கி.மு., 1000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மசாஜ் சிகிச்சை இன்று ஐரோப்பிய நாடுகளில் நோய் தீர்க்கும் கலையாக பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது. தசைகளில் இறுக்கத்தை நீக்க, தசை வலியைக் குறைக்க, தசை திசுக்களை மென்மையாக்க உதவும் கலையே மசாஜ் ஆகும்.
பியூட்டி மசாஜ் எனப்படும் அழகு மசாஜ், தெரபிக்மசாஜ் எனும் நோய் சிகிச்சை மசாஜ் என இரண்டு வகையான மசாஜ்கள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளின் இந்த இருவகையான மசாஜ்களுமே பிரபலமடைந்து வருகின்றன. அங்குள்ள ஆஸ்பத்திரிகளில், ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளும் ஒன்றாக மசாஜ் சிகிச்சை முறையும் உள்ளது
கைகளைக் கொண்டு செய்யும் மசாஜ் கை மசாஜ், கருவிகளைப் பயன்படுத்தி செய்யும் அதிர்வு மசாஜ் ஆகிய இருவகை மசாஜ்களுமே ஐரோப்பிய நாடுகளில் வழக்கத்தில் உள்ளன.
தோல் நோய்கள், இதய நோய்கள், குடல் நோய்கள், ஈரல் வீக்க நோய், ஒவ்வாமை நோய் கொண்டோர் ஆகியோருக்கு ஐரோப்பிய நாடுகளில் மசாஜ் பரிந்துரை செய்யப்படுவதில்லை. மேலும் ஆபரேஷனுக்கு 6 மாதங்களுக்குப் பின்னரும் மசாஜ் தவிர்க்கப்படுகிறது.
மசாஜ் அவை பின்பற்றப்படும் நாடுகளைப் பொறுத்து, அக்குபிரஷர் மசாஜ், கியாட்கு மசாஜ், ரிப்லெக்ஸ் லோஜி மசாஜ், ரால்பின் மசாஜ், சுவீடிஸ் மசாஜ் என பலவகைகளில் உள்ளன.
ஐரோப்பிய நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் மசாஜ் என்பது, மென்மையாக தட்டுவது, விரைந்து தட்டுவது, தேய்த்துவிடுவது, அழுத்திவிடுவது, கைகளைத் தட்டுவது, உருட்டிவிடுவது போன்ற திறன்களுக்குள் அடங்குகிறது.
மசாஜ் செய்வதினால் ரத்த ஓட்டம் சீராகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை கூடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. லேக்டிக் அமிலம் ஒரே இடத்தில் குவிவது தடுத்து நிறுத்தப்படுவதால் உடலில் ஏற்படும் சோர்வு அல்லது களைப்பு நீக்கப்படுகிறது.
நன்றி: மீனாட்சி மருத்துவ மலர்
தொடர்புடைய படைப்புகள்
மசாஜ் சிகிச்சை ஆபாசமா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: உடல் கட்டுப்பாடு
More articles by நளன்
- நிலவேம்பு – மருத்துவப் பயன்கள் (30 நவ 2015)
- முக்கிய கண்டுபிடிப்புகளும், கண்டுபிடிப்பாளர்களும் (08 மே 2012)
- இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையர்கள் விவரம் (26 ஏப் 2012)
- புவி அமைப்பின் சில உச்சங்கள் (23 ஏப் 2012)
- மக்களவை சபாநாயகர்களும் அவர்களது பதவிக்காலமும் (17 ஏப் 2012)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.