கழகத்தின் ஆர்ப்பாட்டங்கள் - முற்றுகை

உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து தமிழக அரசு நடைபாதைக் கோயில்களை அகற்ற வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகம் ஆர்ப்பாட்டங்கள் - முற்றுகைப் போராட்டத்தை நடத்தியது.

திருப்பூரில் : திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் 28.04.2016 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக மாநகர தலைவர் நீதிராசன் தலைமையில் திருப்பூர் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சட்ட விரோதமான நடைபாதைக் கோயில்களை அகற்று! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் கால தாமதப்படுத்தாதே!” என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட செயலாளர் முகில்ராசு, பல்லடம் நகர தலைவர் கோவிந்தராசு, ஒன்றிய தலைவர் சண்முகம், சூலூர் பன்னீர்செல்வம், அறிவியல் மன்றம் ஆசிரியர் சிவகாமி, அகிலன், மாதவன், முத்து. தனபால், கருணாநிதி, பிரசாந்த், சின்னு, ராமசாமி, குளத்தூர் ராமசாமி, சரத், சங்கீதா, யமுனா, சரஸ்வதி, ராஜசிங்கம், தனகோபால், முருங்கப்பாளையம் மூர்த்தி, ஹரீஷ்குமார், முருகம்பாளையம் மூர்த்தி, பரிமளராசன் உள்ளிட்ட 35 தோழர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு : 27.04.16 இன்று மாலை 5.00 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக தலைமை கழக அறிவிப்பின்படி உச்சநீதிமன்ற உத்தரவின்படி சட்ட விரோத நடைபாதைக் கோவில்களை உடனே அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம் மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் கு. சூரியகுமார் தலைமை தாங்கினார். தோழர்கள் சி.கோவிந்தராசு, டைகர் பாலன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். டைகர் பாலன் பேசுகையில் தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் அறிவியலை நோக்கிச் செல்லும் நிலையில் ஊடகங்கள், அறிவியல் சார்ந்த விவாதங்களையும், உச்ச நீதிமன்ற கேள்வி, தீர்ப்புகள் குறித்த விவாதங்களை நடத்தாதது ஏன்? அறிவியல் மனப்பான்மையை வளர்க்க ஊடகங்கள் ஏன் முன் வருவதில்லை? என கேள்வி எழுப்பினார். ஆர்ப்பாட்டதில் 60க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். இறுதியாக மேட்டூர் நகர செயலாளர் அ .சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

பொள்ளாச்சியில் : பொள்ளாச்சி கழக சார்பில் 28.04.2016 (வியாழன்) மாலை மாலை 4 மணியளவில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் வே.வெள்ளிங் கிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி ராசேந்திரன், யாழ்மணி, சீனி, ஆனைமலை வே.அரிதாசு, சோ.மணி மொழி, இரா.ஆனந்த், முருகேசு, சிவா, கா.க.புதூர் சபரிகிரி, கா.சு.நாகராசு, தினேசு, பிரபு, வெற்றி, கதிர் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் : 27-04-2016 கன்டன ஆர்ப்பாட்டம் தெற்கு வட்டாட்சி அலுவலகத்தின் அருகில் நடை பெற்றது. மாநகர மாவட்டத் தலைவர் நேருதாஸ் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்டத் தலைவர் இராமசந்திரன், சூலூர் பன்னீர்செல்வம், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட் டத்தில் தர்மலிங்கம், நிர்மல்குமார். முருகேஷ், அமுல்ராஜ், சங்கர், சித்தன் , இராஜா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

சென்னையில் கைது: சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் 26.4.2016 அன்ற மாலை 4 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பெரியமேடு அம்பேத்கர் சிலை அருகே கழகத் தோழர்கள் திரண்டு மாநகராட்சியை முற்றுகையிட ஒலி முழக்கங்களுடன் புறப்பட்டபோது, காவல்துறை தடுத்து நிறுத்தி தோழர்களை கைது செய்தது. கைதான தோழர்களை புரசைவாக்கம் தர்ம பிரகாஷ் திருமண மண்டபத்தில் மாலை 7 மணி வரை வைத்திருந்து பின்னர் அனைவரையும் விடுதலை செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), வேழ வேந்தன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்), இரா. உமாபதி (தென் சென்னை மாவட்ட செயலாளர்), வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசு குமார், வழக்கறிஞர் அருண், அய்யனார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதானார்கள்.