சமீபத்தில் வழக்கறிஞர்கள் சட்டம் திருத்தப்பட்டு புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளது பெரும் விவாதத்தை நீதிமன்றத்தின் வளாகங்களுக்குள் பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டத்தின் பிரிவு 34ஐ திருத்தி பார் கவுன்சிலுக்கான அதிகாரங்களை தன்னிடத்தே குவித்துக் கொண்டுள்ளது . இச்சட்ட திருத்தத்தின்படி வழக்கறிஞர்களுக்கான புதிய நடத்தை விதிகளும் அவற்றை மீறினால் தண்டனைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதிகளின்படி நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலம் போனாலொ நீதிபதிகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார்கள் அளித்தாலொ விசாரணைக்கு முன்னதாகவே வழக்கறிஞர்களை வாழ்நாள் முழுவதும் வழக்கறிஞர் தொழில் புரியாமல் தடுக்கப்படுவார்கள்.

Chennai High Courtஇவ்விதிகள் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற ஆர்கே.ஆனந்த் (2009) வழக்கில் அளிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரும் எதிர் தரப்பு வழக்கறிஞரும் ஒரு முக்கிய சாட்சியை தங்களின் திட்டத்திற்கேற்ப வளைத்தது கேமிராவில் கையும் களவுமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் பெயரில் பணம் பெற்றுக்கொள்கின்றனர்,ஆவணங்களை தங்களின் நோக்கத்திற்கேற்ப திருத்துகின்றனர், நீதிபதியை முறைகேடாக பயன்படுத்துகின்றனர் மற்றும் இந்த அடிப்படையில் இந்த வழக்கின் விசாரணையை தங்களுக்கு சாதகமில்லாத நீதிபதியிடமிருந்து வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவது என்பது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று நீதிபதிகள் வழக்கறிஞர்களின் ஒழுங்கீனமான நடத்தைகள் குறித்து விளக்கமளித்தது. மேலும் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு எதிராக எந்த அடிப்படையுமில்லாத ஆதாரமுமில்லாத புகார்களை அவர்களின் உயர் மட்ட நீதிபதிகளுக்கு அல்லது அதிகாரிகளுக்கு அனுப்புகின்றனர் என்றும் கூறியுள்ளது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளதாவது இந்த சூழ்நிலையில் இது போன்ற வழக்கறிஞர்களின் செயல்கள் நீதிமன்றத்தின் புனிதமான செயல்பாடுகளுக்கு உடனடியான மற்றும் அதிகமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நீதிமன்றங்கள் கையறு நிலையில் இல்லை அவை தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு முன்னதாகவே அவை ஒரு வழக்கறிஞரை தடை செய்ய முடியும் .

சென்னை உயர்நீதிமன்றம் இது போன்ற உதாரணங்களிலிருந்து சில குறிப்புகளை எடுத்துக் கொண்டு வழக்கறிஞர் சட்டத்தில் புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. இவ்விதிகளில் கீழ்க்கண்டவை வழக்கறிஞர்களின் ஒழுங்கீனமான நடத்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

(1) ஒரு நீதிபதியின் பெயரால் ஒரு வழக்கறிஞர் பணம் பெற்றுக் கொள்வது கண்டறியப்பட்டால் அல்லது ஒரு நீதிபதியை தனது நோக்கங்களுக்காக வளைக்க முயற்சிப்பது என்ற பெயரில் இச்செயலை மேற்கொண்டாலோ,

(2) ஒரு வழக்கறிஞர் ஒரு நீதிபதியை அதட்டி அடக்குவதோ அல்லது ஒரு நீதிபதியை அல்லது நீதித்துறை அதிகாரியை முறைகேடாக பயன்படுத்துவதோ,

(3) ஒரு வழக்கறிஞர் ஒரு நீதிபதிக்கு எதிராக அடிப்படையற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் அல்லது மனுக்களையும் அவரது அடுத்தபடியான உயர்மட்ட நீதிபதி அல்லது உயர் அதிகாரிக்கு அனுப்புவது கண்டறியப்பட்டால்,

(4) நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே ஒரு வழக்கறிஞர் தீவிரமான முறையில் நடைபெறும் ஊர்வலத்தில் பங்கெடுத்துக் கொண்டாலோ அல்லது நீதிமன்றத்திற்குள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டாலோ, அல்லது நீதிமன்றத்திற்குள் ஒரு கோரிக்கை அல்லது முழக்க அட்டையை பிடித்துக் கொண்டிருந்தாலோ

(5) ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குள் மது குடித்து போதையிலிருந்தாலோ உள்ளிட்டவை வழக்கறிஞர்களின் ஒழுங்கீனமான நடத்தைகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் விட்டுப்போனது புனிதமான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உடனடியானதும் அதிகமானதுமான அச்சுறுத்தல் ஏற்படுத்துவது என்பதுதான். இதுதான் ஆர்கே.ஆனந்தின் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அடிப்படையாக இருந்தது. இந்த விதிகள் வழக்கறிஞர் தொழிலின் சுதந்திரத்திற்கு மிகவும் அச்சுறுத்தல் தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகும்.

