தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றிற்கும் இன்று தோழர் ஷண்முகத்தின் பதவி மிக்க வயிற்றுக் கடுப்பாய் இருந்து வருகின்றதை நாம் உணர்ந்து வருகின்றோம். இவற்றுள் ஒரு விகடப் பத்திரிகை மிக்கக் கேவலமான முறையில் நடந்து கொண்டிருக்கிறதைப் பற்றிப் பல தோழர்கள் நமக்குப் பல வியாசங்கள் எழுதி இருக்கிறார்கள். அவற்றை இப்போது நாம் பிரசுரிக்கவில்லை. தயவு செய்து அப்பத்திரிகை அம்மாதிரி நடந்து கொண்டதற்காக வருந்தாதவரை அந்த வியாசங்களை நாம் பிரசுரித்துத் தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
விகடத்துக்கும் விஷமத்துக்கும் குரோதத் தன்மைக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட மாட்டாது என்று நினைப்பது ஏமாற்றத்தைத் தரும் என் பதை எச்சரிக்கை செய்தே, அந்தச் செய்கையைப் பின்வாங்கிக் கொள்ளும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - செய்திக் குறிப்பு - 24.09.1933)