தேவையான பொருட்கள்:

கோழி - 1
பூண்டு விழுது - அரைத் தேக்கரண்டி
இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி
தயிர் - 1.5 கப்
பச்சைமிளகாய் விழுது - ஒரு தேக்கரண்டி
வெங்காய சாறு - ஒரு மேசைக்கரண்டி
தக்காளி விழுது - 1.5 கப்
தக்காளி கெட்ச்அப் - 3 மேசைக்கரண்டி
முந்திரி - ஒரு கப்
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி
சீனி - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கோழி இறைச்சியை சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காய விழுதுகளுடன் தேவையான உப்பு சேர்த்து தயிருடன் கலந்து அதில் கோழித் துண்டங்களைப் போட்டு சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊறவிட வேண்டும். தக்காளி விழுது, மிளகாய்த்தூள், சீனி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் இட்டு வேகவிட வேண்டும்.

நன்கு வெந்து சாஸ் போல் கெட்டியானவுடன் இறக்கி வைத்து அதில் தக்காளி கெட்ச் அப், 2 மேசைக்கரண்டி வெண்ணெய் மற்றும் பொடித்து வைத்துள்ள முந்திரியைச் சேர்த்து தனியே வைக்க வேண்டும். ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஊற வைத்துள்ள கோழித்துண்டுகளை எடுத்து வேகவிட வேண்டும்.

இறைச்சியில் உள்ள நீர் வற்றி நன்கு வெந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள சாஸினை எடுத்து இதன் மேல் ஊற்றி மேலும் 5 நிமிடம் வேகவிட வேண்டும். நன்கு வெந்தவுடன் இறக்கி மீதமுள்ள ஒரு மேசைக்கரண்டி வெண்ணெய்யை மேலே ஊற்றி பரிமாற வேண்டும்.

Pin It