தேவையான பொருட்கள்: காலிஃப்ளவரை கழுவி, சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல், தேங்காய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கினை அவித்து தோல் உரித்து, 4 அல்லது 6 பாகங்களாய் நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய வெங்காயம், காலிஃப்ளவர் போட்டு வதக்க வேண்டும். பிறகு அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு வதக்கி சிறிது நீர் ஊற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விட வேண்டும். வெந்தவுடன், இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்க வேண்டும்.
காலிஃப்ளவர்: கால் கிலோ
மிளகாய் வற்றல்: 5
பெரிய வெங்காயம்: 1
சோம்பு: 1 தேக்கரண்டி
தேங்காய்: 2 சில்லு
எண்ணெய்: 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி தழை: சிறிது
உப்பு: தேவையான அளவு
செய்முறை:
காலிஃப்ளவர் குருமா
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.