தவ விசுவாமித்திரர் விண்ணில் வீசிய எண்ணெய் கரண்டியில் மனைவி மக்கள் தேடி சண்டாளனாக திரிகிறான், உடலோடு சொர்க்கம் வேண்டிய காசிராஜன்.

 கலை-இலக்கிய படைப்புகளில் மறைபொருள், தொனிப்பொருள், சுயம், சுதந்திரம் தேடும் கலாக்காரர்கள் கலாச்சார கலப்பு - நவீனம், பின் நவீனம் என பேசி அழைக்கிறார்கள்.

வசனம் (1) நீண்ட நேரம் ஒரு பாறையை பார்த்துக்கொண்டிருந்த சிற்பி மைக்கிலாஞ்சிலோவிடம் ...

போப் ஆண்டவர் “ஹலோ மைக்கி பாறையில் எதை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

சிற்பி மைக்கி “குதிரையை”

போப் “பாறையில் குதிரை எங்கே இருக்கிறது?”

மைக்கி “குதிரை இல்லாதவற்றை செதுக்கிவிடுவேன்”

இந்த டயலாக்கை, ஒரு கலைஞன் டொன்டி போர் அவர்சும் கலைகண்ணோடு வாழுணும் என்பதற்கு உதாரணமாக சொல்லி சொடக்கு எடுத்து அழைக்கிறார்கள் கலை படைப்பில் செய்நேர்த்தி விரும்பிகள்.

வசனம் (2) வாடிக்கையாளரிடம் பேரம் பேசிக்கொண்டிருந்த நவீன ஓவிய தந்தை பிக்காசோவிடம் ...
பார்வையாளர் ஒருவர் “மிஸ்டர் பிக்காசோ நீங்க வரைந்த ஓவியம் எனக்கு புரியவில்லையே?”

பிக்காசோ “நான் நைட்டிங்கேல் பறவையாக பல படைப்பு படைச்சி பறக்கிறேன்” இந்த டயலாக்கை பரவசமா பாடி பறக்கிறார்கள் நவீன கலாகாரர்கள்.

நமது கேள்விகள்

1. எந்த குதிரை அல்லது பாறை மைக்கிலாஞ்சிலோவிடம் “ஐயா சிற்பி என்னை சிலையா செதுக்கற ... இ ... ஈ ... என அழுதது?”

2. “பிக்காசோ ... எங்களுக்கு நைட்டிங்கேல் ரோஸ்ட் கொஞ்சம் பெப்பர் தூக்கலா செய்து கொண்டாங்க?” என ஆர்டர் கொடுத்துடு.

துணை கேள்விகள்

1. “பிரமாண்டமான வெண்பளிங்கு டேவிட்டின் குரல்வளை மடிப்புக்கு அடியில் மைக்கிலாஞ்சிலோ காலத்து அரசு, மதம், இனக்குழு அடையாளங்கள் முட்டி முனங்கிக் கொண்டிருக்கிறது. கலை படைப்பு ரகசியத்தில் படைப்பாளி சார்ந்துள்ள சமூக அடையாளம் தவிர்க்க முடியாதது எனில், இன பேதமற்று ‘மனிதம்’-’கலை’ என எஞ்சி இருப்பது எது?

உ. “உலக பெரு முதலாளிகளுக்கு இணையாக ஓவியர் பிக்காசோ தனது கலை படைப்புகளில் சேர்த்த முதலீடுகள் தவிர்த்து மனிதம்-கலை என எஞ்சி இருப்பது எது?

கேள்வி-விலைகள்

விவரிக்க முடியாததும், வியாபாரம் அற்றதுமான ‘அது’ ‘வாழ்வின் வினை கலையின் நுண்மம். ஓயாத உளி ஓசையில், கித்தான் நெசவு அலையில் கூடி கலந்த பொழுதில் படைப்பாளியுள் மிக அந்தரங்கமாய் நேர்ந்தது வாழ்வின் நம்பிக்கை, ஆக்கம், ஊக்கம் எனில் ... - பொக்கு பிளந்த தளிரில், தோளை நுழைக்கும் ஊசிமுனையில், கடைவாய் விளிம்பில், சுவாச காற்றில், ஒரு சாமானியனில் ரகசியமாய் நேர்ந்த ஆக்கமும் ஊக்கமும் வேறு என்ன?

