22 அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் கடும் போட்டிகளில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி வாய்ப்புக் குறைவு என்று அ.தி.மு.க. -பா.ஜ.க. ஆதரவு ஏடான ‘தினமலர்’, அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை விரிவாக அலசி எழுதியிருக்கிறது.

மார்ச் 18, ‘தினமலர்’ ஏட்டில் இந்த செய்தி வெளி வந்துள்ளது.அடுத்தத் தொகுதியில்கூட சென்று பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் அவர்கள் ‘லாக்’ செய்யப்பட்டுள்ளார்கள். தி.மு.க. கிடுக்குப்பிடி போட்டு விட்டது என்று எழுதியுள்ளது ‘தினமலர்’.

அந்த அமைச்சர்கள் பட்டியல் : வேலுமணி, உடுமலை இராதாகிருஷ்ணன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன், இராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ராஜலட்சுமி, ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின், செங்கோட்டையன், கருப்பணன், வீரமணி, தங்கமணி, அன்பழகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், ராமச் சந்திரன், சம்பத், ஓ.எஸ்.மணியன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், சி.விஜயபாஸ்கர்.உதயகுமார், சி.வி.சண்முகம் என்ற இரண்டு அமைச்சர்கள்தான் அடுத்த தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு போகிறார்கள் என்றும் ‘தினமலர்’ ஏடு எழுதியுள்ளது.

- விடுதலை இராசேந்திரன்

 

Pin It