அடுத்த வாரம் 29 தேதி வெளிவரும் நமது "புரட்சி"யில் மே தினம் கொண்டாட வேண்டிய விதம் முதலியன விபரமாக அறிவிக்கப்படும்.

1. மே மாதம் முதல் தேதி செவ்வாய்க் கிழமையன்று சகல நகரங்களிலும், கிராமங்களிலும் பொதுக்கூட்டங்களிட வேண்டும்.

2. பிற்பகல் அந்தந்த ஊர் சங்கக் காரியாலயங்களிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு பொதுக் கூட்டமிட வேண்டிய இடத்திற்குச் செல்ல வேண்டும்.periyar mgr3. பொதுக்கூட்டத்தில் உபன்யாச நிகழ்ச்சிகள் நடந்ததும் மே தின அறிக்கை தலைவரால் படிக்கப்பட்டு பொதுக்கூட்டத்தினர் அங்கீகரிக்கச் செய்ய வேண்டும்.

4. நாளது 29ந் தேதி "புரட்சி"யிலும் 30ந் தேதி "பகுத்தறிவி"லும் மே தின அறிக்கை வெளிவரும்.

(புரட்சி அறிக்கை 22.04.1934)

***

மே தினம்

மே மாதம் 1 தேதி தொழிலாளர் பண்டிகை.

உலகத் தொழிலாளர் ஒன்றுபடும் நன்னாள்,

இந்தியத் தொழிலாளர்களே!

மே திருநாள் கொண்டாடத் தவறாதீர்.

சுயமரியாதைச் சங்கங்கள்

ஒவ்வொன்றும் மே திருநாள் கொண்டாடுமாக!

(புரட்சி அறிவிப்பு 22.04.1934)