சரியான விகிதத்தில் கலவையை கலக்காததால் இது மாதிரியான விரிசல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 3 இஞ்ச் காரையைப் பெயர்த்துவிட்டு ‘கிராப்ட் பில்லர்’ என்ற கெமிக்கலை சிமெண்டுடன் கலந்து பூசினால் விரிசல்கள் சரியாகிவிடும். சீலிங் விரிசலுக்கு தளத்துக்குக் கிழே தாங்கும் கட்டைகளை வைத்து கனைட்டிங் கருவி மூலம் கான்கிரீட் கலவையை விரிசல் பகுதில் பீய்ச்சியடித்தால் விரிசல், ஓட்டை அடைபடும். மழைக்காலங்களில் சன்ஷேடில் நீர் தேங்கினால் அல்லது சுவர்களின் தண்ணீர்க் குழாய்களில் ஓட்டை இருப்பினும் விரிசல் மூலம் நீர் கசியும் வாய்ப்பு உள்ளது. அதிக அளவு ஈரக்கசிவு இருக்கும் இடங்களில் சில இஞ்ச் சுவரை உடைத்து பைப்பை சரிப்படுத்தி சிமெண்ட் கலவை பூசலாம்.

Pin It