அமைதி வேண்டி எங்கும், எதிலும் உடல், மனம் லயித்த பொழுதே ஆனந்தமயம் எனில், அது சிற்பம், சித்திரம் வடிப்பதால் மட்டும் ஆகுமோ?

விந்தையும் விளையாட்டும்

‘கற்ற வித்தையும்-வெளிப்பாடும் தன்னை யாவுமாய் பாவித்த பொழுதின் அடையாளம்’
வான் நிலவில், மாடு மேய்க்கும் ஒளவை கிழவியை சுட்டிக் காட்டினாள் அம்மா. அங்கு நாவல் மர உச்சியில் நின்று “பாட்டி சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா, கேள்” என்றது குழந்தை.

வித்தையும் வியாபாரமும்

புவியை மானிடம், பத்திர பதிவு செய்து கொண்ட வகையில், நூறு ஆண்டு காலம் தீண்டாத விசம், இருளில் வெளிச்சமிட ... பாவித்து, கவனித்து, நாகம் கொண்டு வந்தவை யாவும் இங்கு கடைச்சரக்கு ஆனது தனி விவரனை.

நமது தெருக்கோடி ஆத்தா கடையில் இட்டிலி தின்னும் ஆங்கிலேயருக்கு, நமது மாமா தொப்புலான் என்ற கெய்டு விவரித்து “திசிஸ் மை எருமை மாடு சார்” இப்படி ஆங்கிலேயருக்கு இணையாக நமது கெய்டுமாமா ‘மாடர்ன் ஆர்ட்’ வரைய, அதை தனது வித்தின் எச்சமாக காசு கொடுத்து வாங்கும் ஆங்கில பரதேசிகளுக்கு நன்றி.

தங்கள் விருந்தில் வேர்கடலை மிட்டாய்க்கு ஆகும் செலவு தொகை ரூ. பத்து லட்சத்திற்கு நமது தொப்புலான் மாமா கலை படைப்பை வாங்கி கலையை பாதுகாக்கும் நம்ம சுதேசி வைர வியாபாரிகளுக்கு நன்றி. ஒரு சதுர அடி ஒரு லட்சம் ரூபாய் என நூறு கோடி ரூபாய்க்கு கலைபடைப்பு வாங்கிய சுதேசி காலிமனை பெரு வியாபாரிக்கும் நன்றி ... நன்றி .

‘பயம் வேண்டாம் - நாம் யாவரும் கோடீஸ்வரர்கள்’

படைப்பு சுதந்திரம், சுயபரிசோதனை என சுய இரக்கம், பாலியல் குழப்பம், மரபு அடையாளங்களை சிதைத்தல், சமூக உறவுகளில் தெளிவற்ற விமர்சனம் என படைப்பு படைத்து பேசி பிழைக்கும் கலை வித்தகர்களா நீங்கள்?

கேள்

ஏரியில் தூர் வாரும் நம் விரல் இடுக்கில், மண் துகள் விருட்சங்களாக கிளை துளிர்க்கும். நமது ரத்த நாளங்களில் உற்சாகம் பெருக ... நமது வீட்டுப் புலக்கடையில் மலர்ந்த காட்டுப் பூ உலகு வியக்கும் கட்டிட கலை ஆகட்டும், சிற்பம், சித்திரங்களாகட்டும். கை நீட்டு பாட்டி வீட்டு சீதனமான அஞ்சரை பெட்டியில் அடை காத்த நாகம் எழுந்து நம்மை தீண்டினாலும், அல்லது பொன் கிடைத்தாலும் பெருமை. தந்தையார் சாம்பல் குவியலில் கை நீட்ட வைரம் கிடைத்தாலும், விதிவழி ஞானம் கிடைத்தாலும் பெருமை.

வழித்தடமெங்கும் கலா அனுபவம், கபடு அற்ற சிந்தை மகா சக்தி, உத்தரவாதமும், கவர்ச்சி உரையும் வித்தை - உலகமயம்.

Pin It