தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி: ஒரு கப்
நறுக்கிய கோழி இறைச்சி: அரை கப்
கேரட்: 1
முட்டைகோஸ்: சிறிதளவு
வெங்காயத்தாள்: சிறிதளவு
இஞ்சி விழுது: ஒரு தேக்கரண்டி
முட்டை: 1
குடை மிளகாய்: கால் கப் 
பெரிய வெங்காயம்: 1
பூண்டு விழுது: ஒரு தேக்கரண்டி
சோயா சாஸ்: ஒரு தேக்கரண்டி
சில்லி சாஸ்: ஒரு தேக்கரண்டி
உப்பு: தேவையான அளவு

செய்முறை:

பாசுமதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு பொல பொலவென்று வடித்துக் கொள்ள வேண்டும். கோழி இறைச்சியை எலும்புகள் நீக்கி, கழுவிச் சுத்தம் செய்து, தனியே வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், முட்டைகோஸ், காரட், குடை மிளகாய் ஆகியவற்றை கழுவி, நீள வாக்கில் மெல்லிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். முட்டையை உடைத்து பொரியல் போன்று வேக வைத்து எடுக்க வேண்டும். 

நறுக்கின காய்கறிகளையும் தனியே இலேசாக வதக்கிக் எடுத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் இஞ்சி பூண்டு விழுதினைச் சேர்த்து வதக்க வேண்டும். இப்போது சாதம், கோழி இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும். சோயா சாஸ், சில்லி சாஸ், உப்பு சேர்த்து தீயை சற்று அதிகப்படுத்தி சிறிது நேரம் கிளறியபடி வேக வைத்து இறக்கி விடவேண்டும்.Pin It