தேவையான பொருட்கள்:
கோழிக்கறி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு - 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
துருவிய தேங்காய் அரை கப்
எண்ணெய் அரை கப்
உலர்ந்த மிளகாய் - 8
கசகசா - 2 தேக்கரண்டி
மல்லி - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
ஏலக்காய் - 3
கிராம்பு - 3
பட்டை - சிறு துண்டு
சோம்பு - ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் - அரைத் துண்டு
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
எஞ்சியுள்ள எண்ணெயை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.
அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும். 2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- மறுபடியும் பார்ப்பனர் மகாநாடு
- நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் - கேஸ் விலை உயர்வு
- தேசாபிமானமும் தேசியமும்
- பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது
- ஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை
- வினா விடை
- தமிழக அரசியல் அவலங்கள்
- தமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை
- கண்ணனூர் செவ்வாய் தரும சமாஜத்தின் எட்டாவது ஆண்டுவிழா
- ஹத்ரஸ் தலித் பெண்ணிலிருந்து, ஐபிஎஸ் பெண் வரை?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: கோழி
செட்டிநாடு சிக்கன்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.