periyar gandhimadhi ammal oviyaசிதம்பரம் பொன்னம்பல மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ பரஞ்சோதி சுவாமிகள் சிலநாள் உடல் நலங்குன்றியிருந்து நிகழும் அக்டோபர் மாதம் 10 ம் நாள் புதன் கிழமையன்று, அந்தோ! இம் மண்ணுலகை விட்டுப் பிரிந்தார்- சுவாமிகள் தென்மொழியிலும் வடமொழியிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். தாம் மடாதிபதியானதும் கால நிலைமைக்குத் தக்கபடி மடத்து வேலைகளுடன் பொது நலத்திற்கான வேலைகளையும் கவனித்து உழைத்து வந்தார். கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு முதலியவைகளை பல இன்னல்களுக் கிடையிலும் உபதேசித்து வந்தவர். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து சிதம்பரம் தச்சன் குளத்தையும் ஞானப்பிரகாசர் குளத்தையும் வெட்டியும் படிகட்டியும் சிதம்பரவாசிகளுக்கு உதவினவர். சிதம்பரம் நகர பரிபாலன சபையில் ஓர் ஆதிதிராவிட சகோதரிக்கு ஸ்தானம் வாங்கிக் கொடுத்ததும் நம் சுவாமிகளே. ஆதலின் இத்தகைய பெரியாரின் பிரிவாற்றாது தவிக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பாக சிதம்பரவாசிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - இரங்கல் செய்தி - 21.10.1928)

Pin It