தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கை வேகவைத்து எடுத்து தோலுரித்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், கசகசா, பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், சோம்பு, தக்காளி ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு - 4
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கடலை - 3 தேக்கரண்டி
கசகசா - ஒரு தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
உப்பு - 4 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும். நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு துண்டுகளையும், அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதித்தவுடன் சிறிது உப்பு சேர்த்து இறக்கிவிட வேண்டும்.More articles by நளன்
உருளைக்கிழங்கு குழம்பு
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடுப்பி ஹோட்டல்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.