இந்தியாவின் புல னாய்வு நிறுவன மான ஐ.பி., சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மத் திய அரசின் கைப்பாவை யாக செயல்படுகிறது என் கிற விமர்சனம் பொதுவா கவே உண்டு.

இதுபோன்ற விமர்சனங்கள் பெரும்பாலும் எதிர்கட்சிகளிட மிருந்துதான் வரும். அதே போல, மனித உரிமை ஆர்வலர்க ளும், சமூக சிந்தனையாளர்க ளும், முக்கிய வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ. போன்ற புல னாய்வு நிறுவனங்கள் உண்மை யான குற்றவாளிகளை தப்பவிட, வழக்கின் தன்மையை பலவீனப் படுத்தி விடுகிறார்கள் என்கிற விமர்சனத்தை முன் வைக்கின்ற னர்.

இதற்கு பல சான்றுகள் இருந் தாலும், அனைவருக்கும் தெரிந்த உதாரணமாக குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை வழக்குக ளைச் சொல்லலாம்.

குஜராத் கலவர வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேரடியாக நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு கூட குஜராத் கல வரத்திற்கு முக்கிய காரணமான நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவைச்ச சகாக்களின் மீது முறையான விசாரணையை செய்யாமல் அவர்களை தப்ப விடும் வகையில் தான் விசாரணையின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இப்படி பல குளறுபடிகளுக்கும், விமர்சனங்களுக்கும் புல னாய்வு நிறுவனங்கள் ஆளாகி வரும் நிலையில் தற்போது தன் பங்கிற்கு மத்திய ஊழல் ஒழிப்பு கண்காணிப்பு ஆணையம் வேறு எச்சரித்துள்ளது.

ஊழல் தொடர்பான தகவல் களை வெளிநாடுகளிலி ருந்து பெறுவதில் இந்திய புலனாய்வு நிறுவனங்கள் போதிய ஆர்வமில்லாமல் செயல்பட்டு வருகின்றது. குற்றச்சாட்டுடன் கூடிய எச் சரிக்கை விடுத்திருக்கும் ஊழல் ஒழிப்பு ஆணையம், இந்த மெத்தனப் போக்கை தவிர்க்கும் பொருட்டு, இது தொடர்பான நடவடிக்கை களை விரைவுபடுத்துமா றும், புலனாய்வு நிறுவனங் களின் செயல்பாடுகளை தனிப் பிரிவை ஏற்படுத்தி கண்காணிக் கும்படியும் மத் திய அரசை அறிவுறுத்தி யுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் வெளிநாடுக ளில் இருந்தாலோ அல்லது அவர்கள் வெளிநாட்டு வங்கிக ளில் பணத்தை போட்டு வைத்தி ருந்தாலோ இது தொடர்பான வழக்குகள், நீதிமன்ற உத்தரவு களை மத்திய அரசு மூலம் அனுப் பிவைப்பதில் கால தாமதம் ஏற் படுவதாக புலனாய்வு நிறுவனங் கள் கூறுகின்றன.

வழக்கு விசாரணைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இந் திய விசாரணை அதிகாரிகளை வெளியுறவு அமைச்சகம் அனுப்பி வைக்கிறது. இதில் ஏற்படும் காலதாமதங்களை குறைக்க, விசாரணை அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் அதிகாரத்தை சி.பி.ஐ. இயக்குனருக்கு வழங்க வேண் டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரையும் செய்திருக்கிறது ஊழல் ஒழிப்பு ஆணையம்.

அதோடு, தனிப் பிரிவு அமைக் கப்பட்டால் அதனால் எவ்விதச் சட்ட ரீதியான பிரச்சினையும் ஏற்படாமலும், புலனாய்வு நடவ டிக்கைகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் வெளிநாடுகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வெளிநாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் மூலம் அங்கீகா ரம் பெற்ற போலீஸ் அதிகாரி களை நியமிக்க வேண்டும் என் றும் இந்த ஆணையம் பரிந் துரை செய்திருக்கிறது.

மந்த நிலையில் இருக்கும் இந் திய புலனாய்வு நிறுவனங்கள் ஆக்டிவாக செயல்பட வேண்டும் என்றால் ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தாமதிக்கக் கூடாது. தாமதித்தால் அதனால் இந்தியாவிற்குத்தான் இழப்பு.

- ஃபைஸ்

Pin It