாஜக இது தவ றான முன்னுதாரனம் என்றும் குறிப்பிட் டது. இது குறித்து கருத்து தெரிவித்த உமர் அப்துல்லா தன்னைத் தேர்ந்தெ டுத்த மக்களைத் தவிர பாஜக உள்ளிட்ட யாரும் தன் குரலை அடக்க முடியாது என்றும் தான் இந்நாட்டின் குடிமகன் எனும் முறையில் கருத்து சொல்லும் சுதந் திரம் உள்ளது என்றும் கூறினார். மேலும் தன் கருத்து தவறென்றால் தன் மீது பாஜக வழக்கு தொடரட்டும் என்றார்.

Pin It