“சுயராஜ்யக் கக்ஷி அழிந்து ஒழிய வேண்டுமென்பது திரு. ராஜகோபாலாச்சாரியாரின் கருத்தெனத் தெரியவருகிறது” என்று ‘நவசக்தி’ தன் 30.4.26 தலையங்கத்தில் துக்கப்பட்டு ஆச்சாரியார் மீது சீறுகிறது. சுயராஜ்யக் கட்சியின் தோற்றத்தால் காந்தியடிகள் ஒடுங்கினார், ஒற்றுமை குலைந்தது, ஒத்துழையாமை மறைந்தது, வகுப்புப்பூசல் கிளம்பியது என்று சதா ஓலமிட்டுக் கொண்டிருந்த ‘நவசக்தி’க்கு இப்பொழுது சுயராஜ்யக் கட்சி ஒழிந்து போவதில் இவ்வளவு கவலை வரக்காரணம் தெரியவில்லை. சுய ராஜ்யக் கட்சி ஒழிந்தால் உலகம் முழுகிப் போகுமோ அல்லது ‘நவசக்தி’க்கு செல்வாக்கு குறைந்துப் போகுமோ என்கிற இரகசியத்தை நாம் அறியவில்லை. (குடி அரசு - செய்தி விளக்கம் - 02.05.1926)
தொடர்புடைய படைப்புகள்
“நவசக்தி” யின் துக்கம்
More articles by பெரியார்
- மனிதன் (11 செப் 2026)
- காங்கிரஸ் கபட நாடக முடிவு (08 செப் 2026)
- பகுத்தறிவும் கடவுள் வாக்கும் (07 செப் 2026)
- லக்னோவில் ஏமாற்றுந் திருவிழா அல்லது காங்கிரசின் கபட நாடகம் (05 செப் 2026)
- இனாம் மசோதாவும் வைஸ்ராயும் - நிராகரித்த காரணம் என்ன? (03 செப் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.