உதாரணமாக முதல் விதியை எடுத்துக்கொள்வோம்.ஒரு நீதிபதியின் பெயரால் வழக்கறிஞர் பணம் பெறுவதைப் பொருத்தவரை பொதுவாக வழக்கு தொடுப்பவர்கள்தான் அல்லது இடைத்தரகர்கள்தான் இவ்விதமான ஊழலில் ஈடுபடுபவர்கள் நீங்கள் நீதிபதி யார் என்று கூறுங்கள் நான் உத்தரவை பெற்றுத் தருகிறேன் என்று இடைத்தரகர்கள் சாதாரணமாக கூறுவதை பார்க்கலாம். அது போன்ற இடைத்தரகர்கள் அல்லது வழக்கு தொடரும் கிளையன்ட்டுகள்தான் தண்டிக்கப்பட வேண்டும் அன்றி வழக்கறிஞர்கள் அல்ல. எனவே இந்த விதியானது நீதித்துறையில் படிந்திருக்கும் ஊழலை அகற்றுவதற்கு பதிலாக ஊழலில் ஈடுபடும் இடைத்தரகர்கள் அல்லது கிளையன்ட்டுகளை தண்டிப்பதற்கு பதிலாக வழக்கறிஞர்களை துன்புறுத்துவதாக அமைந்துள்ளது.

இரண்டாவது விதியான அதட்டி அடக்குவது என்பது வழக்கறிஞர்களை அமைதியாக்குவதற்கு பயன்படுத்தும் வழக்கமான உத்தியாகும். நீதிபதிகள் தாங்கள் அடக்கப்படுகிறோம் என்று உணரும்பட்சத்தில்(அப்படியும் விளக்கம் அளிக்கலாம்) வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுதந்திரமாக பேச முடியாது. மேலும் இந்த விதியானது அனைத்து வழக்கறிஞர்களுக்கும் சமமாக பொருந்தாது. உதாரணமாக ஆங்கிலம் சரளமாக பேசுபவரும் அதிகமாக பணம் பெறுபவருமான மூத்த வழக்கறிஞர்களுக்கு இது ஒரு பிரச்சினையாக இருக்காது அவர் இத்தோடு உடன்பட்டு போவார். ஆனால் மிக குறைவாக பணம் பெறுபவரும் உள்ளுரில் வசிப்பவரும் ஆங்கிலத்தில் அவ்வளவு பரிச்சயமில்லாத வழக்கறிஞரும் ஒரே தட்டில் சமமாக இருக்க முடியாது இருப்பினும் பின்னவர் ஒரு பொதுநலனை பாதிக்கும் மிக முக்கியமான வழக்கிற்காக வாதாடுபவராக இருக்கலாம்.

மூன்றாவது விதியான ஆதாரமில்லாத அடிப்படையில்லாத குற்றச்சாட்டுகளை எழுதி உயர் நீதிபதிகளுக்கு அனுப்புவதைப்பொருத்தவரை அது வழக்கறிஞரை ஒழுங்குபடுத்துவதை விட நீதிபதியைத்தான் அதிகம் பாதுகாக்கிறது. இந்த விதியின் படி ஒரு வழக்கறிஞருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு நீதிபதி ஊழலில் ஈடுபடுவதாக செய்தி வருவதை அவர் அப்படியே உயர் நீதிபதிக்கு பார்வாட் செய்தால் கூட அவர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படுவார். இது வழக்கறிஞர் சட்டத்தின் பிரிவு 49(1)(சி)க்கு எதிரானதாகும். இப்பிரிவு கூறுகிறது ஒரு வழக்கறிஞர் யாராவது ஒரு நீதிபதி அல்லது உயர் நீதிமன்ற அதிகாரி மிகவும் கடுமையான ஊழலில் ஈடுபடுவது குறித்த புகார் எழும் பட்சத்தில் அதை வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்கக்கூடாது அவர் உடனடியாக அதை தகுந்த அதிகாரிகளிடம் அல்லது உயர்நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது அவரின் உரிமை மற்றும் கடமையாகும். இந்த விதியின்படி நீதித்துறையில் நடைபெறும் ஒரு ஒழுங்கீனமான செயலை அறிவிக்கக் கூடாது என்பதுதான்.

மேலும் இக்கொடூரமான விதிகள் ஐநாவின் வழக்கறிஞர்களின் பங்கு குறித்த அடிப்படையான கொள்கைகளை மீறுகின்றன. இக்கொள்கைகள் வழக்கறிஞர்கள் செயலாற்றுவதற்கான குறைந்த பட்ச உத்தரவாதத்தை வழங்குகிறது. அவை வழக்கறிஞர்கள் நன்னம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் எழுத்துபூர்வ வாதங்கள் அல்லது வாதங்களுக்கு சிவில் மற்றும் குற்றவியல் தண்டனையிலிருந்து விதி விலக்கு வழங்குகிறது.

இன்றைக்கு சமீப காலமாக நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையின்மையானது அதிகரித்து வருகிறது. அதற்கு ஆக்ரோஷத்துடன் பதிலடி கொடுக்கும் பாங்காகவே இச்சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அதாவது வழக்கறிஞர்களே உங்களுக்கு உரிய இடத்தில் வைக்கிறோம், உங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கிறோம் என்பதாக உள்ளது. நீதித்துறையில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் உள்ள ஊழலை களைய வேண்டும். அதற்காக நீதித்துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதை விடுத்து வழக்கறிஞர்களை மட்டும் நீதிமன்றங்களை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் ஒடுக்குவது வழக்கறிஞர்களை மட்டும் ஒடுக்குவதல்ல நமது நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படை ஆதார நெறிமுறைகளை முடக்குவதாகும்.

---நன்றி - தி இந்து (ஆங்கிலம்)- 03--06--2016

என்ஜிஆர்.பிரசாத், டி.நாகசைலா மற்றும் வி.சுரேஷ் - சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள்

தமிழாக்கச் சுருக்கம் - சேது ராமலிங்கம்

Pin It