காந்தி - ஏமாறாதீர்கள்

பிரஞ்சு இந்தியாவில் கிருஸ்தவர்கள் ஏகபோக உரிமை அநுபவிப்பதை போல, தமிழ்நாட்டில் பார்ப்பனர் ஏக போக உரிமைக்காரர்கள். இவர்களைப் போலவே பம்பாய், ஆமதாபாத் மில்கார முதலாளிகளாகும். இந்திய சர்க்கார் ராணுவத்துக்கும், வெள்ளைக்கார மாஜி உத்தியோகஸ்தர்கள் பென்ஷனுக்கும் பணம் ஒதுக்க ஒருக்கால் மறந்தாலும் மறப்பார்கள். நமது வடநாட்டு மில் முதலாளிகள் தங்கள் சங்கதியை மறப்பதில்லை. கதர் துணிக்கு கதர் பக்தர்கள் வரிப்பணம் கொடுப்பதைப் போலவே மில்கார முதலாளிகளுக்கும், சர்க்காரும் வரி நஷ்டமடைவதைப் போல், மில் துணி, நூல் இவைகளை உபயோகப்படுத்துகிறவர்கள் வரி கொடுக்க வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பு ஆமதாபாத் மில் தொழிலாளிகளுக்குள் ஓர் பலமான ஒற்றுமையுண்டாகி பெரும் கிளர்ச்சி செய்து சிறிது பலன் அடைந்தார்கள். இவ்வருடம் ஆமதாபாத் மில் முதலாளிகள் தங்கள் மில்லுகளில் ஆள் குறைப்பு திட்டத்தையும் கூலி குறைவு திட்டத்தையும் கையாள ஆரம்பித்ததும், மில் தொழிலாளிகள் பலமாக விழித்துக் கொண்டார்கள். முன்பு நடந்த ஒப்பந்தத்துக்கு விரோதமாக, மில் முதலாளிகள் செய்வதாக கூறினார்கள். மில் முதலாளிகளோ நஷ்டம் அதிகமாவதால் இம்முறையை கையாள்வதாக கூறினார்கள். இதற்கு தொழிலாள சங்க உத்தியோகஸ்தர்கள் மில்லுகளில் நஷ்டம் என்பது பொய் என்றும், மில் வரவு செலவு கணக்கில் நஷ்டமென்பது உண்மையானால், தாங்கள் இனியும் மில்களில் வேலை செய்து அரை வயிற்று கஞ்சிக்கு கூலி பெற்றுக் கொள்கிறோம், மில் வேலையிலேயே அழுது எலும்பு உருகியவர்கள் எங்கள் கிராமங்களுக்கு செல்கிறோம், கணக்கை காட்டுங்கள் என்று கேட்டார்கள். இதற்கு சரியான நாணயமான பதில் கூறாது, தொழிலாளி மில் கணக்கை பார்க்க கேட்பதா? கொடுப்பதா? அது மில் முதலாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்று வேறு பதில் கூறி காலம் கடத்தி வந்தார்கள்.periyar murali cafeகிறாக்கி

பம்பாய் மாகாணத்தில் பெரிதும் மில் தொழிலாளிகளுக்குள் பொது வேலை நிறுத்தம் நாளை 23ந் தேதி என்று தெரிந்ததும் இதில் ஆலை தொழிலாளர்களுடன் இவர்கள் சேராது பிரிக்க ஓர் தந்திரம் செய்துவிட்டார்கள். காந்தியை பிடித்து சமாதானம் என்று இன்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். சென்ற 4 மாதத்துக்குள் ஆறு, ஏழு தடவை தொழிலாள யூனியன் உத்தியோகஸ்தர்கள் சொல்லி வந்ததுக்கெல்லாம், காதுகொடாது வேறு வேலை இருக்கிறது என்று சால்ஜாப்பு சொல்லி வந்த காந்திபாபுவும் இன்று சமாதானத்துக்குப் புறப்பட்டு விட்டாராம். இந்நெருக்கடியில் ஆமதாபாத் மில் தொழிலாளிகள் என்ன செய்யப் போகிறார்கள்.

வாஸ்தவமா

காந்திஜீயின் யோசனைப்படி மில் தொழிலாளிகளும், மில் முதலாளிகளும் ஒரு சமரசத் திட்டம் தயாரித்து வருகிறார்கள்.

1. ஜீவனத்துக்கு இன்றியமையாதனவான, ஓர் குறைந்த பட்சமான சம்பள திட்டம் நிர்ணயிக்கப்படும்.

2. கம்பெனியின் பங்குதாரர்களுக்கு கிடைக்க வேண்டிய லாபம், ஏஜண்டுகளுக்கு கமிஷன், கட்டிடம் சாமான்கள், போதுமான நிதி, இம் மூன்று வித செலவினங்கள் போக, மிஞ்சி லாபமேற்பட்டால் இன்ன வீதாச்சாரப்படி அதை மில் முதலாளிகளும், தொழிலாளிகளும் பங்கு போட்டுக் கொள்வது என்பது பற்றி வரையருக்கப்படும்.

3. பங்குதாரர்களுக்கு 100க்கு 8 வீத லாபம் கிடைத்தால் போதுமென்றும் ஏஜண்டுகளுக்கு இப்போதைய கமிஷனில் பாதிகொடுத்தால் போது மென்பதும், தொழிலாள சங்க உத்தி யோகஸ்தர்களின் அபிப்பிராயமாகும். போன உடன்படிக்கையின் காலத்தில் காந்தி முன்பு செய்யப்பட்டும், முதலாளிகள் இந்த ஆறு மாத காலமாக காந்தியை அலக்ஷியபடுத்தி இருந்தாலும், அவ் விதம் சொல்வதாக காந்தி தொழிலாளிகளை ஏமாற்றி இருந்தாலும், எதிர்காலம் ஏமாறாமலும், சகோதரத் தொழிலாளிகளை காட்டி கொடாதும் இருப்பார்களா?

(புரட்சி கட்டுரை 22.04.1934)

Pin It