pearl 320சிப்பிக்குள் மழைநீர் வீழ்ந்து, அதுதான் பின்னர் முத்தாக மாறுகிறது என்ற கருத்து பரப்பப்படுகிறது. கண்ணதாசன்கூட தனது கவிதை ஒன்றில் இப்படித்தான் எழுதினார். ஆனால், இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

முத்துச் சிப்பிகள் கடலின் அடி ஆழத்தில் வாழக் கூடியவை. முத்துக் குளிக்கின்றவர்கள் கூட கடலின் அடியில் மூழ்கிச் சென்றுதான் முத்து எடுக்கின்றனர். எனவே, முத்துச் சிப்பிக்குள் மழைத்துளி வீழ்வதற்கான வாய்ப்பு இல்லை. அப்படியிருக்க மழைத்துளிதான முத்தாக மாறுகிறது என்பது மடமை.

முத்துச்சிப்பி கடலடியில் வாழ்வதால், அதனுள் செல்லும் மணல் ஒன்றின்மீது, முத்துச் சிப்பியுள் சுரக்கும் சுரப்புநீர் படிந்து படிந்து முத்தாக மாறுகிறது.

மணலை ஆதாரமாகக் கொண்டு சுரப்புநீர் படிந்தே முத்தாக உருவாகிறது. மாறாக மழைத் துளியால் அல்ல.

- மஞ்சை வசந்தன்

Pin It